50 வயதிலும் அசத்தும் அஜித்..; தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

50 வயதிலும் அசத்தும் அஜித்..; தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித், எச்.வினோத், போனிகபூர், யுவன் ஆகியோரது வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

காலா பட நாயகி ஹூமா குரோஷி அஜித்துக்கு நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு பைக் ரேஸ் சண்டை காட்சி உள்ளதாம். அதில், டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் தல.

50 வயதில் ஒருவர் இந்த அளவுக்கு சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க முடியுமா? என படக்குழுவினரும் போனிகபூரும் ஆச்சர்யப்பட்டார்களாம்.

இந்த நிலையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி ஒரே நாளில் அதுவும் தல பிறந்தநாளில் அஜித்தின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Valimai movie double treat on Ajith birthday

மீண்டும் வேட்டையாட வரும் கமல்ஹாசன்..; ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..!

மீண்டும் வேட்டையாட வரும் கமல்ஹாசன்..; ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமலின் 232வது படத்திற்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை கமல்ஹாசனே தன் சொந்த பேனரில் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

கடந்த 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன் போலீசாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..

Kamalhassans character in Vikram movie

சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் உடன் ஒரு படம் & வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என சூர்யா கைவசம் படங்கள் உள்ளன.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘வாடிவாசல்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா உடன் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தையும் கர்ணன் படத்தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கர்ணன் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு முன்பே விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Suriya teams up with Karnan movie team

புரோமோசனுக்கு வராமல் பிகு பண்ணிய த்ரிஷா.; ‘பரமபதம்’ புரொடியூசர் எடுத்த நடவடிக்கை

புரோமோசனுக்கு வராமல் பிகு பண்ணிய த்ரிஷா.; ‘பரமபதம்’ புரொடியூசர் எடுத்த நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருஞானம் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இதில் த்ரிஷா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு ரெடியானாலும் ஓரிரு ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

தற்போது ஓடிடி தளத்தில் ஹாட் ஸ்டார் டிஸ்னியில் இப்படம் வெளியாகவுள்ளது.

எனவே அந்த ஓடிடி நிறுவனம், த்ரிஷாவிடம் படத்திற்கு புரமோசன் செய்ய கேட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான திருஞானம் நடிகை திரிஷாவை அணுகியுள்ளார்.

ஆனால் த்ரிஷா மறுத்துவிட்டாராம்.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் அளித்துள்ளார் திருஞானம்.

தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்கவே வேறு வழியில்லாமல் புரமோசனுக்கு வர ஓகே சொல்லிவிட்டாராம் த்ரிஷா..

Trisha refuse to do promotion for Paramabadham Producer took action

சிம்பு & வெங்கட் பிரபுவிற்கு ‘மாநாடு’ ஒரு மைல்கல்.. – சுரேஷ் காமாட்சி

சிம்பு & வெங்கட் பிரபுவிற்கு ‘மாநாடு’ ஒரு மைல்கல்.. – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு’.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்பட ‘மாநாடு’ காட்சிக்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கினார். அப்போது மண் தரையில் படுத்து சிம்பு ஓய்வு எடுத்த போட்டோ ஒன்றும் வைரலானது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதாவது…

‛‛நான் பார்த்த வரைக்கும் மாநாடு படம் சிம்புவிற்கு, வெங்கட்பிரபுவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Maanadu will be mile stone for STR and Venkat Prabu says Suresh Kamatchi

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்பவுமே ஹிட் குடுத்தா எப்படி தனுஷ்.!? – விவேக்

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்பவுமே ஹிட் குடுத்தா எப்படி தனுஷ்.!? – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆடுகளம் & அசுரன் ஆகிய 2 படங்களின் மூலம் 2 தேசிய விருதுகளை பெற்றதால் தனுஷின் படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கொரோனா காலம் என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்காது என சிலர் நினைத்த நிலையில் ‘கர்ணன்’ வசூல் வேட்டையாடி வருகிறான்.

ஏப்ரல் 9 ரிலீஸ் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 10.20 கோடிகளை வசூலித்துள்ளது. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் ஏப்ரல் 10ல் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வசூல் சற்று சரியத் தொடங்கியது.

ஆனால் தமிழக அரசு கூடுதலாக காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதியளித்தது.

இதனையடுத்து 2ம் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது.

மொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ‘கர்ணன்’ படத்தின் வசூல் ரூ.1.45 கோடி எனத் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் விவேக் படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளதாவது….

“எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ! கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் இவர்கள் இருவரும் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் உள்ள காமெடி காட்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Viveks appreciation for Dhanushs Karnan movie

More Articles
Follows