நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

நெட்டிசன்களை லாக் செய்த ‘லாக்கப்’ டீசர்

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் & வாணி போஜன் இருவரும் ஜோடியாக நடிக்க, வெங்கட்பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “லாக்கப்”.

இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் காலா பட புகழ் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

சில தினங்களுக்கு முன் வெளியான “லாக்கப்” படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்
கலை – ஆனந்த் மணி
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Vaibhav and Venkat Prabus Lock Up teaser making records

உதய் பட விழாவில் கமல்-தனுஷ்-விஷாலை கிழித்தெடுத்த கே.ராஜன்

உதய் பட விழாவில் கமல்-தனுஷ்-விஷாலை கிழித்தெடுத்த கே.ராஜன்

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launchஉதய் தயாரித்து நடித்துள்ள படம் உதய். இவர் அறிமுகமாகும் படத்தை தன் பெயரிலேயே எடுத்துள்ளார்.

தமிழ் செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தில் லீமா நாயகியாக நடித்துள்ளார்.

இப்பட இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் ஜாக்குவார் தங்கம், கே. ராஜன், பிஆர்ஓக்கள் விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே. ராஜன் பேசும்போது…

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. ஒருத்தன் நடிகராக இருந்துக் கொண்டு தயாரிப்பாளராக சங்க தலைவராக இருக்கிறார். அவன் அயோக்கிய பய.

அவன் நடித்த அயோக்யா படம் ரூ. 9 கோடி நஷ்டம். ஆக்சன் படம் ரூ. 16 கோடி நஷ்டம். தயாரிப்பாளரை தவிக்க விட்டுள்ளார்.
இந்த உதய் படத்தில் ஹீரோ லிப் கிஸ் அடித்துள்ளார்.

முன்பெல்லாம் எம்ஜிஆர். சிவாஜி, ரஜினி படங்களில் முத்தக் காட்சிகள் இருந்தால் அதன் பின்னர் கிளி முத்தமிடுவது போல காட்டப்படும்.

ரஜினி விரசமில்லாத காட்சிகளில் நடித்தார். அதனால்தான் அவர் படத்தை குடும்பத்துடன் பார்த்தார்கள்.

ஆனால் கமல் அப்படியில்லை. லிப்லாக் நிறையவே நடித்தார். தனுஷ் அதுபோலதான். நாயகியை இழுத்து வைத்து கிஸ் அடிப்பார். அதுபோன்ற காட்சிகளை ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும்.” என பேசினார் கே.ராஜன்.

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launch

Producer K Rajan slams Kamal Vishal Dhanush at Udhay audio launch

ஆரவ் படத்தில் சுருட்டு பிடிக்கும் ராதிகா; சுகாதார துறை நோட்டீஸ்

ஆரவ் படத்தில் சுருட்டு பிடிக்கும் ராதிகா; சுகாதார துறை நோட்டீஸ்

Welfare department notice to Radhika for smoking scene in Market Raja சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாப்பர், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’.

சுரபி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

இப்படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியானது.

இந்த போஸ்டரில் ராதிகா கையில் சுருட்டு வைத்திருந்தார்.

இந்நிலையில், ராதிகாவுக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், ” ‘மார்க்கெட் ராஜா MBBS’ ட்ரெய்லரில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டத்துக்கு எதிரானது.

புகை பிடிக்கும் காட்சியில் நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். படத்தின் போஸ்டரிலும் அது இடம்பெற்றுள்ளது. நீங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டம் 5 மற்றும் 22ம் பிரிவுகளுக்கு எதிரான மீறலாகும்.

ஒரு படத்தின் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பரங்களில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை எந்த வகையிலும் காட்டக்கூடாது.

காட்டினால் அது கோட்பா சட்டத்தின் படி குற்றமாகும். அப்படிக் காட்டப்படுதல் மறைமுகமான விளம்பரமாகக் கருதப்படும்.

இனிமேல் படம் சார்பாக வெளியாகவுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களில் இந்த சட்ட விதிமீறல் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களை சமூக வலைத்தளத்திலிருந்து நிக்க வேண்டும்” என ராதிகாவுக்கு அனுப்பிய நோட்டீஸில் குழந்தைசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Welfare department notice to Radhika for smoking scene in Market Raja

பிரசாத் ஸ்டூடியோவை கண்டித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா

பிரசாத் ஸ்டூடியோவை கண்டித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா

Director Bharathirajas Request Statement to Prasad Studioஇயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை…

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

பாசத்துக்குரிய படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களே….

வணக்கம்…

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் “இசைஞானி இளையராஜா” அவர்களுக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜா அவர்களின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019
(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
பாரதிராஜா

Director Bharathirajas Request Statement to Prasad Studio

சிம்புவின் லிப்லாக் பிறகுதான் நயன்தாராவுக்கு செம ரீச் :-ஜாக்குவார் தங்கம்

சிம்புவின் லிப்லாக் பிறகுதான் நயன்தாராவுக்கு செம ரீச் :-ஜாக்குவார் தங்கம்

Nayanthara became popular after Simbu lip lock says Jaguar Thangamதாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ்.

நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

விழாவில் அலெக்ஸ் பேசும்போது,

‘இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றி. டாக்டராக இருந்தவன் எப்படி நடிகராக மாறினார் என்று கேட்டார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஈர்ப்பு உண்டு.

முதல் நன்றி என் அம்மாவிற்குத் தான். அவரிடம் ஒருபடத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப்படத்தை இரவு பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம்.

அதற்கு காரணம் என் டைரக்‌ஷன் டீம் தான். ஆர்.கே.சுரேஷ் அண்ணா சிறந்த நடிகர். அவரை முதலில் புக் பண்ணிவிட்டுத் தான் கதை எழுதினேன். சனம் ஷெட்டி மிகவும் சவுகரியமான நடிகை. மேலும் படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி’ என்றார்.

நாயகி சனம்ஷெட்டி பேசும்போது, ‘என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தில் வாய்ப்பு தந்த அலெக்ஸுக்கு நன்றி. தயாரிப்பாளர் அனிதா மேடம் அவர்களுக்கும் நன்றி. படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒளிப்பதிவாளர் சாருக்கு நன்றி. சில பிரேம்களில் என்னை ஆச்சர்யமாக பார்க்க வைத்திருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி. அலெக்ஸ் தெளிவான நபர். எல்லாவற்றையும் நன்கு திட்டுமிட்ட வேலை செய்யக்கூடியவர். இந்தப்படம் பெரியளவில் பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்’என்றார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது,

‘சினிமாவில் டிஸ்டிப்யூட்டராக வந்து தயாரிப்பாளராக மாறி, இயக்குநர் பாலா மூலம் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன்.

படத்தின் தயாரிப்பாளர் அனிதா மேடத்திற்காகவே நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அலெக்ஸ் மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன்.

மனோஜ் திறமையான கேமராமேன். அவர் தல அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஹீரோயின் சனம்ஷெட்டி பப்ளி கேர்ள். இந்தப்படத்தில் புதிதாக ஒரு விசயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார். முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை.

முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்லக் கூடாது. நிச்சயம் படம் பெரிதாக பேசப்படும். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடைய செய்கிறது.

எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன்.

ஆனால், அப்படி நடக்கவில்லை. படங்கள் எடுப்பவர்கள் கவனித்து எடுங்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் சரியாக இயங்கினால்தான் திரைத்துறை நன்றாக இருக்க முடியும்” என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

‘இந்தப்படத்தை 24 நாட்களில் எடுத்தது மிகப்பெரிய சாதனை. இப்படத்தின் டிரைலரை ஒரேநாளில் கட் செய்திருக்கிறார்கள்.

இந்த டீமிற்கு அதற்காகவே பெரிய வாழ்த்துகள். தாயின் அருள் என்பது மிகப்பெரிய விசயம். அந்த அருள் அலெக்ஸுக்கு கிடைத்துள்ளது. படத்தில் கேமரா ஆங்கிள்ஸ் எல்லாம் ஆச்சர்யப்படுத்தியது. முத்தக்காட்சிகள் எல்லாம் இப்ப சாதாரணமாகி விட்டது.

இப்படத்தில் லிப்லாக் காட்சியில் சனம்ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். சிம்புகூட நயன்தாரா லிப்லாக் சீனில் நடித்த பிறகுதான் பெரிய அளவில் ரீச் ஆனார். அதனால் முத்தக்காட்சிகள் தவறில்லை.

குடிப்பது போல காட்சிகள் வைப்பது தான் தப்பு. தயவுசெய்து பெரிய ஹீரோக்கள் எல்லாம் குடிப்பது போல் நடிக்காதீர்கள். இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்’ என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,

‘இப்படத்தில் அலெக்ஸுக்கு நன்றி சொல்லணும். அவர் நினைத்தால் அவர் தயாரிக்கும் இந்தப்படத்தில் இயக்குநராக அவர் பெயரை மட்டுமே போட்டிருக்கலாம்.

ஆனால் எங்கள் பாஃப்டா டீமில் இருந்து வந்த இளைமைதாஸ் அவர்களையும் இயக்குநராக இணைத்துள்ளார். அலெக்ஸுக்கு அந்த மனது உள்ளது. தாயின் அருள் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.

அது அலெக்ஸுக்கு கிடைத்துள்ளது. இப்படம் பக்கா க்ரைம் திரில்லர் படமாக வந்திருக்கும் என்ற நம்புகிறேன். ஆர்.கே சுரேஷ் இப்படி ஒரு டீமிற்கு சப்போர்ட் பண்ணதுக்கு நன்றி” என்றார்.

Nayanthara became popular after Simbu lip lock says Jaguar Thangam

Ethir vinaiyaatru audio launch

டிசம்பர் 13ல் இந்திய மொழிகளில் வெளியாகும் Jumanji : The Next Level

டிசம்பர் 13ல் இந்திய மொழிகளில் வெளியாகும் Jumanji : The Next Level

Jumanji The Next Level will be released on 13th Dec 2019 WWJUMANJI: THE NEXT LEVEL
(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)

தயாரிப்பு: Sony Pictures
வெளியீடு: December 13th 2019

ஜுமான்ஜி என்கிற இந்தக் கற்பனை கதைக்களத்தின் அடிப்படை, ஒரு விளையாட்டினைப் பற்றியது. ஆட்டத்தின் போது காய் நகர்வுகளுக்கேற்ப கதைக்களமும் பல வித்தியாசமான விசித்திரமான நிகழ்வுகளுடன் நகரும்.

Chris Van Allsburg என்பவர் எழுதிய இந்தக் கதைக்களத்தின் அடித்தளமே மந்திரமும் மாயாஜாலமுமே! Chris எழுதிய 2 புத்தகங்களின் அடிப்படையில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

Jumanji (1995), Zathura: A Space Adventure (2005) மற்றும் Jumanji: Welcome to the Jungle (2017). அம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.

Jumanji, 1996 முதல் 1999 வரை ஒரு தொலைக்காட்சித் தொடரகவும் ஒளிபரப்பப்பட்டது! இப்போது இப்படத் தொடரின் நான்காவது தவணையாக, Jumanji: The Next Level உருவாக்கப்பட்டுள்ளது!

2017 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்றிருந்த அந்த 4 இளம் மாணவர்கள், அடுத்த கட்ட அதிரடி ஆக்ஷனுக்கு தற்சமயம் தயார் நிலைக்கு வந்து விட்டார்கள்!

ஸ்பென்சரின் (அலெக் உல்ஃப்) நகர்வொன்றில், Jumanji விளையாட்டு புத்துணர்வுடன் துளிர் விட, இதர நண்பர்கள், பெத்தானி (மேடிசன் இஸ்மேன்), ஃப்ரிட்ஜ் (செர்டாருஸ் ப்ளெயின்) மற்றும் மார்த்தா (மார்கன் டர்னர்) ஆகியோர் ஸ்பென்சர் காணாமல் போய்விட்டதை உணர, ஸ்பென்சரின் தாத்தா எடி (டானி டி வோடோ) மற்றும் அவரது நண்பர் மிலோ வாக்கர் (டானி க்ளோவர்) ஆகிய இருவரும்கூட களத்தில் இறங்குகிறார்கள்!

விளையாட்டின் புதிய பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அனைவரும் தத்தம் நகர்வுகளை நகர்த்திவிட முற்படுகிறார்கள். ஸ்பென்சரை மீட்டு வருவதில்லாமல், அவ்விளையாட்டிலிருந்து முழுமையாக விலகுவதே அவர்கள் அனைவரது இலக்கு! Dwayne Johnson (The Rock), புதைபொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றுகிறார். Jack Blackக்கும் முக்கியதொரு வேடத்தில் தோன்றுகிறார்.

Jake Kasdan படத்தை இயக்கியுள்ளார்.

Henry Jackman இசையமைத்துள்ளார்.

Gyula Pados படத்தின் ஒளிப்பதிவாளர்.

படத்தொகுப்பு – Steve Edwards.

Jumanji The Next Level will be released on 13th Dec 2019 WW

More Articles
Follows