தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவியில் தொடங்கி சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
கடந்த 2013-ம் ஆண்டில் Kai Po Che பட மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான Dhoni the untold story படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டினார்.
இதன் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட நபராக மாறினார்.
7 ஆண்டுகளில் 10 படங்கள். 34 வயதிற்குள் பிரபலமான நடிகராக உயர்ந்தார்.
சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர்கள் நவம்பரில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் காலம் அவரின் முடிவை மாற்றிவிட்டது.
இவர் கடைசியாக நடித்த சிச்சோரே தற்கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தியது.
சினிமாவில் வீர வசனம் பேசிய இவர் நிஜ வாழ்க்கையில் கோழையாக மாறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
ஒரு பக்கம் ரசிகர்கள் மீளா துயரத்தில் இருந்தாலும் அவரை விரும்பியவர்களுக்கே இது பேரதிர்ச்சியாக உள்ளது.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
சினிமாவில் நாம் காண்பவர்கள் ரீல் ஹீரோக்களே… அவர்கள் ரியல் ஹீரோக்கள் அல்ல… அவர்கள் சொல்வதை முழுமையாக நம்பி விட வேண்டாம்.
யாரோ ஒருவர் எழுதிய வசனத்திற்கு அவர்கள் நடிக்கிறார்கள். அவ்வளவுதான்.. இனிமேலாவது உங்கள் அபிமான ஹீரோக்களை கண்மூடித்தனமாக நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுக்கும் முன்.. நாம் சினிமாவில் இப்படி எல்லாம் பேசி நடித்தோமே… நம் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஒரு கனம் யோசித்திருக்கலாம்…
கடந்த ஜூன் 3-ம் தேதி கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுசாந்த் சிங்… தன் தாயின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் அந்த சோகத்தை நடிப்பின் மூலம் ஈடு செய்து வருவதாகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆத்மா சாந்திடைய வேண்டுகிறோம்.
கூடுதல் தகவல்..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050