விஜய்சேதுபதியின் தெலுங்கு படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள்

விஜய்சேதுபதியின் தெலுங்கு படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள்

vijay sethupathiதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

எனவே அவரது 151வது படமாக உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இது சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

இவர்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் நடிக்கவுள்ள முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கிச்சா சுதீப், ஜெகதி பாபு ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்க, ஒளிப்பதிவாளராக ரவிமர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் இப்படத்தை மிகப்பிரம்மாண்ட முறையில் தயாரிக்கவுள்ளார்.

Vijay sethupathi entering telugu cinema titled SyeRa Narasimha Reddy

chiru 151

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *