‘அண்ணாத்த’ அப்டேட்..: தலைவர் கலக்குறாரு… பூரிப்பில் சூரி

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

அப்போது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

ரஜினிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என திடீரென அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்து வரும் காமெடி நடிகர் சூரி அந்த அனுபவம் பற்றி தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்… “Thalaivar shooting spotla kalakkuraru vera level energy..” என பதிவிட்டுள்ளார் சூரி.

Soori reveals Annatthe update and Rajinis Energy level

Overall Rating : Not available

Latest Post