சுதந்திர தினத்தில் ஷாரூக்கான் & நயன்தாரா பட ட்ரீட் தர ரெடியாகும் அட்லி

சுதந்திர தினத்தில் ஷாரூக்கான் & நயன்தாரா பட ட்ரீட் தர ரெடியாகும் அட்லி

தெறி முதல் பிகில் வரை விஜய்க்கு மாஸான படங்களை கொடுத்தவர் டைரக்டர் அட்லி.

விஜய்யை இயக்கிய பின்னர் தமிழில் வேறு எந்த ஹீரோக்களையும் இயக்க விரும்பாமல் நேரடியாக பாலிவுட் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து பிரம்மாண்டமான ஒரு படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் அதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘சங்கி’ என பெயரிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் இப்பட அறிவிப்புக்காக ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்டதாம்.

இதில் ஷாரூக்கான் டபுள் ரோலில் நடிப்பதாகவும் இப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை தழுவல் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகஸ்ட் இறுதியில் மும்பையில் சூட்டிங்கை தொடங்கி செப்டம்பரில் துபாயில் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு டீசரை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

SRK – Atlee new project announcent out on Aug 15?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *