மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

PM Modi and Mansoor Ali Khanமைமோசா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக நாயகன் கோகுல், ப்ரியா, நீனு, அப்புகுட்டி, மன்சூர்அலிகான், மதுமிதா, டாப்பா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’.

விருந்தாளி படத்தை தொடர்ந்து உதயசங்கரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வல்லவன் இசையமைக்க, பெட்டி சி.கே.பி.ஆர். மோகன் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சற்றுமுன் இன்று சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் எஸ்பி. முத்துராமன், சீனுராமசாமி, விசி. குகநாதன், நடிகர் ரகுமான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் மன்சூர் அலிகான் பேசியதாவது….

“இந்த படத்தில் என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

பிரதமர் மோடி அறிவித்துள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பு திட்டத்தை அனைவரும் வரவேற்கிறார்கள்.

ஆனால் திடீரென ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து மக்கள் அனைவரையும் ஒரே நாளில் ராப் பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார்.

பழைய ரூ. 500 நோட்டுக்கள் நன்றாக உள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள ரூ. 2000 நோட்டுக்களை நம் ஆர்ட் டைரக்டர்களிடம் கொடுத்தால் நன்றாக டிசைன் செய்து இருப்பார்கள்.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பெரிய வரிசையில் மக்கள் கால்கடுக்க காத்துக்கிடக்கிறார்கள்.

மக்களிடம் செலவுக்கு பணம் இல்லை. 5 நாட்களாக தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சினிமா துறையே முடங்கி விட்டது.

மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும். திரையுலகினர் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.” என்று பேசினார் மன்சூர் அலிகான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *