தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்பட சூட்டிங் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூட்டிங்கின் போதே விஜய்யை அழைத்து சென்று அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இரண்டு நாட்கள் பின்னர் விசாரணையை முடித்துவிட்டு தற்போது மீண்டும் சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இப்பட இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்தவுள்ளனர்.
இந்த விழாவில் வருமான வரி சோதனை பற்றி நிச்சயம் விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்கெனவே சர்கார், மெர்சல் விழாக்களில் விஜய்யின் அரசியல் கலந்து பேச்சு பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
Thalapathy Vijays Master movie audio launch news