கோலிவுட் ஹீரோக்களை வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

கோலிவுட் ஹீரோக்களை வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் என்றால் கிட்டதட்ட 10 முதல் 15 நடிகர்களை சொல்லலாம்.

இவர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கவே திணறி வருகின்றனர்.

ஆனால் இவர்களின் வரிசையில் உள்ள விஜய்சேதுபதி இந்தாண்டில் மட்டும் இதுவரை 2 படங்களை கொடுத்து விட்டார்.

பேட்ட மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்கள் வெளியான நிலையில் வருகிற ஜீன் 21ஆம் தேதி சிந்துபாதி வெளியாகவுள்ளது.

தற்போது இவரின் கைவசம் மட்டும் “சங்கத் தமிழன், லாபம், மாமனிதன், கடைசி விவசாயி,” ஆகிய படங்கள் உள்ளன.

மேலும் தெலுங்கில் ‘சைரா’ மற்றும் மலையாளத்தில் ‘மார்கோனி மத்தாய்’ என்ற படங்களும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று ‘க/பெ. ரணசிங்கம்’ என்ற புதிய தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு ஐகோர்ட் தடை

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு ஐகோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கமல், மோகன்லால் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி.

இவர் தற்போது நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரில் உருவாகி உள்ளது.

அதில் தமன்னா, பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற ஜூன் 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

அதன் விபரம் வருமாறு…

பாலாஜி குமார் என்பவர் கொலையுதிர் காலம் படத்திற்கான தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறாராம். இந்த தலைப்புக்கான உரிமை இவரிடம் இருக்கிறது.

எனவே படமானது இதே பெயரில் வெளியாக கூடாது என தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் பாலாஜி குமார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. காப்புரிமை சட்டத்தின் படி இப்படத்தின் தலைப்பு பாலாஜி குமாருக்கு சொந்தமாகும்.

ஆகவே, கொலையுதிர்காலம் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடைவிதித்தார்.

மேலும் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி. பிரகாஷ்-யோகிபாபு-அமலா படங்களை வெளியிடும் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’

ஜிவி. பிரகாஷ்-யோகிபாபு-அமலா படங்களை வெளியிடும் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஒரு பக்கம் தயாரிப்பு மற்றொரு பக்கம் படங்களின் ரிலீஸ் உரிமை என அதிரடி காட்டி வருகிறார் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகரன்.

இவர் சுட்டகதை என்ற படத்தை தயாரித்திருந்தார்.

அதன்பின்னர் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை தயாரித்து அதை அண்மையில் வெளியிட்டார்.

பல பிரச்சினைகளை தாண்டி இப்படம் வெளியானது. இதற்கான வெற்றி விழாவையும் கொண்டாடினார்.

இந்த நிலையில் தற்போது அதிரடியாக பல படங்களின் விநியோக உரிமையை பெற்று வருகிறார்.

‘யோகி’ பாபு நடிக்கும் ‘கூர்கா’, அமலாபால் நடிக்கும் ‘அதோ அந்த பறவைப் போல’ மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளார்.

இந்த படங்களின் வெளியீட்டு வேலைகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி , ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதி , ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் க/பெ ரணசிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’

இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் இயக்குனர் செல்வா மூலம் துணை இயக்குனராக திரைப்பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இணை-துணை இயக்குனராக பணியாற்றிய பி விருமாண்டி கதை, திரைகதை, எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இயக்குனர் சமுத்திரகனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் ஆகிய பன்முகப்பட்ட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடிக்க, நடிகர் -இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.

‘அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் ஏற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு பொறுப்புகளை சுதர்ஷன் ஏற்றுக்கொள்ள, கலை லால்குடி என் இளையராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத்தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது

விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு ஜூன் 14 இல் வெளியாகிறது

விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு ஜூன் 14 இல் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)‘பாண்டிய நாடு’ படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களும், கதைகளும் சினிமாவில் அவரது இடத்தை உயர்த்தி வருகின்றன. ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படமும் இதற்கு விதிவிலக்கல்ல. படத்தின் காட்சி விளம்பரங்களில் அவரது பகுதிகள் பார்வையாளர்களிடையே, இதில் அவருக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான பங்களிப்பை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க எது தூண்டுதலாக இருந்தது என கேட்டபோது அவர் கூறியதாவது, “வெளிப்படையாக சொல்வதென்றால், நான் முதலில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன். மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன். எனினும், ராம்பிரகாஷ் ராயப்பா குறைந்தது படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என கோரிக்கை வைத்தபோது, கதையை கேட்க முடிவு செய்தேன். கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்” என்றார்.

டிரெய்லரை பார்த்தவுடன், விக்ராந்தின் கதாபாத்திரத்தில் உள்ள ஒரு மறைமுக தன்மை நம்முள் ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அவர் மேலும் கூறும்போது, “என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் கொண்டிருக்கும். வழக்கமாக, திரில்லர் திரைப்படங்கள் என்பது அனைவரையும் அடுத்து என்ன என யூகிக்க வைக்கும் ஒரு சூத்திரத்தையே கொண்டிருக்கும். அதற்கு மாறாக, சுட்டு பிடிக்க உத்தரவு நேரடியான கதை சொல்லலை கொண்டிருக்கும், ஆனாலும் கதை முழுவதுமே த்ரில்லர் கூறுகள் தக்க வைக்கப்படும்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால், விக்ராந்த் பல ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை பார்க்கும் உற்சாகம் தோன்றி இருக்கிறது. ஆனால் அவர் கூறும்போது, “உண்மையில் உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும் என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இந்த காட்சிகளை படம் பிடித்தது சவாலான விஷயம். படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் படமாக்கப்பட்டவை, அதை செய்து முடிப்பது கடினமாக இருந்தது” என்றார்.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிக்க, ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.

இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் ‘அருவம்’ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது ‘உடல்’ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது” என்றார்.

நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை பற்றி சாய் சேகர் கூறும்போது, “சித்தார்த் மிகச்சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச்சிறப்பாக நடித்து விட்டார். சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோர் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளனர்” என்றார்.

எஸ்.எஸ். தமன் (இசை), என்.கே. எகாம்பரம் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல் (படத்தொகுப்பு), ஜி துரைராஜ் (கலை) மற்றும் ஸ்டண்ட் சில்வா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிகிறார்கள். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.

More Articles
Follows