இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய்சேதுபதி..; திருமுருகன் காந்தி பாராட்டு

இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய்சேதுபதி..; திருமுருகன் காந்தி பாராட்டு

vijay sethupathi and thirumurugan gandhiமெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி பேசுகையில்…

“இந்த வெற்றிவிழாவிற்குஇயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் 96படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96.படம் அற்புதமாக இருந்தது.ஆனால்இந்த படத்தில் இன்னும் சில விசயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.

காதல் என்பது ஒரு அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்.?எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம்.

இது போன்ற தகவல்கள் ஊடகங்களில்அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் 96 படம் வெளியாகியிருக்கிறது. காதல் என்பது மனிதர்களுக்குள் மட்டுமே வரக்கூடிய உணர்வு அல்ல,இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் அடிப்படை குணாதிசயம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப்போல் காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது.காதல்என்பது காலத்தின்இனிமை, காதல் என்பது நேசத்துடன்கூடிய ஒரு உணர்வு.

படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.இதுவும்நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார்.

அதை படத்தின் முதல் பாடலிலேயேதெளிவாக சொல்கிறார் இயக்குநர். காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.

அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இதைத்தான்ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார்.

இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ, எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார்.

இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன்.

இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவே இருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார்.

அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்கள் தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.

திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது,

‘இரும்பு பிசிறாக நீளும்

நானிருக்க

நீ செல்லும் ரயில்’ என்ற அறிவுமதியின் கவிதைத்தான் நினைவுக்கு வருகிறது.

‘மல்லிகையின் வாசம்

மழையின் நேசம்

எதுவும் அதுவாக இல்லை.

எல்லாம் அவளின் நினைவுகளாகவே இருக்கிறது.”என்ற என்னுடைய நண்பரின் கவிதையும் நினைவிற்கு வருகிறது.

இன்றைய தேதியில் செல்போன் இருப்பதால் நாம் நினைத்ததை உடனடியாக பேசிவிடுகிறோம். பிடித்ததையும், பேசிவிடுகிறோம். பிடிக்காததையும் பேசிவிடுகிறோம்.

ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் நாம் நினைத்ததை நேரடியாக சென்று சொல்லிய அல்லது சொல்ல தவறிய அனுபவத்தை இந்த படம் அற்புதமாக பேசியிருக்கிறது.

இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான். நாங்கள் மனிதர்களை காதலிக்கிறோம். இயற்கையை நேசிக்கிறோம்.அதனால் போராடுகிறோம். இது தான் உண்மை.” என்றார்.

எல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்

எல்லாரையும் ஏங்க வைத்த ’96’ பட க்ளைமாக்ஸை மாற்றிய பார்த்திபன்

Parthiban created new climax scene for 96 movie in realகாதல் காவியமான 96 படத்தின் 100வது நாள் விழாவில் பார்த்திபன் கலந்துக கொண்டு படக்குழுவினர் வாழ்த்தினார்.

அதன் பின்னர் பார்த்திபன் பேசும்போது…

சில படங்களுக்கு த்ரிஷா இல்லனா நயன்தாரா இருக்கலாம். ஆனால் த்ரிஷாவை தவிர யாரும் இருக்க முடியாது.

இந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாரும் நாயகனும் நாயகியும் ஒரு முறையாவது கட்டி அணைக்க மாட்டார்களா? என்று ஏங்க வைத்தனர்.

எனவே எல்லாருடைய விருப்பமாக தற்போது இருவரை மேடையேற்றி கட்டி அணைக்கு சொல்கிறேன். இது இந்த 96 படத்தின் 100வது நாள் விழாவில் நடைபெறட்டும்.

எனவே பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேடையில் இந்த படத்தின் ஜீவனாக இருந்த பின்னணியிசையை வாசித்து காட்டி ரசிகர்களை உற்சாகமடையவைத்தார்.

Parthiban created new climax scene for 96 movie in real

உங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு

உங்க பேச்சில் கமர்ஷியல் இல்ல.; திருமுருகன்காந்தி மீது விஜய்சேதுபதி குற்றச்சாட்டு

Actor Vijay Sethupathi advice to Social activist Thirumurugan Gandhiபிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த படம் 96.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதையொட்டி இதன் 100வது நாள் விழா சென்னையில் ஹில்டன் என்ற நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

அப்போது விஜய் சேதுபதி பேசுகையில்…

“இந்த விழாவிற்கு திருமுருகன்காந்தி வருகைத்தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ் .நான் எதிர்பார்க்கவில்லை. அவரை காதலைப் பற்றி பேசவேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம்.

உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரியரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது. அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

படித்த, புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள். என்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன்.

எல்லா நல்ல விசயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக் ’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.”என்றார்.

Actor Vijay Sethupathi advice to Social activist Thirumurugan Gandhi

 

மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

Udhayanidhi Sathish and Aathmika team up for Kannai Nambatheyபுதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது.

பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது.

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.

இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார்.

தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். “என் முதல் படமான “இரவுக்கு ஆயிரம் கண்கள்” ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன்.

இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் “கண்ணை நம்பாதே” படத்தை எழுத என்னை உந்தியது.

உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

முதல் படத்துக்கும், ‘கண்ணை நம்பாதே’ படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.

அவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்கு, இயக்குனர் மு.மாறன் கூறும்போது…

“தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்” என்றார்.

தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, “மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன்.

அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.

Udhayanidhi Sathish and Aathmika team up for Kannai Nambathey

வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை

வாசிங்டனில் பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்து மழை

Pariyerum Perumal movie got America Tamil peoples appreciationஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

இதன் தொடர்சியாக அமெரிக்க தமிழ்சங்கம் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரிசெல்வராஜ் க்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள்.

வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜ் க்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது.

இது போன்ற படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் இனி முன்வருவார்கள் பரியேறும் பெருமாள் குழுவினருக்கு வாசிங்டன் தமிழ்சங்கம் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

Pariyerum Perumal movie got America Tamil peoples appreciation

லாபம் பெற கைகோர்க்கும் விஜய்சேதுபதி & ஸ்ருதிஹாசன்

லாபம் பெற கைகோர்க்கும் விஜய்சேதுபதி & ஸ்ருதிஹாசன்

vijay sethupathi and shruti haasanஇயற்கை, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

இதில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘லாபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இவையில்லாமல், சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தலைப்பை போலவே லாபம் பெற வாழ்த்துவோம்.. !!

More Articles
Follows