மனைவி போலீசில் புகார்; என்ன சொல்கிறார் தாடி பாலாஜி…?

மனைவி போலீசில் புகார்; என்ன சொல்கிறார் தாடி பாலாஜி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Balaji with his wifeசின்னத்திரை மற்றும் பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாலாஜி. இவருக்கு தாடி பாலாஜி என்ற செல்லப் பெயரும் ரசிகர்களிடையே உண்டு.

இந்நிலையில் இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதுகுறித்து பாலாஜி என்ன சொல்கிறார் என்றால்…

ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் சாதாரண சண்டைதான்.

ஆனால், அதை வைத்து நான் ஜாதியை பெயரை சொன்னதாக குறிப்பிடுகிறார்.

நான் என் மாமனார் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் மாத வாடகை கொடுத்திருக்கிறேன்.

ஆனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்கிறார்கள்.

என் மனைவி சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்து கொள்கிறார்.

உன்னை ஜெயில்ல உட்காரவைப்பேன் என்று கூறுகிறார்.

இதில் எங்கள் குழந்தை பாதிக்கப்படுவதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

‘ரஜினியின் முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்..’ தனுஷ்

‘ரஜினியின் முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்..’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Dhanushரஜினி அரசியலுக்கு வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் அரசியலுக்கு வந்து மோதி பார்க்கட்டும் என எவரும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியலுக்கு வரவே கூடாது என பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தனுஷ் கூறியதாவது…

‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை.

அரசியல் முடிவு மட்டுமல்ல. எந்த முடிவாக இருந்தாலும் அவர் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்’ என்றார்.

ஓராண்டு ஆட்சி செய்த முதல்வருக்கு கமல் பாராட்டு

ஓராண்டு ஆட்சி செய்த முதல்வருக்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanதமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது.

அதுபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச ஆட்சி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள அரசுக்கு அனுப்பியுள்ள இமெயில் ஒன்றின் மூலம் ஓராண்டு ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… ‘ கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன்.

கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி விஜய்க்கு தளபதி 61.. சொல்வது யார் தெரியுமா?

ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி விஜய்க்கு தளபதி 61.. சொல்வது யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Vijayரஜினியின் சினிமா கேரியரில் சந்திரமுகி படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

ரஜினிக்கு சந்திரமுகி படம் அமைந்த்து போல, விஜய்க்கு தளபதி 61 படம் (தற்காலிக பெயர்) அமையும் என ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முரளி தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, எஸ்
ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரஜினியின் ‘காலா’ டைட்டிலுக்கு டிடி கொடுத்த ரியாக்சன்

ரஜினியின் ‘காலா’ டைட்டிலுக்கு டிடி கொடுத்த ரியாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala poster DD reactionரஜினி தற்போது நடித்துள்ள 2.0 படம் அவரது 163வது திரைப்படமாகும்.

இதனையடுத்து தன் 164வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் தலைப்பை சற்றுமுன் வெளியிட்டனர்.

கரிகாலன் என்ற டைட்டிலை சுருக்கி காலா என்ற டிசைனை வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த விஜய் டிவி புகழ் டிடி (திவ்யதர்ஷினி) தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும், தலைவர் முகம் பார்த்த நொடி எல்லாம் மறந்துடும்” என்று தெரிவித்துள்ளார்.

DD Neelakandan‏Verified account @DhivyaDharshini 3m3 minutes ago

Manasula ena kastam irundalum Thalaivar Mogam patha adutha nodi elam marandirum #MIRATTAL #KAALA @beemji @vinod_wunderbar @dhanushkraja sir

ரஜினியின் அடுத்த படத் தலைப்பை தனுஷ் வெளியிட்டார்

ரஜினியின் அடுத்த படத் தலைப்பை தனுஷ் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kala karikalanபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கரிகாலன் என்ற பெயரை சுருக்கி காலா என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார்.

கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவு செய்த முரளி ஆகியோர் இப்படத்திற்கு அந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

சண்டைப் பயிற்சிக்கு திலீப் சுப்ராயன்

பாடல்களுக்கு கபிலன் உமாதேவி ஆகியோரும், நடனத்திற்கு சாண்டி ராகேஷ் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே அஹ்மது ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Rajini dhanush Ranjith combo movie titled Kaala Karikalan

 

kaala rajini

More Articles
Follows