முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

முன்னாள் முதல்வர் பயோபிக் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் சித்தராமையா.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்,

இவரது வாழ்க்கையை (BIOPIC) திரைப்படம் எடுக்கவிருக்கின்றனர்.

பான் இந்தியா படபாக உருவாகும் இந்த படத்தை கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவராஜ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இந்த நிலையில் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கத் அமைச்சர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

சித்தராமையா

Vijay Sethupathi will be in Ex CM Siddaramaiahs biopic

கமல் விஜய் அஜித் சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

கமல் விஜய் அஜித் சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல், விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்.

இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என் ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து தேர்தலில் தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றிய எல் எம் எம் என்று எல்லோராலும் பிரியமாக அழைக்க பட்டு வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான கே. முரளிதரன் அவர்கள் இன்று டிசம்பர் 1 கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது.

அவர் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களான அன்பே சிவம், வீரம் வெளஞ்ச மண்ணு, மிஸ்டர்.மெட்ராஸ் கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், வேலுச்சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

கூடுதல் தகவல்..

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.முரளிதரன் 65 இன்று மாரடைப்பால் காலமானார். கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு மனைவியுடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

படிகட்டில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். இவர் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி பெயர் உத்ரா முரளிதரன், மற்றும் கோகுல், ஶ்ரீவத்சன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Lakshmi Movie Makers

Selvaragavan, dhanush #pudhupettai,
Kamal #AnbeSivam,
Vijay #bhagavathi, #priyamudan,
silambarasan #Silambattam,
Karthik #UnnidathilEnnaiKoduthen,
Sarathkumar #veluchami,
Ajithkumar #unnaithedi,
Ahathiyan, Karthik #GokulaththilSeethai
Bharathiraja #KangalaalKaidhusei ,
Fazil #OruNaalOruKanavu,
Jayamravi # #Dass,
Prabhu #Mr.Madras,
Vijayakanth #VeeramVilanjaMannu,
Prabhudeva #UllamKollaiPoguthae,
Suriya #UnnaiNinaithu

இப்படி 27 படங்களை சூப்பர் ஹிட் படமாகவும், பிரமாண்ட படைப்பாகவும் கொடுத்த நிறுவனம் லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ். ரஜினி தவிர பிரபல நடிகர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Producers council condolence message for Producer Muralidharan

படமெடுப்பது முதல் வெற்றி.; நன்றாக ஓடுவது 3வது வெற்றி.; விஜய்ஸ்ரீ சொல்லும் 2வது வெற்றி எது.?

படமெடுப்பது முதல் வெற்றி.; நன்றாக ஓடுவது 3வது வெற்றி.; விஜய்ஸ்ரீ சொல்லும் 2வது வெற்றி எது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பவுடர்’.

இந்த படத்தை தயாரித்து இயக்கி கதையின் நாயகனாக நடித்திருந்தார் விஜய்ஸ்ரீ ஜி.

இவருடன் மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, நிகில் முருகன், அனித்ரா வித்யா, பிரதீப், வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, இளையா, ராணவ், தர்மா, விக்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இயக்குனரும் நடிகருமான விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளதாவது..

“ஓர் படத்தை இயக்கி தயாரிப்பது முதல் வெற்றி. அது ரிலீஸ் செய்வது கடினமாக இருக்கிறது. அதையும் நாம் சரியாக செய்து விட்டால் அது இரண்டாவது வெற்றி.

நாம் நினைத்தது போல தியேட்டர்களும் அதிகரிக்கும் காட்சிகளும் கிடைத்தால் படமும் வெற்றி அடைந்தால் அது தான் மூன்றாவது வெற்றி.

தற்போது எங்களுக்கு மூன்றாவது வெற்றியும் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார் விஜய்ஸ்ரீ.

Vijay Sri Open talk about Powder response

‘லால் சலாம்’ அப்டேட் : ஐஸ்வர்யா பணிகளை பார்வையிடும் ரஜனி – ரஹ்மான்

‘லால் சலாம்’ அப்டேட் : ஐஸ்வர்யா பணிகளை பார்வையிடும் ரஜனி – ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை வேடங்களில் நடிக்கிகின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் பணிகளுக்காக ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lal Salaam update Rajini Rahman Aishwarya still goes viral

#AishwaryaRajinikanth | #Rajinikanth | #ARRahman | #LalSalaam l

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இயக்கிய படத்தை பார்த்து ரசித்த ரஜினி

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இயக்கிய படத்தை பார்த்து ரசித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்து இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

இவர் இசை மட்டுமன்றி தற்போது படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

சமீபத்தில் வெளியான ’99 சாங்ஸ்’ என்ற படத்தை கதை எழுதி தயாரித்தும் இருந்தார்.

தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்ட லீ மஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

இதனைப் பார்த்த பலரும் பாராட்டிய நிலையில் ரஜினிகாந்த் நேற்று விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பார்த்து ரசித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Rajini enjoyed Rahmans directorial movie lemusk

கெட்டப் சேஞ்ச் செய்து ‘பிக் பாஸ்’ சுருதி பெரியசாமியுடன் டூயட் பாடும் சசிகுமார்

கெட்டப் சேஞ்ச் செய்து ‘பிக் பாஸ்’ சுருதி பெரியசாமியுடன் டூயட் பாடும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’.

இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது.

படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

sasikumar next movie Title and first look release

More Articles
Follows