தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் தன் 11 வயதில் ‘ஓ மஞ்சு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கவிதா.
பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என அறியப்பட்டவர் கவிதா.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா.
தமிழில் மட்டுமே 50-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர்.
தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார் கவிதா.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார் இவர்.
இவரது மகன், சஞ்சய் ரூப் மற்றும் இவரது கணவர் தசரத ராஜு ஆகிய இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.
இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவருக்குமே உடல் நிலை மோசமாகி கொண்டே போனது.
சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் ஜூன் 15ல் உயிரிழந்தார்.
அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.
இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று கவிதாவின் கணவர் தசரத ராஜுவும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.
காமெடி நடிகர் பாண்டு, ‘தொரட்டி’ பட ஹீரோ ஷமன் மித்ரு, நடிகர் நிதீஷ் வீரா, இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil actress Kavitha lost her family due to covid 19