நேரு ஸ்டேடியத்தை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவு

nehru stadium chennaiதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.

நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

தமிழகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,510 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 கடந்துள்ளது.

இந்த நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post