சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையில் உருவாகும் சர்பத்

சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையில் உருவாகும் சர்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், “இசை தான் என் ஜீவன்” என்கிறார்.

மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம்.

இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியிட பட்டது

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியிட பட்டது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களை பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய
மதன் கார்கி…
“பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். என் பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குனர் சுஜீத் அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் மழையும் தீயும் என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்சிகளை வெளிப்படுத்துவதற்காக கதாநாயகனை தீயாகவும், கதாநாயகியை தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புதிய பாடல் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் பூவிற்குள் ஒளிந்திருக்கும் பாடல் போன்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபாஸின் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் அவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் பணியாற்ற எனக்கு சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புங்கள். ” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

“பேட் பாய்ஸ்” பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும் பொழுது,
“சாஹோ திரைப்படம் இந்திய சினிமாவிற்கும் ஹாலிவுட் சினிமாவிற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரு வாய்ப்பாக நினைக்கிறேன். சாஹோ படம் பிரம்மாண்டமாக வெற்றிப் பேர படக்குழுவினரை வாழுத்துகிறேன்.” என்று கூறினார்.

இயக்குனர் சுஜீத் பேசுகையில்,

“என்னை நம்பி இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரித்ததற்கு வம்சி மற்றும் பிரோமோத் அண்ணாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நடிகர் பிரபாஸ் அண்ணாவுடன் பணியாற்றியது சிறுவர்களுடன் அமர்ந்து முதல் முறையாக 3D படம் பார்ப்பது போல் இருந்தது. இப்படத்தில் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியைப் போல் பழகினோம். நான் பெரும்பாலான நேரங்களில் அவரது வீட்டிலேயே தங்கிவிட்டேன். நானும் அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்று என் அம்மா என்னை பலமுறை கேளி செய்திருக்கிறார். சாஹோ படத்தில் இடம் பெற்ற பாடலின் தமிழ் அர்த்தம் எனக்கு சரியாக தெரியாது. அது தெரிந்த பின்பு, கதையின் முழு அர்த்தமும் பாடல் வரிகளில் நிரப்பப் பட்டிருப்பதை உணர்ந்தேன். இப்படியொரு பாடல் வரிகளை தந்ததற்கு மதன் கார்கி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் சிவன் எனது சகோதரர் போல, அவர் எழுதிய பாடல் வரிகள் ஆச்சரியமாக இருந்தன. அவர் இப்படத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஷங்கர் மகாதேவன் அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியிருக்கிறார் அவருக்கும் நன்றி.” என்று கூறினார்.

இறுதியாக நடிகர் பிரபாஸ் பேசுகையில், “உண்மையெது பொய்யெது பாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறோம். இப்படத்தின் முக்கியக் கருத்தை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. அதனால் இப்படத்தின் முழு பாடலையும் நீங்கள் படத்தில் பார்க்கலாம் ஏனென்றால் அது கதையை பாதிக்கும் என்று கருதுகிறோம். இந்தப் பாடல் மூன்றுவித களமுடன் இதுவரை யாரும் பார்த்திராரத லோகேஷன்களில் காட்சிப்படுத்திருக்கிறோம். இந்தப் பாடல் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். பாகுபலி படத்திலிருந்தே எனது நெருங்கிய நண்பராக இருந்த மதன் கார்க்கியும், ஷங்கர்-எஹ்சன்-லாயும் எனக்கு சிறப்பான பாடல்களை தந்துள்ளனர். ” இப்படம் பாகுபலி போன்று அனைவரையும் கவரும்படி இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

படக்குழுவினர் பேசி முடித்த பிறகு படத்தின் “உண்மையெது பொய்யெது” பாடல் ஒலிபரப்பப் பட்டது. பத்திரிக்கையாளர்களும் ஊடகத்தினரும் இப்படத்தில் பாடலை ரசித்துப் பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி “சாஹோ” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஸ்ரொப், நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணீலா கிஷோர், பிரகாஷ் பெலாவாடி, எவெலின் ஷர்மா, சுப்ரீத் லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டின்னு ஆனந்த் மாறும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார். RC கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்!!

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)எல்லைகளை கடந்து அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பை பேணுவதிலும் கிச்சா சுதீப் சளைத்தவர் அல்லர். நாட்டின் அடையாளமிக்க பிரபலங்கள் அனைவரிடமும் அவர் அன்பை போற்றி பாதுகாத்து வருகிறார். அந்த அன்பு அவரின் “பயில்வான்” படத்தில் வழியே பெருகி வருகிறது.

“பயில்வான்” திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் ரிலிஸாவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.

பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.
அவர் பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து “பயில்வானை” பிரபலத்தியுள்ளார்.

சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றி கூறியபோது…
“சல்மான் கானின் இந்த நட்புரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் தன்னுடைய பிரத்யேக வழியில் “பயில்வான்” படத்தை பிரபலபடுத்தியது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR motion pictures நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர்.க் இப்படத்தில் ஆகண்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

ஒரு வெற்றிக்கே தலைகால் புரியாமல் ஆடும் இயக்குநர்கள் : தண்டகன் ‘ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு !

ஒரு வெற்றிக்கே தலைகால் புரியாமல் ஆடும் இயக்குநர்கள் : தண்டகன் ‘ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘தண்டகன்’ பட ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யாவின் நெகிழ்ச்சிக் கதையைக் கூறினார்.
‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா,நடிகை சனம் ஷெட்டி ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது ,

“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் ?
எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ?

சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது.. அது பலருக்கும் தெரிவதில்லை .

நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் . இதுவரை சொல்லாத விஷயம் அது. நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.

கார்த்திக்குடன் அவரை ஒரு நாள் படப்பிடிப்பில் நடிக்க வைத்தேன் . அவர்தான் கதாநாயகி என்று உறுதி செய்யப்படவில்லை . நடிப்பை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன் . அவருக்கு சாவித்திரி நடித்த பழைய வீடியோ கேசட்டுகளை கொடுத்து பார்க்கச் சொன்னேன். ஒரே ஒரு நாள் நடித்திருந்தார் . அப்போது நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தோம் .அப்போது அவர் நடித்த காட்சிகளை சென்னையிலிருந்து ஜெமினி லேபிலில் இருந்து எடுத்த ரஷ்ஷை வரவழைத்து அங்கு உள்ள ஒரு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம் . கூடவே மனோரமா ஆச்சியும் சிவகுமார் அண்ணனும் பார்த்தார்கள். அவர்கள் அவரவர் ஒரு கருத்து சொன்னார்கள் .ஆச்சி அப்போது சொன்னார் இவள் சாவித்திரி மாதிரி வருவாள் என்றார் .இது எவ்வளவு பெரிய வார்த்தை.

சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றழைத்தார் .எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது . இன்னொருவர் மத்தியில் பேசும் போது சார் என்று கூப்பிடு என்றேன்.

ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல் நான் அண்ணனாகவே இருந்தேன் . கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும் அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா .பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படம் சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் சிபாரிசு செய்தேன் .விரைவில் பெரிய நடிகையாக்கி விட்டார்.

அவர் வளர்ந்து நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும் காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான்தான் . சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார் – நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன் என்றெல்லாம் கூறியபோதும் என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். போக முடியவில்லை. தமிழில் ‘சந்திரமுகி’யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா ‘என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார் . அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார் .எனக்கு ஒருநாள் போன் செய்தார் .”அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. நடிப்பு வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆப் த மித்ரா தான் என் கடைசி படம் நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன் ” என்று என்னிடமும் என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார் .தன் அண்ணனின் வற்புறுத்தலால் பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார் . மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது .அவர் விபத்தில் இறந்துவிட்டார் .அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை .திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிக பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார் . உள்ளே சென்ற போது எனது படத்தை பெரிதாகப்போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை .அப்படிப்பட்ட நடிகை . சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில்.

இங்கே இயக்குநரை நடிகை தீபா அப்பா என்று அழைத்தார்.அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை .அது பெருமையான விஷயம் .

அப்படிப்பட்ட சினிமா இன்று எப்படி இருக்கிறது ? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது?

இன்று எல்லா படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன .சிறிய படங்கள் வெளியாகின்றன வசூல் தான் வரமாட்டேன் என்கிறது . அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய் . தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும்.

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும் .

பெரிய ஹீரோக்கள் தங்கள் படம் மட்டும் ஓடினால் போதும் என்று நினைக்கிறார்கள் .சினிமா பற்றி யாரும் கவலைப்படவில்லை . 100 கோடி ,60 கோடி, 50 கோடி என்று வாங்கி விட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை மாற்ற வேண்டும் .

அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும் .அதனால் தான் அமெரிக்காவில் எல்லா படங்களும் ஓடுகின்றன. ஒன்றை ஒன்று வசூலில் முறியடிக்கின்றன.இது போன்ற ஏற்பாடு செய்து இருப்பதால்தான் அங்கே எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றன.

இது புதிய விஷயம் அல்ல .இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இங்கே ஒரு கூட்டம் மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது .ஒரு கூட்டம் மட்டும் இழந்து கொண்டே இருக்கிறது.

திரையைப்பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் ,திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம் என்று பல சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யார் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இப்படி இருந்தால் எப்படி சினிமா வளரும் ? இதில் மாற்றம் செய்ய வேண்டும் .

சினிமாவில் உள்ள ஒரு தவறான போக்கு ஒரு படம் ஓடி விட்டால் இயக்குநர்கள் தன்னால் தான் எல்லாம் நடந்தது என்று தானாகவே முளைத்து வந்தது போல் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள் .ஒரு பட வெற்றிக்கு அகந்தையுடன் இருந்தால் அடுத்தப்படம் தோல்வியடையும் போது யாரும் கூட இருப்பதில்லை –

இங்குள்ள உள்ள பிரச்சினை என்னவென்றால் நல்ல இயக்குநரை யாரும் கண்டு கொள்வதில்லை . நடிகர்கள் யாருடனும் நட்பு நட்புறவுடன் இருப்பதில்லை . திறமைசாலிகளை யாரும் கண்டு கொள்வதில்லை .. இது மாற வேண்டும்.” இவ்வாறு ஆர்.வி.உதய குமார் பேசினார் .

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (கில்டு ) தலைவர் ஜாக்குவார்தங்கம் பேசும்போது,

” இங்கே எல்லா படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை . யாரோ 4 பேர் கையில் திரையரங்குகள் உள்ளன .இதை மாற்ற வேண்டும் .தமிழக அரசு சிறிய சிறிய திரையரங்குகளை உருவாக்கி எல்லா படங்களை வெளியிட ஆவன செய்ய வேண்டும் .
இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் .

அப்போதெல்லாம் திரையுலகினர் ஒரு குடும்பம் போல் இருந்தார்கள் . ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்று நட்புறவு இல்லை.. இது மாற வேண்டும் . எம்ஜிஆர், சிவாஜி விரோதிகள் என மக்கள் நினைத்தார்கள்.ஆனால் அவர்கள் ஒருவர் வீட்டுக்குச் ஒருவர் சென்று சாப்பிடுவார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் என்று இருப்பார்கள். இதில் நாயகனாக நடித்த அபிஷேக்கைப் பாராட்ட சக நடிகராக இருக்கும் அஸ்வின் வந்திருப்பது பாராட்டத்தக்கது .” என்று பேசினார்.

விழாவில் படத்தின் இயக்குநர் K.மகேந்திரன் பேசும் போது
“நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமாக்களை பார்த்துத்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். 50 வயதுக்கு மேல் இயக்குநராக வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் வயது ஒரு பிரச்சினை இல்லை .மனசுதான் முக்கியம் .என் மனம் இளமையாக இருக்கிறது .என் படம் பற்றி நான் விரிவாக புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை .ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்து எடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.” என்றார்.

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார் வி. இளங்கோவன் ,
நாயகன் அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா , ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ் ,ஆதவ், ராம் , வீரா, ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இசையமைப்பாளர் ஷ்யாம் மோகன், எடிட்டர் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சியாளர் பில்லா ஜெகன், நடன இயக்குநர் ஸ்ரீ ஷெல்லி , ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுதான் ‘இந்தியன்2’ பட கதையா..? வாவ்… அசத்தலா இருக்கே.!!

இதுதான் ‘இந்தியன்2’ பட கதையா..? வாவ்… அசத்தலா இருக்கே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கமல் நடிக்கும் இந்தியன் 2 பட சூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் ஷங்கர்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமத்து வருகிறார்.

இப்படத்தில் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் கதை என்று ஒரு தகவல் இணையத்தில் பரவியுள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. நீங்களே பாருங்கள்…

சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார்.

இவர்கள் நடத்தும் யூடியூப் சேனனில் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகின்றனர்.

எனவே பல மிரட்டல்களை சந்திக்கிறார் சித்தார்த்.

அவருக்கு உதவி செய்ய சென்னைக்கு வருகிறார் இந்தியன் தாத்தா கமல்.

ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தாத்திடம் கேடு பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார்.

அவருக்கு உதவிட காஜல் அகர்வாலும் வருகிறார்.

இறுதியில் இந்தியன் தாத்தாவை கொல்ல அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றனர் என்பதுபோல முடிகிறது கதை.

ஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா வாரியர்..? அதிர்ச்சியில் அஜித் பட புரொடியூசர்

ஸ்ரீதேவி கேரக்டரில் பிரியா வாரியர்..? அதிர்ச்சியில் அஜித் பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஒரே கண்சிமிட்டல் அசைவில் இந்தியாவையே கிறங்கடித்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவர் தற்போது ஹிந்தியில் உருவாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் பிரியா வாரியர் தன்னை ஸ்ரீதேவி என்று அறிமுகப்படுத்தும் காட்சி உள்ளது.

மேலும் அவர் தம் அடிப்பதும் மது அருந்தும காட்சிகளும் உள்ளது.

இறுதியாக குளியல் தொட்டியில் ஒரு பெண் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடையும் போது நிஜவாழ்க்கையில் நடந்தவைதான் இது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படக்குழுவினருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரியுள்ள நிலையில் படக்குழுவினர் மறுத்து விட்டனர்.

இப்பட இயக்குனர் பிரசாந்த் மாம்புலி இது குறித்து பேசியுள்ளதாவது…

“ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது கதை.

இப்படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி கதையா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும். தலைப்பை மாற்ற மாட்டேன்” என்றார்.

இதனால் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர போனிகபூர் முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் போனிகபூர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows