ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை; வேதா இல்லம் நினைவிடமாகும்… முதல்வர் அறிவிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை; வேதா இல்லம் நினைவிடமாகும்… முதல்வர் அறிவிப்பு

cm jayalalithaமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அவரது நினைவிடமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்.

மேலும் அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்’என அறிவித்துள்ளார்.

இதனிடையில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் அறிவித்து இருந்த்து குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

TN CM announced there will be Inquiry Commission for Jayalalitha death and Memorial for Vedha illam

sasikala ops and eps admk

TN CM statement

ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணையும் நயன்தாரா

ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணையும் நயன்தாரா

chiranjeevi amitap bachhanகைதி எண் 150வது படத்தை தொடர்ந்து உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற தன் 151வது படத்தில் நடிக்கவிருக்கிறார் சிரஞ்சீவி.

இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறாராம்.

இதில் சிரஞ்சீவி மகன் ராம்சரணும் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி சிரஞ்சீவி பிறந்தநாள் அன்று வெளியிடவிருக்கிறார்களாம்.

Amitabh Bachchan and Nayanthara teams up with Chiranjeevi in Uyyalawada Narasimha Reddy

uyyalawada narasimha reddy

தெறி சாதனையை தெறிக்கவிட்டு வென்றது விவேகம்

தெறி சாதனையை தெறிக்கவிட்டு வென்றது விவேகம்

ajith vijay theri vivegamசிவா இயக்கி அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் இன்று தொடங்கும் 12.01 மணிக்கு ரிலீஸ் ஆனது.

இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதால் யுடிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்து வருகிறது.

தற்போது 12 மணி நேரத்தில் கடந்தாண்டு வெளியான விஜய் நடித்த தெறி பட ட்ரெய்லரின் சாதனையை முறியடித்துள்ளது.

அதாவது 12 மணி நேரத்துக்குள் சுமார் 36 லட்சம் பார்வையாளர்களையும் 3 லட்சத்திற்கும் மேலான லைக்ஸையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vivegam trailer beat Theri life time record in 24 hours

அஜித்தின் காதல்+ஆக்சன் பன்ச்; விவேகம் டிரைலர் விமர்சனம்

அஜித்தின் காதல்+ஆக்சன் பன்ச்; விவேகம் டிரைலர் விமர்சனம்

ajith vivegam trailerகடந்த 2015ஆம் ஆண்டு அஜித்தின் வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியானது.

இதன் டீசர் மட்டுமே அப்போது வெளியானது. ஆனால் டிரைலர் வெளியாகவில்லை.

எனவே தற்போது உருவாகியுள்ள விவேகம் படத்திற்கு டிரைலர் வெளியாகுமா? என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

அதன்படி இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி சரியாக 12.01 மணிக்கு விவேகம் டிரைலர் வெளியானது.

இந்த டிரைலர் 2 நிமிடம் 24 நொடிகள் ஓடுகிறது.

இது முழுக்க முழுக்க ஆக்சன் படைப்பாக இருந்தாலும், படத்தில் அஜித் மற்றும் காஜல் அகர்வால் இடையே ரொமான்ஸக்கும் பஞ்சமில்லை.

காதல் மற்றும் ஆக்சன் என இரண்டிலும் அஜித் தன் பன்ச் டயலாக்குகளை தெறிக்கவிட்டுள்ளார்.

டிரைலர் ஆரம்பிக்கும்போது…

Who are you? என்ற குரல் கேட்கிறது.

நான் யாருங்கிறது எப்போதுமே நான் முடிவு பண்றதுல்ல. எதிர்ல நிக்றவங்கதான் முடிவு பன்னுவாங்க, அவங்களுக்கு நான் நண்பனா? இல்ல எதிரியான்னு…?
ஒரு சீரியஸ் காட்சியில் நடிகர் கருணாகரன் எனக்கு என்ன சொல்றது தெரியல சார்? என்று அஜித்திடம் கேட்கும்போது ஒரு காஃபி சொல்லுங்க என்று கூலாக கூறி செல்கிறார் அஜித்.

அஜித் கூடவே விவேக் ஓபராய் மற்றும் அக்ஷராஹாசன் வருகின்றனர்.

இதனையடுத்து காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் காட்சியில்…

உன் கூட இருக்கிறது சந்தோஷம்ங்கிறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க. என்கிறார் அஜித்.

அதற்கு காஜல் அகர்வால் பதிலளிக்கும்போது…

என் லைப்ல இதவிட பெரிய உண்மைய இதுவரை சொன்னதும் கிடையாது. இனிமே சொல்லவும் முடியாது என்கிறார்.

இதன்பின்னர் அஜித்தை பார்த்து விவேக் ஓபராய் கூறும்போது…

போராடாம அவன் போகவும் மாட்டான். சாகவும் மாட்டான். பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க அவன் எழுந்து வர்றான்.

இறுதியாக You will see my rage என்ற பன்ச் டயலாக்கோடு டிரைலர் முடிகிறது.

அஜித் ரசிகர்களை மனதில் வைத்து இயக்குனர் சிவா மற்றும் அனிருத் இருவரும் இந்த டிரைலரை செதுக்கியுள்ளனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டிரைலர் டன் கணக்கில் எகிற வைத்துள்ளது.

நிச்சயம் ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Vivegam Review Vivegam Trailer Review

ajith romance

கர்ஜிக்கும் காலா; வைரலாகும் ரஜினியின் புதிய படம்

கர்ஜிக்கும் காலா; வைரலாகும் ரஜினியின் புதிய படம்

kaala new posterகபாலி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி-ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன் கூட்டணி காலா படத்திற்காக இணைந்துள்ளது.

தனுஷ் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது சென்னையில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமுமூகவலைத்தளங்களில் வெளியாக்கி வைரலாகி வருகிறது.

இதில் ரஜினிகாந்த் சிங்கத்தை போன்று கர்ஜிக்கிறார்.

இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

In Kaala new poster Rajini roaring like Lion

kaala new look super star

விஐபி2 மாஸ் ஹிட்டு; தனுஷின் அடுத்த டார்கெட் அஜித்

விஐபி2 மாஸ் ஹிட்டு; தனுஷின் அடுத்த டார்கெட் அஜித்

VIP2 Telugu version clash with Vivekam release on 24th August 2017கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கிய விஐபி2 படம் வெளியானது.

தனுஷ் தயாரித்து நடித்திருந்த இப்படத்தில் கஜோல், அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா, ரைசா, செல்முருகன், ஜெயச்சந்திரன், பிஆர்ஓ ரியாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டான் இசையமைத்திருந்த இப்படம் நல்ல வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் இதன் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பை வெளியிட இருந்தனர்.

ஆனால் தற்போது தெலுங்கு பதிப்பை வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித்தின் விவேகம் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதால் இந்த இரு படங்களுக்கும் மோதல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 Telugu version clash with Vivekam release on 24th August 2017

vip2 august 25

More Articles
Follows