தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகுமார், விஷால் உள்ளிட்ட நடிகர்களும் பிரபல இயக்குனர்களும் கலந்துக் கொண்டனர்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும் கலந்து கொண்டனர்.
ஆனால், ரசிகர்களின் இன்றைய பேவரைட் நாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஒரு மாத காலமாக எந்தவொரு தமிழ் படத்தின் சூட்டிங்கும் நடைபெறவில்லை.
அப்படியிருந்தும் தமிழகத்திற்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகைகள் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Top heroines not participated in Nadigar Sangam protest for Cauvery and Sterlite issue