காந்தி ஜெயந்தியன்று ஓடிடியில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் ‘கா.பெ. ரணசிங்கம்’

Ka Pae Ranasingamதமிழ் சினிமாவின் ராசியான ஜோடியான விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம்.

சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

விருமாண்டி என்பவர் இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தண்ணீர் வியாபாரம் & விவசாயம் உள்ளிட்ட பல போராட்டங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை வெளியிட்டு இருந்தனர்.

க/பெ ரணசிங்கம் படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரான நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டது.

எனவே இதனை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படத்தயாரிப்பாளர் முடிவு செய்து Zeeplex ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியிடவுள்ளனர்.

Vijay Sethupathi’s in Ka Pae Ranasingam to release on October 2 on Zeeplex

Overall Rating : Not available

Related News

Latest Post