வெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி

DfTrD3PVMAEOhT5நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரைப் போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது விஜய்யுடன் தளபதி 62, தனுஷின் ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெல்வெட் நகரம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

Overall Rating : Not available

Latest Post