விஜய் ஆண்டனி-GV பிரகாஷ்-ஹிப் ஹாப் ஆதி வரிசையில் பாலாஜி

Balajiதமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி @ விது..

இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற
*” த்ரிஷா இல்லைனா நயன்தாரா “*
கன்னட ரீமேக்கில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கதையின் நாயகனாக
தமிழ் படம் ஒன்றில் இவர் நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக ‘பிக்பாஸ்’ புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார்.

மேலும் தமிழில் முதன்மையான தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.. அனிமல் திரில்லரும் காதலும் கலந்த இந்த திரைப்படத்தை GOOD HOPE pictures சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தமிழ், ஹிந்தி. தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கின்றனர்.

இந்தப்படம் பற்றி கதையின் நாயகனான பாலாஜி@விது கூறுகையில்…

“நான் நடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார்.

கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன்.

அப்படி ஒரு பிரம்பிப்பான திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. இன்னும் சொல்லப்போனால் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் பல திருப்பங்களுடன் அனிமல் திரில்லர் வகையான கதையாக உருவாகியுள்ளது இந்த படம்” என்று தெரிவித்தார்.

Music director turns hero in thriller film

Overall Rating : Not available

Latest Post