பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த வேலம்மாள் குழுமம்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த வேலம்மாள் குழுமம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்

பாராலிம்பிக்கில் மாரியப்பன் வெல்லும் 2-வது பதக்கம் இது.

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

சென்னை திரும்பிய மாரியப்பன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் புதுச்சேரி் துணை நிலை ஆளுநர் தமிழிசையையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில் உயரம் தாண்டுதல் சாம்பியன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ .எம்.வி.எம் வேல்மோகன் அவர்களால் சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மிகப்பெரிய சாதனைக் களத்தில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய மாரியப்பன் தங்கவேலு அவர்களை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.வி.எம் வேல்மோகன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் சந்தித்து சாம்பியனை வாழ்த்தினர்.

மேலும் ஸ்ரீ எம் .வி. எம் வேல்மோகன் அவர்கள் மாரிமுத்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை மற்றும் மாலை அணிவித்தும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் அவர்களை வேலம்மாள் மாணவர்கள் உற்சாகமாகக் கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தி வரவேற்றனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் தேசத்தைப் பெருமைப்படுத்தியமைக்காக மாரியப்பன் தங்கவேலுவை அவர்களுக்கு வேலம்மாள் பள்ளி இத்தகைய சிறப்பான வரவேற்பினை அளித்துப் பாராட்டியது.

Velammal Institution’s warm welcome to Mariyappan

குசேலனை தேடி வந்த கிருஷ்ணன்.; முக ஸ்டாலினுக்கு கவிதையில் நன்றி சொன்ன கஜேந்திரன்

குசேலனை தேடி வந்த கிருஷ்ணன்.; முக ஸ்டாலினுக்கு கவிதையில் நன்றி சொன்ன கஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இயக்குநர் டி.பி.கஜேந்திரன் அவர்களை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பிற்காக முதல்வருக்கு இயக்குநர் டி.பி.கஜேந்திரன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கவிதை வடிவில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது…

முத்துவேலர் பேரனே,
முத்தமிழ் அறிஞரின் மைந்தனே,
கழகத்தின் தளபதியே
தமிழகத்தின் முதல்வரே

உன் நல்லாட்சியில் வாழும்
நான் ஒரு சிறு குடிமகன்
தூரத்திலிருந்து உன் முகம் பார்த்து
துன்பத்தை துரத்தும் சிறியவன்

கல்லூரி காலத்தில்
புத்தகம் பார்த்து படித்ததை விட
உன் முகம் பார்த்து படித்தது ஏராளம்
படங்களை நான் இயக்கினாலும்
என்னை இயக்கியது நீங்களல்லவா?

குசேலனை தேடி வந்த
கிருஷ்ணன் போல
என் வீடு தேடி வந்தாய்
நான் வீடுபேறு அடைந்தேன்

நலம் விசாரித்து, நற்பரிசு தந்து
நானிலம் போற்ற நின்றாய்
நீங்கள் என் நண்பன் என்பதே
நான் பெற்ற செல்வம்

நட்புக்கு இலக்கணம் வகுத்தவனே
வாழும் நாளெல்லாம்
உனை நினைப்பேன்
உனை மறக்க நேரிடின் மரிப்பேன்

அன்புடன்
டி.பி.கஜேந்திரன்.

முதல்வருடன் வந்து
முழு அன்பைத் தந்த
பொய்யாமொழியின் புதல்வருக்கும்,
கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகனுக்கும்
நன்றிகள் கோடி.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்

Director Gajendran thanked Tamil Nadu CM Mk Stalin

ஹீரோயினியாகும் ஷங்கர் மகளை வாழ்த்த வந்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்.?

ஹீரோயினியாகும் ஷங்கர் மகளை வாழ்த்த வந்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,
கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது.

இந்த பூஜையில் நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுகம் அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், திருமதி. ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்க்ரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன், இயக்குனர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், DOP எஸ்.கே.செல்வகுமார், மாஸ்டர் அனல் அரசு, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும்.

அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர்.

முன்னணி இயக்குநரின் மகள் என்பதை தாண்டி தன்னை இப்படத்திற்காக முழு அளவில் தயார் செய்து கொண்டுள்ளார். நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி , எடிட்டிங்: வெங்கட்

தேனியில் செப்டம்பர் 18 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

#விருமன் #Viruman

Pooja of Suriya-Jyotika’s 2D Entertainment to producer Karthi-Muthaiah project titled VIRUMAN held.

KGF வில்லன் கருடா ராமை அழவைத்து அனுப்பிய AV33 Team

KGF வில்லன் கருடா ராமை அழவைத்து அனுப்பிய AV33 Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” .

இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த KGF படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் கருடா ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடித்து வந்தார்.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி பழநி முதலான பகுதிகளில் நடைபெற்றது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் நடிகர் KGF புகழ் கருடா ராம் உடைய காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது.அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் G.அருண்குமார் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இச்செயல்களால் அவர் ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார். KGF படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை.

இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

An overwhelming & an emotional last day on #AV33 sets fr actor @GarudaRam as he completes the shoot.The team Wl certainly miss having u on the sets sir.
#Hari @arunvijayno1 @DrumsticksProd @priya_Bshankar @gvprakash @thondankani @realradikaa @iYogiBabu @0014arun @johnsoncinepro

Garuda Ram completes his shooting portions for AV 33

வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு

வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடும்ப உறவுகளை மையமாக வைத்து, உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.

இவர்களுடன் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா சூசன், பருத்திவீரன் புகழ் சுஜாதா, சிந்துஜா, ஸ்ரீபிரியங்கா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சித்து குமார் இசையமைக்க போரா பரணி ஒளிப்பதிவு செய்ய பாடல்களை சினேகன் எழுதி உள்ளார்.

தற்போது இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் ரிலீஸ் குறித்த அறிவுப்புகள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று நடிகை வெண்பா பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் நந்தா பெரியசாமி.

அவரின் ட்விட்டர் பதிவில்..

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் அஸ்திவாரமான வெண்பா நொடிக்கொரு முறை முக பாவனைகளை மாற்றி அபாரமாக நடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர். வரும் காலங்களில் தமிழ் சினிமா இவருக்கு மிகப்பெரிய சிவப்புக் கம்பளம் விரித்து கொண்டாட என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

https://t.co/a0uA1CApck

நடிகைக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டு பாராட்டு தெரிவிப்பதற்கும் ஒரு பெரிய மனசு வேண்டுமே.. நந்தா பெரியசாமிக்கு பெரிய மனசு தான்

Nandha Periyasamy wishes Venba on her birthday

போலீஸ் அனுமதியளித்தும் ஸ்ரீகாந்த் படத்திற்கு மக்கள் எதிர்ப்பு.; ‘வெத்து வேட்டு’ இயக்குனர் தவிப்பு

போலீஸ் அனுமதியளித்தும் ஸ்ரீகாந்த் படத்திற்கு மக்கள் எதிர்ப்பு.; ‘வெத்து வேட்டு’ இயக்குனர் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெத்து வேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் “தி ஜர்னி ஆஃப் பெட்” என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறும்போது,…

“இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி.

ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம் போக்கில் அணுகினால் அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

குளிரும் மழையும் படப்பிடிப்பு சமயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஒவ்வொரு நாளும் வெறும் 4 அல்லது 5 மணிநேரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.

கொரோனா தாக்கத்திற்கு முன்பு பாதி படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம். ஆனால் முதல் அலை சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்போன சமயத்தில் முறையான காவல்துறை அனுமதி இருந்தாலும் கூட, அந்த பகுதியை சேர்ந்த மக்களிடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது.

கொரோனா குறித்த அச்சத்தில் இருந்த அவர்களிடம், படப்பிடிப்பில் நாங்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கி, ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என கூறினார்.

*நடிகர்கள்* ; ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

நடனம் ; தீனா

சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்

The Journey Of Bed shooting spot updates

#TheJourneyOfBed

@Act_Srikanth @srushtiDange
@actorblackpandi
Directed by #SManibharathi
Produced by #VVijayakumar

#TJOB #ShrinithiProductions

More Articles
Follows