வேஸ்ட் பேப்பர் சேனலில் வேஸ்ட் நியூஸ்.; மனோபாலா சிங்கமுத்து மீது வடிவேலு புகார்

வேஸ்ட் பேப்பர் சேனலில் வேஸ்ட் நியூஸ்.; மனோபாலா சிங்கமுத்து மீது வடிவேலு புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano balaதமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி போல வடிவேலு சிங்கமுத்து காமெடி கூட்டணி அமைந்திருந்தது.

இவர்கள் இணைந்து செய்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இவர்கள் இடையே ஏற்பட்ட நிலம் தகராறு பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. எனவே படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

சமீபத்தில் நடிகர் மனோபாலா ஒரு இணையத்தள பேட்டியில் நடிகர்கள் வடிவேலு மற்றும் சிங்கமுத்து பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அதில்… “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.

நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”

என அந்த கடிதத்தில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதல்வர்

பெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyசென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்புகள் அமைய உள்ளது.

ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இசை மேதை நல்லப்பசுவாமி நினைவுத் தூணையும் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’.!

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Desiya Thalaivarபசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றி படங்களை தந்தவர்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர்கள் எழுதிய “முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்” என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது.

முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.

ரஜினி-தனுஷை அடுத்து விக்ரமை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி-தனுஷை அடுத்து விக்ரமை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan 60 Karthik Subbaraj to team up with Vikram ஜிகர்தண்டா, பீட்சா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ்.

இவர் ரஜினி ரசிகர் என்பதை விட ரஜினி வெறியர் என்றே தன்னை அழைத்துக் கொள்வார்.

இதனையடுத்து ரஜினியை பேட்ட படத்திற்காக இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இப்படம் 1980களில் பார்த்த ரஜினியை மீண்டும் கொண்டு வந்திருந்தார்.

தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அடுத்த படத்தில் விக்ரம் உடன் இணையவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.

அனிருத் அல்லது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chiyaan 60 Karthik Subbaraj to team up with Vikram

‘அவள் அப்படித்தான்‘ ரீமேக்: ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதி; ரஜினி-கமல் யார்?

‘அவள் அப்படித்தான்‘ ரீமேக்: ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதி; ரஜினி-கமல் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aval Appadithan remake Simbu and Dulquer team up for first timeகமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் முக்கியமான படம் ‘அவள் அப்படித்தான்’.

ருத்ரய்யா இயக்கத்தில் உருவான இந்த படம் 1978ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ஸ்ரீப்ரியா கதையின் நாயகியாக நடித்திருந்தார். ரஜினி விளம்பர நிறுவனத்தின் ஓனராகவும் அவர் ஆபிசில் கமலும் ஸ்ரீப்ரியாவும் வேலை செய்வதாகவும் கதை இருக்கும்.

டாக்குமெண்ட்ரி பட இயக்குனராக கமல் நடித்திருப்பார்.

இப்படத்தில் இடம் பெற்ற உறவுகள் தொடர்கதை பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

தமிழக அரசின் விருது இந்த படத்திற்கு கிடைத்தது. ஸ்ரீப்ரியாவும் விருது பெற்றார்.

இந்த நிலையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

இவர் அதர்வா, சமந்தா இணைந்த பாணா காத்தாடி படத்தை இயக்கியவர்.

தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவரின் திட்டப்படி ரஜினியாக சிம்புவையும், கமல்லாக துல்கரையும் ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க விரும்புகிறாராம்.

இவர்கள் சம்மதித்தால் படம் விரைவில் தொடங்கும் என நம்பலாம்.

Aval Appadithan remake Simbu and Dulquer team up for first time

ஜோதிகாவுக்கு பாராட்டு; ‘டா’ போட்டு பேசிய நெட்டிசனுக்கு சரத்குமார் நெத்தியடி

ஜோதிகாவுக்கு பாராட்டு; ‘டா’ போட்டு பேசிய நெட்டிசனுக்கு சரத்குமார் நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar praises Ponmagal Vandhal and angry reply to fanசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் பெட்ரிக் இயக்கிய படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளியாக இருந்த காரணத்தினால் இதனை அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்தார் சூர்யா.

இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தார் நடிகர் சரத்குமார்.

Excellent film, need of the hour message, par excellence performance by Jyothika , well engineered by Fredrick, kudos to the entire team #PonmagalVandhaal #Jyothika #SuryaSivakumar

இவ்வாறாக அவர் பாராட்டியிருந்தார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர்…

யா௫க்கு வாழ்த்து சொல்றிங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க..அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா என பதிவிட்டு இருந்தார்.

கண்டிப்பாக சகோதரா என சரத்குமார் அவருக்கு பதிலளித்திருந்தார்.

அதன்பின்னர் மற்றொருவர்

Suriya is there in Twitter, Tag panni podu da என ஒருமையில் பேசியிருந்தார்.

அதற்கு… டீவீட்டை ஓழுங்காக பாத்தியாடா… என சரத்குமார் நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sarathkumar praises Ponmagal Vandhal and angry reply to fan

https://twitter.com/realsarathkumar/status/1266044258705797120

More Articles
Follows