மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

மணிரத்னம் படத்திற்காக சிம்பு செம ஒர்க்அவுட்; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STRமணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு தன் உடல் எடையை சிம்பு குறைக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகம் பகிர அது இணையங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக்-கவுதம் இணைந்து நடித்த ‘Mr.சந்திரமௌலி’ பட ரிலீஸ் தேதி

கார்த்திக்-கவுதம் இணைந்து நடித்த ‘Mr.சந்திரமௌலி’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MR Chandramouli postersகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘Mr.சந்திரமௌலி’.

இதில் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்தி இணைந்து நடித்துள்ளனர்.

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தை BOFTA media works India private limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ தயாரிக்கின்றனர்.

இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் CS இசையில் , ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் ஒளிப்பதிவில் , ஜாக்கியின் கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.

இந்நிலையில் ‘Mr.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை; தொழிலதிபர் அழகேசன் கைது

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை; தொழிலதிபர் அழகேசன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul alleges sexual harassment by stranger files police caseமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நடன பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அந்த நடன வகுப்பிற்கு வந்த ஒருவர் அழகேசன் என்ற தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசி அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம்.

எனவே சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்,

இதனையடுத்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amala Paul alleges sexual harassment by stranger files police case

இன்றுமுதல் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது ஜீவாவின் கொரில்லா

இன்றுமுதல் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது ஜீவாவின் கொரில்லா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva starring Gorilla movie updatesஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’.

இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா’ படம் வெளியாகவுள்ளது.

என் வழி ஒன்வே அல்ல; பெரியார் பாதையில் இருக்கும்… : கமல்

என் வழி ஒன்வே அல்ல; பெரியார் பாதையில் இருக்கும்… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan political tour meeting updatesவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இது குறித்து அவர் பேசும்போது…

சுற்றுப்பயணத்தின் போது பொது கூட்டங்களில் பேசுவேன். அப்போது நான் மட்டுமே பேசும் ஒருவழிப்பாதையாக அந்த கூட்டங்கள் இருக்காது.

பெரியார் பாணியில் மக்களிடம் கருத்துக் கேட்கும் கலந்துரையாடல்களாக அது இருக்கும்

இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும்.

சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.

நான் இந்து மதத்தின் விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

Kamalhassan political tour meeting updates

கபாலியை கலாய்த்தும் விஜய்யை உயர்த்தியும்… மதுரவீரன் சீன்ஸ்

கபாலியை கலாய்த்தும் விஜய்யை உயர்த்தியும்… மதுரவீரன் சீன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madura veeran movie made fun of Kabaliபிஜி. முத்தையா இயக்கத்தில் சண்முக பாண்டியன், மீனாட்சி நடித்துள்ள படம் மதுரவீரன்.

இப்படம் நாளை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்டப்பட்டது.

இப்படத்தில் நிறைய காட்சிகளில் கபாலி பட காட்சிகளை கலாய்க்கும் வகையில் உள்ளது.

அதில் சில…

சண்முக பாண்டியன் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வருவார். அப்போது அவரை பார்த்து பாலசரவணன்.. என்னடா? உடம்புல டாட்டூஸ எல்லாம் போடல.

யாருடா சொன்னா அது எல்லாம் வரையனும் அப்படின்னு..
கபாலி படத்துல அப்படிதான் காட்டினாங்க என்பார். அது படம்டா. என்பார்.

மற்ற ஒரு காட்சியில் ஏம்பா உனக்கு பறக்க தெரியாதா? என்ன மாப்ளா பறக்கு தெரியாது என்கிறீர்கள் என்பார் மொட்ட ராஜேந்திரன்.

இதுவும் கபாலி படத்தில் தன்ஷிகாவிடம் ரஜினி சொல்வார்.

மற்றொரு சீனில் பறக்கும் குணம் கொண்ட பறவை. அதை கூட்டில் அடைச்சி வைச்சிருக்கீங்க என்றும் மொட்ட ராஜேந்திரன் கேட்பார்.

மதுரவீரன் படமே ஜல்லிக்கட்டை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இதற்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய மெரினா போராட்டமும் இதில் காட்டப்பட்டது.

அப்போது விஜய்காந்த் மற்றும் விஜய் தெரிவித்த கருத்துக்கள் படத்தில் இடம்பெற்றன.

ஆனால் இதில் முக்கியமாக கலந்துக் கொண்ட மற்ற நடிகர்களை காட்டவில்லை.

More Articles
Follows