அடுத்த கட்டத்திற்கு நகரும் ‘மாநாடு’.; அழகிய தீவில் லொகேஷன் தேடும் படக்குழு.!

அடுத்த கட்டத்திற்கு நகரும் ‘மாநாடு’.; அழகிய தீவில் லொகேஷன் தேடும் படக்குழு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு’.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்பட ‘மாநாடு’ காட்சிக்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கினார். அப்போது மண் தரையில் படுத்து சிம்பு ஓய்வு எடுத்த போட்டோ ஒன்றும் வைரலானது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் சற்றுமுன் பகிர்ந்துள்ளதாவது…

‘மாநாடு’ படத்திற்காக லொக்கேசன் தேட ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனுடன் மாலத்தீவுக்கு செல்கிறோம்.

எனவே விரைவில் சிம்பு & படக்குழுவினர் மாலத்தீவு பறக்கவுள்ளனர்.

Maanadu movie team flyes to Maldives

நடிகர் செந்தில் & குடும்பத்தாருக்கு கொரோனா..; ஒரு வாரமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நடிகர் செந்தில் & குடும்பத்தாருக்கு கொரோனா..; ஒரு வாரமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டை விட தற்போது அதிக வீரியமாக உள்ளது.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் அதனை ஆளும் அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோலிவுட்டின் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டி வசித்து வருகிறார்.

அவரது மகன் அதே சாலிகிராமம் பகுதியில் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Senthil and his family tested Covid19 positive

என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்.; அரசியலுக்கு வராத ‘அண்ணாத்த’ சூட்டிங் கிளம்பிட்டாரூ.!

என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்.; அரசியலுக்கு வராத ‘அண்ணாத்த’ சூட்டிங் கிளம்பிட்டாரூ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

அப்போது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

ரஜினிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினி.

தன் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என திடீரென அறிவித்தார்.

“அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக கொரோனா காலத்தில் என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்.” என 3 பக்க அறிக்கை (2020 டிசம்பர் 29) விட்டு அமைதியானார்.

ரஜினி அரசியலுக்கு அழைத்து சில ரசிகர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். ஆனாலும் உடல்நிலை கருதி இனி தலைவர் ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்தனர்.

அடுத்த தலைமுறைக்காக… நாளைய தமிழகத்துக்காக… தலைவரின் நலனுக்காக பல ஆண்டுகளாக உதவி செய்து வந்தவர்கள் (ரஜினி் மக்கள் மன்ற) நற்பணிகளை விட்டு சிலர் வேறு கட்சிகளுக்கு தாவினர்.

ஆனாலும் சிலர் தொடர்ந்து நற்பணிகளை செய்து வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் ரஜினி குடும்பத்தார் 2021 நியூ இயர் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர். அப்போதே இதனால் சலசலப்பு ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மற்றும் இயக்குனர் சிவா நிற்கும் ஒரு போட்டோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்த போட்டோ ஒரு பக்கம் வைரனாலும் “அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக கொரோனா காலத்தில் என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்” என சொன்ன ரஜினிகாந்த் தற்போது கொரோனா 2வது அலை உச்சத்தில் இருக்கும்போது இப்படி செய்யலாமா? என கேள்வி கேட்கின்றனர்.

தலைவரின் நலமே எங்கள் உயிர் என நாங்கள் நினைக்கும்போது ‘ரஜினி இப்படி செய்வது சரியா?

அண்ணாத்த படமும் அவரை நம்பித்தானே எடுக்கப்படுகிறது. அவரை நம்பிதானே மற்ற கலைஞர்களும் நடிக்க வருகின்றனர்.

ஏற்கெனவே ஒரு முறை கொரோனாவினால் நிறுத்தப்பட்ட சூட்டிங்கை இப்போது மட்டும் தொடர என்ன காரணம்.? என பல்வேறு கேள்விகளை வீசி வருகின்றனர்.

எவ்வளவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டாலும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ரஜினிக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டால் ரஜினி குடும்பத்தாரும் சன் பிக்சர்ஸும் பொறுப்பு ஏற்குமா? எனவும் கேட்கின்றனர்.

அவர்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது தலைவா…!

Annatthe shooting but Rajinis fans upset with his decision

50 வயதிலும் அசத்தும் அஜித்..; தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

50 வயதிலும் அசத்தும் அஜித்..; தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித், எச்.வினோத், போனிகபூர், யுவன் ஆகியோரது வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

காலா பட நாயகி ஹூமா குரோஷி அஜித்துக்கு நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு பைக் ரேஸ் சண்டை காட்சி உள்ளதாம். அதில், டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் தல.

50 வயதில் ஒருவர் இந்த அளவுக்கு சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க முடியுமா? என படக்குழுவினரும் போனிகபூரும் ஆச்சர்யப்பட்டார்களாம்.

இந்த நிலையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி ஒரே நாளில் அதுவும் தல பிறந்தநாளில் அஜித்தின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Valimai movie double treat on Ajith birthday

மீண்டும் வேட்டையாட வரும் கமல்ஹாசன்..; ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..!

மீண்டும் வேட்டையாட வரும் கமல்ஹாசன்..; ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமலின் 232வது படத்திற்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை கமல்ஹாசனே தன் சொந்த பேனரில் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

கடந்த 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன் போலீசாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிலாங்களா… ஆண்டவரே..

Kamalhassans character in Vikram movie

சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் உடன் ஒரு படம் & வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என சூர்யா கைவசம் படங்கள் உள்ளன.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘வாடிவாசல்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா உடன் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தையும் கர்ணன் படத்தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கர்ணன் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு முன்பே விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Suriya teams up with Karnan movie team

More Articles
Follows