‘சொப்பன சுந்தரி’-யை இனிமே கனவுல பார்க்காதீங்க.; ஓடிடி-யில பாருங்க..

‘சொப்பன சுந்தரி’-யை இனிமே கனவுல பார்க்காதீங்க.; ஓடிடி-யில பாருங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர்.

‘சொப்பன சுந்தரி’ படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் மக்களிடம் சராசரியான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் மே 12ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

‘soppana sundari’ released on disney plus hotstar

JUST IN ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ.? ‘கஸ்டடி’ பிரஸ்மீட்டில் கஷ்டப்படுத்திய பவுன்சர்ஸ்

JUST IN ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ.? ‘கஸ்டடி’ பிரஸ்மீட்டில் கஷ்டப்படுத்திய பவுன்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமி பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் இன்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

இது பொது விழாவோ.. அல்லது ரசிகர்கள் கூடும் இடமோ அல்ல.. முழுக்க முழுக்க செய்தியாளர்கள் கலந்துக் கொள்ளும் இடமாகும். அப்படி இருக்கையில் 10க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வருகை தந்திருந்தனர்.

அவர்கள் செய்தியாளர்களை நாகசைதன்யா மற்றும் கீர்த்தியிடம் நெருங்க விடாமல் தள்ளிக் கொண்டே வந்தனர்.

பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்ஸ்.? என்ற கேள்வி அனைவரிடம் இருந்தது. மேலும் கூட்டமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற? என்ற சிரிப்பலையும் எழுந்தது.

பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரும் நட்சத்திரங்கள் எதற்கு பவுன்சர்களை அழைத்து வருகிறார்கள்.? ரசிகர்கள் கூடினால் பிரச்சனை ஏற்படும்.. தள்ளுமுள்ளு ஏற்படும் என கருதலாம். ஆனால் பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்?

இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் இதை சரி செய்வார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.!

Bouncers atrocity at custody press meet

திரையரங்குகளை கலக்கிய AUGUST 16 1947 படத்தை இப்போ OTTயில் பார்க்கலாம்

திரையரங்குகளை கலக்கிய AUGUST 16 1947 படத்தை இப்போ OTTயில் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து வெளியான படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடிக்க, குக் வித் கோமாளி புகழ், ‘அருவி’ பட நாயகி அதிதி பாலன், ஷர்மா ரிச்சர்ட், அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் என்.எஸ்.பொன்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘ஆகஸ்ட் 16 1947’ படம் கடந்த ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், மக்களிடமும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், ‘ஆகஸ்ட் 16 1947’ படம் இன்று மே 5-ம் தேதி முதல் பிரபலமான அமேசான் பிரைமில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Gautham Karthik’s ‘AUGUST 16 1947’ on OTT from today

அக நக… பாடகியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் ஏஆர். ரஹ்மான்

அக நக… பாடகியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் சேர்ந்து ‘தி டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழில் ‘கடல்’, ‘மரியான்’, ‘ராஜா ராணி’, ‘இரண்டாம் உலகம்’, ‘மெட்ராஸ்’, ‘காக்கி சட்டை’, ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற பல படங்களில் பாடி தனது வசீகரமான குரலால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.

இந்த நிலையில், ‘தி டெஸ்ட்’ படத்தில் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் குறைந்த அளவிலேயே பெண் இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்ற நிலையில் அந்த லிஸ்டில் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் சேர்ந்துள்ளார்.

மேலும், சக்திஸ்ரீ கோபாலன் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்தி இடம்பெறும் “அக நக அக நக முக நகையே” பாடலை பாடி பலரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman introduced shakthisree gopalan as music director in the test movie

செல்வராகவனின் அடுத்த பட அப்டேட்.: யோகி பாபு & புஷ்பா நடிகருடன் கூட்டணி.!

செல்வராகவனின் அடுத்த பட அப்டேட்.: யோகி பாபு & புஷ்பா நடிகருடன் கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன்.

அதன்பிறகு ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’, ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நானே வருவேன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

செல்வராகவன் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளார்கள்.

செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார்.

மேலும், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “யோகிபாபு மற்றும் ‘புஷ்பா’ பட புகழ் சுனிலுடன் நடிப்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

yogibabu and pushpa actor joined the selvaraghavan

புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

புரோமோசன் இல்லாமல் வீணாகும் ‘தீர்க்கதரிசி’.; விழித்துக் கொள்வார்களா தயாரிப்பாளர்கள்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ், அஜ்மல், ஸ்ரீமன், துஷ்யந்த், ஜெய்வந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களின் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

இரட்டை இயக்குநர்கள் பி. ஜி. மோகன்- எல். ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் சத்யராஜ் உடன் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் இன்று மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

எனவே நேற்று மே 4ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பலரும் பாராட்டி வந்தனர்.

ஆனால் இது போன்ற ஒரு படம் வெளியே வருவதே பலருக்கும் தெரியவில்லை. முக்கியமாக மீடியாக்களில் வலம் வரும் பலருக்கே இது தெரியாமல் போனது தான் மிகவும் சோகமான விஷயம்.

ஏனென்றால் இந்த படத்திற்கு போதுமான பிரமோஷன் இல்லை என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது.

பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படத்திற்கே மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டது. முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய் முதல் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு இந்த படத்தை பல்வேறு விதங்களில் ப்ரோமோஷன் செய்தனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற சின்ன படங்களை ப்ரமோஷன் செய்தால் மட்டுமே மக்களிடையே சென்றடையும்.

படம் நன்றாக இருந்தால் மட்டும் போதுமா.? அது ரிலீசாவது வெளியே தெரிய வேண்டாமா.? மக்களை சென்றடைய வேண்டாமா?

இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி நிஜமான பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு படத்தை பிரமோஷன் செய்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் நிலையும் உயரும்.

நல்ல படத்திற்க்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இனியாவது தயாரிப்பாளர்கள் உஷாராகி விழித்துக் கொள்வது நல்லது.

Theerkkatharsi movie without promotion.; Will the producers wake up?!

#Theerkadarishi from Today

An inventive investigative thriller

@saravanaafilms @actor_ajmal @jayadusshyanth
@jaiwanth_vg #PgMohan @Lrsundarapandi1 #LaxmanDop @sathish4641 @actorsriman @ranjeetckedit @balamusician @deepandeep99 @teamaimpr https://t.co/h0sV60BJjU

More Articles
Follows