ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

ஒன் 2 ஒன்..: த்ரிஷாவை அடுத்து சுந்தரை இயக்கும் திருஞானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் “ஒன் 2 ஒன்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார்.

விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நடிகர் பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – 24 HRS புரொடக்‌ஷன்ஸ்
எழுத்து இயக்கம் – K.திருஞானம்
ஒளிப்பதிவு – விக்ரம் மோகன்
இசை – சித்தார்த் விபின்
கலை – R.ஜெனார்த்தனன்
காஸ்டுயும் டிசைனர் – நிவேதிதா
புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ் – விஜய்
சண்டை பயிற்சி – “Rugger” ராம்
நடனம் – தீனா
ஸ்டில்ஸ் – பாக்யா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Sundar C starrer K. Thirugnanam directorial “One 2 One”

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

கருணாஸ் கையிலெடுத்த ‘ஆதார்’.; 3வது முறையாக இணைந்த ஹிட் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழர் திருநாளான பொங்கலன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.

இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.

பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, ‘அசுரன்’ புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமாவாக ‘ஆதார்’ உருவாகியிருக்கிறது,” என்றார்.

‘ஆதார்’ தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையை பட குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சான்றாக ‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முன்னர், உலக அளவில் யதார்த்த சினிமா படைப்பாளியாக போற்றப்படும் இந்திய திரை சிற்பி சத்யஜித்ரேயின் உருவப்படத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கின்றனர்.

‘ஆதார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருவதால் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் – நடிகர் கருணாஸ் மீண்டும் ‘ஆதார்’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், ‘ஆதார்’ ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் திரை உலகில் ஏற்பட்டிருக்கிறது. .

Director Ramnath and Karunaas joins for Aadhaar

‘ஜெய்பீம்’ செங்கேணியை பக்கத்து வீட்டு பெண்ணாக மாற்றிய ஹலிதா சமீம்

‘ஜெய்பீம்’ செங்கேணியை பக்கத்து வீட்டு பெண்ணாக மாற்றிய ஹலிதா சமீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சிறந்த படமாக தரவரிசையில் முதன்மையான இடத்தை பிடித்த படம் ‘ஜெய் பீம்’ . இப்படத்தைப் பார்வையிட்ட அனைவரின் இதயங்களையும் தன்னுடைய அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை லிஜோமோள் ஜோஸ்.

இப்படத்தில் ‘செங்கேணி’ என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியாகவும், வெகுஜன மக்களின் பாராட்டையும் பெற்றவர்.

இப்படத்திற்குப் பிறகு நடிகை லிஜோமோள் ஜோஸ் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார்.

இவர் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தொடரில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ தமிழ் தொகுப்பின் முன்னோட்டத்தை பார்வையிடும்போது, ஒரு நடிகையாக லிஜோமோள் ஜோஸ் தன்னுடைய திறமையை திறம்பட வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான ‘லோனர்ஸ்’ என்ற அத்தியாயத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸ் ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொற்றுநோய் காலகட்டத்தில் பிரிந்து சென்ற தீரனை (அர்ஜுன் தாஸ்) மெய்நிகர் திருமண நிகழ்வு ஒன்றில் தற்செயலாக சந்திக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே ஆழமான- அர்த்தமுள்ள உரையாடல்கள் தொடர்கிறது. இதன்மூலம் அவர்களுக்கிடையே ஒரு பாசப்பிணைப்பை வளர்த்துக் கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு பற்றுடன் இருக்கவும் உதவுகின்றன.

நடிகை லிஜோமொள் ஜோஸ் பற்றி இயக்குநர் ஹலிதா சமீம் குறிப்பிடுகையில்….

,” சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகை லிஜோமோள் ஜோஸின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.

அப்படத்தின் இயக்குநர் சசி, ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன் ஆகிய மூவரும் லிஜோமொள் ஜோஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.

அதிலும் குறிப்பாக நடிகர் மணிகண்டன் என்னிடம் பேசும்போது,…

‘ லிஜோமோள் ஜோஸ் மேடம் நடிப்புக்காக உண்மையாக உழைப்பவர். இதன் காரணமாகவே அவருடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

நாங்கள் இருவரும் விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட போது, அவர் தன்னை வெளிப்படுத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையானவர். மற்றவர்களிடம் இயல்பாகப் பழகக் கூடியவர்’ என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ‘நல்லா’ என்ற கதாபாத்திரத்திற்காக நான் அவரை அணுகியபோது, அவர் திரைக்கதையை முழுவதுமாக வாசித்துவிட்டு, சில காட்சிகளை இப்படி செய்யலாமா..! என செல்போனில் பதிவு செய்து வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார்.

அதை பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது. அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். ‘லோனர்ஸ்’ சிங்க் சவுண்ட் எனப்படும் ஒத்திசைவு ஒலி எனும் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டது.

அவருடைய உச்சரிப்பு மற்றும் வசனங்களிடையேயான ஏற்றத்தாழ்வு அனைத்தும் மிக துல்லியமாக இருந்தது. இதனால் நான் அதனை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.

‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த பிறகு அவருடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்காக அவரைப்பற்றி பெருமிதம் அடைந்தேன்.

‘ஜெய் பீம்’ படத்தில் ‘செங்கேணி’ என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், ‘புத்தம் புது காலை விடியாதா’வில் ‘நல்லா’ என்ற பக்கத்து வீட்டு பெண்ணாக மாறி, அற்புதமாக நடித்துள்ளார்.

அவரின் இந்த மாற்றத்தை திரையில் காணும் பொழுது சுவராசியமாக இருக்கும்.” என்றார்.

மேலும் இவையனைத்தும் நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்து இரண்டாவது லாக் டவுனை மையப்படுத்தி அமைக்கப்பட்ட கதைகளாகும்.

ஐஸ்வர்ய லட்சுமி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோள் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் உள்ள கதைகளை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

‘புத்தம் புது காலை’ என்ற முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா’ துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுப்பு, 2022 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

Lijomol Jose to be seen in Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa

அரசியலில் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு ரெடியான கமல்ஹாசன்

அரசியலில் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு ரெடியான கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தங்கள் வேட்பாளர்களுடன் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதிகள் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

kamal hasan announced first phase mnm candidate list for urban local body polls

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1… ஏன் உடனே பார்க்கப்பட வேண்டும்: இதோ 5 காரணங்கள்

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1… ஏன் உடனே பார்க்கப்பட வேண்டும்: இதோ 5 காரணங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 , ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் இது இந்தியில் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்களுக்கு எப்போதுமே திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். காரணம் கதையும், கலைஞர்களின் நடிப்பும், அப்புறம் வெகு நிச்சயமாக சண்டைக் காட்சிகளுக்காகவும் வரவேற்பு இருக்கும்.
ஆனாலும் எப்போதாவது ஒருமுறை தான் புஷ்பா போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என அனைத்துமே தூள் ரகம். அதனாலேயே புஷ்பா ரசிகர்கள் பாடல்கள், வசனங்களை பேசி நடித்து ஆயிரக்கணக்கில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இத்தனைக்கும் பிறகும் புஷ்பா படம் பற்றி அறிந்ததில்லை எனக் கூறுவோர் பாறைக்கடியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் மொழிகளில் புஷ்பாவை ப்ரைம் வீடியோவில் பாருங்கள்.

5 காரணங்கள்:

புஷ்பா.. புஷ்ப ராஜ்: இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய மிக முக்கியக் காரணம் புஷ்பா பாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜூன். ஏற்கெனவே அவர் திறன்மிகு நடிகர் என்பது திரையுலகம் அறிந்தது தான். ஆனால், புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ல் அல்லு அர்ஜூனின் நடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. அவரது நடன அசைவுகளும், சண்டைக் காட்சிகளும், சின்ன சின்ன மேனரிஸம்களும், தாடியைத் தடவிக் கொடுக்கும் ஸ்டைலும் க்ளாஸ் ரகம். இந்தப் படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகிறது.

எல்லை கடந்த பேச்சு: புஷ்பா: தி ரைஸ் தேசிய எல்லை மட்டுமல்ல சர்வதேச எல்லையும் கடந்து புகழ் பெற்றுள்ளது. பல்வேறு செலிபிரிட்டிகளும் புஷ்பாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதே இதற்கு சாட்சி. புஷ்பா: தி ரைஸ் படத்தை இந்த ஆண்டின் சிறந்த என்டெர்டெய்னர் என்று கூறினால் அது மிகையாகாது.

இரண்டு நடிகர்கள்: அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு சிறந்த நடிகர்கள் திரையில் என்னவாகும் என்ற கேள்விக்கு.. மாயாஜாலம் நிகழும் என்பதுதான் பதில். அதுதான் நடந்துள்ளது. அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில் என இரண்டு நடிகர்களும் திரையில் தோன்றும்போதெல்லாம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர். ஐயோ ஃபஹத்துக்கு இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் இல்லையே என வருந்தும் அவரது ரசிகர்கள் புஷ்பா: தி ரைஸ் : பாகம் 2க்கு காத்திருக்கலாம். இந்தப் படம் ஃபஹத்துக்கு தெலுங்கில் கன்னித் திரைப்படம் என்பது முக்கியமானது.

இயக்குநர்: இந்தப் படத்தைக் காண நீங்கள் ரிமோட்டை ஆன் செய்தால் என்ட் கிரெடிட் முடியும் வரை நிறுத்தாமல் பார்ப்பீர்கள். அதற்குக் காரணம் இயக்குநர் சுகுமார். புஷ்பா: தி ரைஸ் படம் மூலம் ஆக்‌ஷன் படங்களுக்கு அவர் ஒர் அளவுகோலை நிர்ணயித்துள்ளார்.

ஆடியோ விஷுவல் விருந்து: இந்தப் படத்தில் பட்டாசு போல் வெடிக்கும், 10,000 வாட் மின்சாரம் போல் ஷாக்கடிக்கும் வசனங்களும், அழகிய லொக்கேஷன்களும், நடிகர்கள் ஒவ்வொருவரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. படத்தைப் பார்த்து முடித்தவுடன் இரண்டாம் பாகம் எப்போது என்ற எண்ணம் உருவாகும்.

இதுவரை புஷ்பா: தி ரைஸ் பாகம் 1 ஐ பார்க்காவிட்டால் அவர்கள் பெரிதாக இழந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உங்களுக்காகவே ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் புஷ்பா ஸ்ட்ரீம் ஆகிறது. இப்போது வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் இந்தியிலும் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. வீக் எண்டுக்குத் தயாராகுங்கள், புஷ்பாவுடன்.

ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=ou6h-22tMnA

5 reasons why Pushpa: The Rise-Part 1 needs to be watched ASAP

வடிவேலு படத்திற்கு லண்டனில் மெட்டு போடும் பிரபல இசையமைப்பாளர்

வடிவேலு படத்திற்கு லண்டனில் மெட்டு போடும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர்.

இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி G.K.M தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘சர்பட்டா பரம்பரை’ ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் இசையில் உருவாகிவரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடலுக்கும் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Naaisekar Returns songs getting composed in London work in full swing

More Articles
Follows