சத்யா பட கமல்ஹாசன் கெட்அப் ஏன்..? விஜய்சேதுபதி விளக்கம்

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills சினிமாவில் தான் நடிக்கும் கேரக்டருக்காக தன்னையே மாற்றி கொள்ளும் திறமையான நடிகர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் குறிப்பிடும் படியாக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தனக்கென எந்த ஹீரோ இமேஜ்ஜீம் வைத்துக் கொள்ளாமல் வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் பின்னியெடுக்கிறார்.

கடந்த மாதத்தில் சத்யா பட கமல்ஹாசன் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

எனவே கமலின் சத்யா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து தன் சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

அதில்… “தென்மேற்கு பருவக்காற்று கிளைமேக்ஸ் காட்சிக்காக மொட்டை அடித்தேன். அதன் பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது.

எனவே அந்த படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது.

அப்போது எடுத்த படங்களை சமீபத்தில் நானும் சில நண்பர்களுக்கு அனுப்பினேன். அது சமூகவலைதளங்களில் பரவிவிட்டது” என தெரிவித்துள்ளார் மக்கள் செல்வன்.

Vijay Sethupathi reveals about Sathya Kamal get up stills

Overall Rating : Not available

Latest Post