விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

விவசாயத்தை இன்ஜினியர்கள் மாற்றலாம்..; பேசி பேசியே காய்ந்த மரத்தை வளர வைத்த சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.

அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது…

“எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரம் திடீரென காய்ந்துவிட்டது. இனி அந்த மரம் வளராது என தோட்டக்காரர் சொன்னார்.

ஆனால் நாம் மரம் அருகே உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என படித்தேன். அதை கார்த்தியிடம் சொன்னேன்.

அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, ‘உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன?’ என்று அந்த மரத்திடம் பேசினேன்.
நான் ஒருநாள் மட்டும்தான் பேசினேன். கார்த்தி தினமும் மரத்துடன் பேசினார்.

தற்போது, காய்ந்த அந்த மரம் உயரமாக வளர்ந்துவிட்டது.”

இவ்வாறு சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது…

கல்லூரியில் ப்ராஜெக்டை காசு கொடுத்து மாணவர்கள் வாங்க வேண்டாம். இன்றைய சமூகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நான் ஆலிவ் ஆயில் பயன்படுத்த வில்லை நம்ம ஊரு நல்லண்ணெய் தான் சாப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும். நுகர்வோரை விவசாயம் நோக்கி பார்க்க வைப்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.

இன்ஜினியர்களுக்கு பஞ்சமே இல்லாத மாநிலம் தமிழ்நாடு. நானும் இன்ஜினியர் தான். ஆனால் இப்போ வேறு தொழில் செய்து கொண்டு இருக்கிறேன். இன்ஜினியர்கள் நினைத்தால் விவசாயத்தை மாற்ற முடியும்.

இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

Suriya and Karthi speech at Uzhavar Virudhugal 2022 event

மீண்டும் ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் நயன்தாரா.?

மீண்டும் ஜெயம் ரவியுடன் டூயட் பாடும் நயன்தாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து ஸ்கீரின் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள்ளார்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஜெயம்ரவி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

இவர்கள் இருவரும் ‘தனி ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மோகன்ராஜா இயக்கிய இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi and Nayanthara teams up again for new movie

மீண்டும் படமெடுக்கும் ராஜு சுந்தரம்.; ஏகனை போல் ஏமாற்றாமல் இருப்பாரா.?

மீண்டும் படமெடுக்கும் ராஜு சுந்தரம்.; ஏகனை போல் ஏமாற்றாமல் இருப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனர்களில் முக்கியமானவர் ராஜு சுந்தரம்.

இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் அண்ணன் ஆவார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

தமிழில் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

2008ல் அஜித், நயன்தாரா ஜோடியாக நடித்த ‘ஏகன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். ஆனால் அந்த படம் படுதோல்வியை தழுவியதால் அதன்பின்னர் படங்களை இயக்கவில்லை ராஜு சுந்தரம்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க முயற்சித்து வருகிறாராம்.

இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? என்ற உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

Actor Choreographer Raju Sundaram set to direct movie again

‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

‘மாநாடு’ 100 நாட்கள்.: ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் காட்டிய சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘மாநாடு’.

இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியால் தற்போது தெலுங்கு & ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

இந்த நிலையில் நேற்றுடன் இந்த படம் நூறாவது நாள் என்ற சாதனையை எட்டியுள்ளது.

இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிகரமாக 2வது நாள்… வெற்றிகரமாக 3வது நாள்… என போஸ்டர்கள் – பேப்பர் விளம்பரங்கள் வருகின்றன.

அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் இந்த போஸ்டர்கள் டிசைன் சமீபத்தில் வந்தன.

எனவே 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தின் 100-வது நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

அப்போது அவர் ரசிகர்களுடன் செஃல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த வெற்றி சினிமாவிற்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் நானில்லை.

ரசிகர்களை சந்திப்பதாக இருந்த கூட்டம் தள்ளிப் போனது. எனவே தான் இப்போது ரசிகர்களை சந்திக்க வந்தேன்” என்றார் சிம்பு.

‘மாநாடு’ 100வது நாளையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில்…:

“எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் துணிந்து இறங்கு எனத் தட்டிக் கொடுப்பவர்.

துணிந்து இறங்கி செய்த படம் மாநாடு. தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் ஒத்துழைப்பால் மாநாடு நூறு நாட்களைத் தொட்டுள்ளது. இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய் தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

STR celebrates 100 days of Maanaadu with his fans

இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யப் போகும் பெண் இவரா.?

இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யப் போகும் பெண் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான்.

100 படங்களுக்கு மேல் இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்கும் இசையமைத்து இருந்தார்.

2021ல் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்காக தேசிய விருதும் வென்றார் இமான்.

இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் 2021ல் டிசம்பர் 29ல் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் இமான்.

தற்போது பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் இமான்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை இமான் மறுதமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன

இதுபற்றி இமான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‛‛இமான் மறுமணம் குறித்து வந்த செய்தி உண்மையில்லை. விவாகரத்து நடந்தது பற்றி சொன்னார்.

திருமணம் நடப்பதாக இருந்தால் நிச்சயம் சொல்வார். இமான் வெளிப்படையாக சொல்பவர். கடவுள் இருக்கார். நல்லது நடக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Music director Imman denies rumours on second marriage

டாப் ஹீரோஸே இன்னும் ரெடியாகல.; ‘ஹரா’-க்கு தீபாவளி சீட் போட்ட விஜய்ஸ்ரீ

டாப் ஹீரோஸே இன்னும் ரெடியாகல.; ‘ஹரா’-க்கு தீபாவளி சீட் போட்ட விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி – கமலுக்கு நிகரான ஹீரோவாக பேசப்பட்டவர் நடிகர் மோகன்.

‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என பல படங்கள் இவரது பெயரை இன்றவும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இளையராஜா இசையில் உருவான இவரது பட பாடல்களும் பிரபலம். எனவே மைக் மோகன் என அழைத்தவர்களும் உண்டு்.

இவரது பல படங்கள் 175 நாட்கள் தியேட்டர்களில் ஓடி வெள்ளி விழா கண்டதால் இவரை வெள்ளி விழா நாயகன் என ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவியதால் பின்னர் நடிக்கவில்லை.

ஆனாலும் ஹீரோ வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் மோகன்.

இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகனை நாயகனாக்குகிறார் ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய் ஸ்ரீ.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் 2022 புத்தாண்டில் வெளியிட்டனர்.

இந்த படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ இணைந்திருக்கிறார்.

1980-90களில் மோகன் மற்றும் குஷ்பூ முன்னணி நட்சத்திரங்களாக இருந்த போதும் இவர்கள் இணைந்து தமிழில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் ‘ஆத்ம கதா’ என்ற படமொன்றில் ஜோடியாக இணைந்துள்ளனர்.

‘ஹரா’ படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஏப்ரல் மாதம் ‘ஹரா’ மோசன் போஸ்டர் ரிலீஸ் எனவும் 2022 தீபாவளிக்கு ‘ஹரா’ படம் ரிலீஸ் எனவும் விஜய்ஸ்ரீ அறிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் பட தயாரிப்பு நிறுவனங்களே தீபாவளியை குறி வைத்து தங்கள் பட ரிலீசை அறிவிக்காத போது விஜய்ஸ்ரீ இப்போதே தைரியமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan film Haraa is announced for Diwali release

More Articles
Follows