சானிடைசர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம்

N 95 maskகொரோனா வைரஸ் 2வது அலை பரவல் காரணமாக அதன் தடுப்பு பொருட்கள் தேவை அதிகமாகியுள்ளது.

அதாவது சானிடைசர், மாஸ்க், ஆக்சிஜன் மாஸ்க், பிபிஇ கிட் உடை, பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி…

இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3,

மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50

ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54

பிபிஇ கிட் உடை – ரூ.273

கிருமிநாசினி 200 மி.லி – ரூ.110

N95 முகக் கவசம் – ரூ.22

கையுறை – ரூ.15

ரத்தத்தில் ஆக்சிஜனை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் – ரூ. 1,500

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரான் விலை ரூ.12

சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை விலை ரூ.65

TN govt declares 15 items as COVID-19 essentials, fixes price

Overall Rating : Not available

Latest Post