ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்க அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை…; திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி

ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்க அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை…; திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Distributor-Tirupur-Subramaniamசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் நாளை (நவம்பர் 5) வெளியாகிறது.

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இதில் விஜய்யை முருகதாஸ் இயக்கியுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஒரு சினிமா டிக்கெட்டின் விலை ரூ.1000-க்கும் மேல் விற்பனை செய்கிறார்கள்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:

நான் சரியான விலையில் தான் டிக்கெட் விற்கிறேன். மற்ற திரையரங்குகளில் விற்கிறார்கள் என்றால் விற்கும் திரையரங்கு உரிமையாளரைத் தான் கேட்க வேண்டும்.

அரசாங்கமும், நாங்களும் அதிக விலைக்கு டிக்கெட் விற்காதீர்கள் என்று சொல்கிறோம். இது தொடர்பாக பேசி பேசி டயர்ட்டாகி விட்டேன்.

அதிக விலைக்கு விற்றால் தான் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் யாரும் இதுபற்றி வாயே திறப்பதில்லை.

என் திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் விற்கிறோம்.

பெரிய விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். அவர்களைக் குறைச் சொல்ல முடியாது. இதில் திருந்த வேண்டியவர்கள் நடிகர்கள் தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

கதையை திருடி கள்ள ஓட்டு படம்..; சர்கார் மீது தமிழிசை கடும் தாக்கு

கதையை திருடி கள்ள ஓட்டு படம்..; சர்கார் மீது தமிழிசை கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilisaiவிஜய் நடித்து கடந்த வருடம் வெளியான மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது பாஜக. தான்.

தற்போதும் அது தொடரும் எனத் தெரிகிறது.

நாளை வெளியாகவுள்ள சர்கார் படம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

இன்றைக்கு திரையுலகில், கதைத் திருட்டு, கருத்திருட்டு என்பதெல்லாம் அதிகரித்துவிட்டது.

கள்ளக் கதையைக் கொண்டு, கள்ள ஓட்டு பற்றி படமெடுக்கிறார்கள்.

முதல்வராகும் கனவில் சினிமாவில் நடிப்பவர்கள், சினிமாவில் வேண்டுமானால் முதல்வராக நடிக்கலாம். திரையில் வேண்டுமானால் ஆட்சி நடத்தலாம்

சர்கார் என்று பெயர் வைத்துக்கொண்டு, சினிமா சர்காரையே சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள், உண்மையான சர்காரை எப்படி நிர்வகிப்பார்கள்? என சர்காரை கடுமையாக சாடியுள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

நாளை கமல்-விக்ரம் இணைந்து தரும் தீபாவளி விருந்து

நாளை கமல்-விக்ரம் இணைந்து தரும் தீபாவளி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal-and-vikramகமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா அவர்கள் தூங்காவனம் படத்தை இயக்கினார்.

இப்படத்தை கமலே தயாரித்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது மீண்டும் கமல் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கிறார்.

இதில் கமலின் 2வது மகள் அக்சராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது ராஜ்கமல் நிறுவனத்தின் 45 படைப்பாகவும் விக்ரமின் 56வது படமாகவும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை நவம்பர் 6ஆம் தேதி வெளியிட உள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நட்பே துணை என சுந்தர் சி.யுடன் களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதி

நட்பே துணை என சுந்தர் சி.யுடன் களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip-hop-tamizha-and-sundar-c‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார்.

பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார்.

இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது.

நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது.

அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘நட்பே துணை’ இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.

இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ், நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.

ஜோதிகா நடிக்கும் படத்தில் சின்ன வேடத்திலும் நடிப்பேன்.. : விதார்த்

ஜோதிகா நடிக்கும் படத்தில் சின்ன வேடத்திலும் நடிப்பேன்.. : விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidharth-and-jyothikaதனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் “காற்றின் மொழி”.

இப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.

கலை இயக்குநர் கதிர் பேசும்போது:-

தொடர்ந்து ராதாமோகனிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அவர் கூறியபோது குறுகிய காலத்தில் படத்தை முடிப்பதற்கு எல்லோரும் உதவி புரிந்தார்கள்.

எழுத்தாளர் பார்த்திபன் பேசும்போது:-

‘மொழி’ படம் பார்த்துவிட்டு ராதாமோகனின் ரசிகனாக பேசினேன். அவருடைய படத்திற்கு இப்படத்திற்கு எழுத வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது. முழுக்க முழுக்க ஜோதிகாவுடைய ஆதிக்கம் தான். நடிப்பில் ராக்ஷஸி போல நடித்திருந்தார். இவ்வாறு எழுத்தாளர் பார்த்திபன் பேசினார்.

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா பேசும்போது:-

இந்த படம் நான் பணியாற்றிய படங்களிலேயே இந்த படம் தான் அமைதியாக பணியாற்றினேன். ஒவ்வொரு படம் பணியாற்றும்போதும் பயத்தோடுதான் பணியாற்றுவோம். விஜயலட்சுமி கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். லட்சுமி என்ன உடை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்.

நடன இயக்குனர் விஜி சதீஷ் பேசும்போது:-

லட்சுமி மஞ்சு இருந்தாலே அந்த சூழ்நிலையே கலகலப்பாக இருக்கும். ராதாமோகனுடன் இரண்டாவது படம். ஜோ வுக்கு செனோரீட்டா பாடலுக்கு பிறகு நான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ராதாமோகன் ஜோவுடன் என்று கூறியவுடனேயே அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஜோதிகா மிகவும் திறமையானவர். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே 4 மடங்கு நடிக்கக் கூடியவர் என்றார்.

விக்ரம் குமார் பேசும்போது:-

ராதாமோகன் இயக்கம், ஜோதிகா நடிக்கிறார் என்று கூறியவுடனேயே நான் எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டோம் என்றார்.

மனோபாலா பேசும்போது:-

நானும் எம்.எஸ்.பாஸ்கரும் செட் தோசை மாதிரி. படம் முழுக்க ஜோதிகாவை சுற்றியே நடக்கும். ஜோதிகாவுடன் நடிக்கம்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், பத்து மடங்கு பாவனை காட்டுவார்.

மகேஷ் பேசும்போது:-

எல்லோருடைய கனவு படம். எந்த தடையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. ராதாமோகன் படத்திலேயே மொழி தான் எனக்கு மிகவும் பிடித்த படம். திரைக்கதை நன்றாக வந்திருக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது:-

ராதாமோகனின் அனைத்துப் படங்களிலும் நான் இருப்பேன். அப்படி இல்லாமல் போனால் அதற்கு நான் தான் காரணம். வேறு எங்காவது மாட்டிக் கொண்டிருப்பேன். எனக்கென்று ஒரு கதாபாத்திரத்தைக் கொடுப்பது வரப்பிரசாதம்.

மொழிக்கு பிறகு இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் எனக்கு சொந்த தங்கை மாதிரி. அவர் கூறி எனக்கு ஒரு படம் கிடைத்தது. அன்பும், பாசமும் உள்ள ஒரு நண்பர் குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்றார்.

குமரவேல் பேசும்போது:-

இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் உடன் நான் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பெரும்பாலான காட்சிகள் ஜோதிகா மற்றும் லட்சுமி மஞ்சுவுடன் தான் இருந்தது.

இருவரும் எளிமையாகவும், சக நடிகரை மதித்து நடந்தார்கள். எனக்கு நடனம் வராது என்று கூறினேன். அதற்கு நடன இயக்குநர் நீங்கள் ஆட வேண்டாம். நடந்தது வந்தால் போதும் என்று சொன்னார். காட்சியைப் பார்த்தபோது பொருத்தமாக இருந்தது என்றார் என்றார்.

ரூபன் பேசும்போது:-

என் சகோதரர் படத்தைப் பர்த்து விட்டு ரசிக்கும்படியாக இருக்கிறது என்றார்.

லட்சுமி மஞ்சு பேசும்போது:-

இந்த படத்தில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால் என்னால் கூற முடியாது. நடித்த அனுபவமே இல்லாமல் முழுக்க முழுக்க வேடிக்கையாகத் தான் இருந்தது. ஜோதிகாவின் மிகப் பெரிய ரசிகை.

இருப்பினும், ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இப்படத்தில் என்னைத் தவிர யாரும் நன்றாக இருந்திருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் நன்றாக அமைந்திருக்கும். தமிழ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வளர்ந்தது இங்கு தான் என்றார்.

விதார்த் பேசும்போது:-

தனஞ்செயன் என்னிடம் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது நடிக்கிறீர்களா? என்று கேட்டார்.

ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு கனவோடு இருந்தேன். அதேபோல என் அம்மாவிற்கும், மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால் உடனே ஒப்புக் கொண்டேன்.

ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போதே ஏன் நான் ஒப்புக் கொண்டேன் என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றார்.

மேலும், குமரவேலிடம் ராதாமோகனைப் பற்றி கேட்டேன், அவர் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா? அப்படியெல்லாம் கிடையாது என்று கூறினார். இருந்தும் கொஞ்சம் பயத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன்.

அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால் முதல் ‘டேக்’ கிலேயே சரியாக வந்தது.

அதேபோல படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படி பழகுவார்? என்று சந்தேகம் இருந்தது. ஆனால், அவரோ என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாக பழகினார்.

இந்த படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால் அதற்கு ‘ஜோ’ தான் காரணம். ஜோதிகாவிற்கு இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும்.

அடுத்த படத்தில் சிறிய வேடமென்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறேன் என்றார்.

தனஞ்செயன் பேசும்போது:-

BOFTA -வில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக கூறுவேன். ஏனென்றால், இயக்குநர், நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தயாராக இருந்தால்தான் ஒரு படம் இவ்வளவு வேகமாகவும், இடைவெளி இல்லாமலும் குறுகிய காலத்தில் உருவாக முடியும். அதிலும் ஜோதிகாவிடம் நடிக்க கேட்கும்போதே அவர் உடனே ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்புக்கான தேதிகளையும் தாராளமாக கொடுத்தார். அதேபோல அனைத்துக் காட்சிகளையும் ஒரே ‘டேக்’கில் நடித்து முடித்துவிட்டார்.

மேலும், இந்த படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டதல்ல. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றார்.

தீபாவளிக்கு தளபதியுடன் தல ரசிகர் மோதல்; பொங்கலுக்கு அஜித்துடன் விஜய் ரசிகர் மோதல்

தீபாவளிக்கு தளபதியுடன் தல ரசிகர் மோதல்; பொங்கலுக்கு அஜித்துடன் விஜய் ரசிகர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay-and-ajithநாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது.

இதற்கு போட்டியாக அஜித் ரசிகராக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி திரைப்படமும் வெளியாகிறது.

இத்துடன் விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வெளியாகிறது.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாகிறது.

அதற்கு போட்டியாக விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர்.

இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். மாலை டீசர் வெளியாகவுள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார்.

More Articles
Follows