டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

டெல்லி சலோ : 6 நாட்களாக 6 மாநில விவசாயிகள் போராட்டம்..; மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anna Hazareமத்தியில் ஆளும் பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’/போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன், அந்த போராட்டம் 6 வது நாள்.

இதனால், இந்தியாவின் தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து உள்ளது.

டெல்லி போலீசார் தண்ணீரைப் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நம் நாட்டில் 500 க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் இருக்கின்றன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்.. இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தேர்தல் சமயத்தில் விவசாயிகளிடம் வாக்கு கேட்கும் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் நடந்தும் ஏன் விவாதிக்கக்கூடாது.

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?”

இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் ஆனாலும் விவசாயிகள் பொறுமையுடன் நிதானத்துடன் போராடுகின்றனர்.

விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் அது யார் பொறுப்பு?

“டெல்லி சலோ” போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

Social activist Anna Hazare condemns Central govt

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு..; பாமக-வினர் வன்முறை.. இதான் மாற்றம்.. முன்னேற்றமா? பதில் சொல்ல மறுத்த அன்புமணி

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு..; பாமக-வினர் வன்முறை.. இதான் மாற்றம்.. முன்னேற்றமா? பதில் சொல்ல மறுத்த அன்புமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பான கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார் அன்புமணி.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது…

” 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அன்புமணியிடம் செய்தியாளர்கள்… “பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்தது குறித்தும் மாற்றம் முன்னேற்றம் பற்றி கேள்வி கேட்டனர்.

இதை யாரோ செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பாமகவினரின் கொடி டிசர்ட் அணிந்து இருந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

இதனால் அன்புமணி கோவமாக பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து அன்புமணி உடன் வந்த தொண்டர் ஒருவர்… “இனிமேல் இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது” என மிரட்டினார்.

Netizens slams PMK for their violence in today’s protest

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது…; பிக்பாஸ் பாலாஜி பன்ச்

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது…; பிக்பாஸ் பாலாஜி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji MurugaDoss‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கி 2 மாதங்களை நெருங்கும் வேளையில் அந்த வீட்டில் கால் சென்டர் டாஸ்க் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும்.

மேலும் அவரை பேசி பேசியே டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு செல்வார்கள்.

இதுவரை சோம் – கேபி, ரியோ – ஆஜித் , அர்ச்சனா – பாலாஜி, சனம் – சம்யுக்தா, ரம்யா – ரமேஷ் ஆகியோர் கால் சென்டர் டாஸ்கை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தொடங்கியிருக்கும் கால் சென்டர் டாஸ்க்கில், பாலாஜி – ஆரிக்கு கால் செய்து பேசுவதாக உள்ளது.

அவர் பேசும்போது… “கெட்டவன்னு சொல்றவன நம்பலாம். நல்லவன்னு சொல்றவன கூட நம்பலாம். ஆனால் நான் மட்டும் நல்லவன்னு சொல்றவன நம்பவே கூடாது என பாலாஜி சொல்வதாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வாரம் வீட்டின் தலைவராக ஜித்தன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 9-வது வாரத்தின் நாமினேஷனும் நடைபெற்றுள்ளது.

அதில் ஆஜித், அனிதா, ரம்யா, ஷிவானி, சனம், நிஷா மற்றும் ஆரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

Balaji Murugadoss punch in today bigg boss episode

மீண்டும் A1 கூட்டணி..; ஜான்சன் – சந்தானம் இணையும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்

மீண்டும் A1 கூட்டணி..; ஜான்சன் – சந்தானம் இணையும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parris Jeyarajஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் – ஜான்சன் கூட்டணி.

‘ஏ1’ படத்தின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது சந்தானம் – ஜான்சன் கூட்டணி. வசூல் ரீதியாக அனைவரும் லாபம் ஈட்டிய இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது.

காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘பாரீஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். ‘ஏ1’ படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார்.

எடிட்டராக பிரகாஷ் மாபு, சண்டை இயக்குநராக ஹரி தினேஷும் பணியாற்றியுள்ளனர். அனைத்து பாடல்களுக்கும் சாண்டி நடனம் அமைத்துள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார்.

டீஸர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கொரோனா அச்சுறுத்தலால் இறுக்கமான மனங்களைச் சிரிப்பு மழையில் நனைய வைத்து இதமாக்க ஜனவரியில் வெளியாகவுள்ளது ‘பாரீஸ் ஜெயராஜ்’.

A1 combo’s next is titled Parris Jeyaraj

நடன இயக்குநர் ராபர்ட் & அன்பு மயில்சாமி இணைந்த ‘அல்டி’..; தியேட்டர்களில் அசத்தல்

நடன இயக்குநர் ராபர்ட் & அன்பு மயில்சாமி இணைந்த ‘அல்டி’..; தியேட்டர்களில் அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film Altiதமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி கடந்த நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த ‘அல்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார்.

‘அல்டி’ என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜெ.உசேன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியான படங்களில் ‘அல்டி’ மிகவும் பேசப்படுகின்ற படமாக வெற்றிநடை போட்டு வருகின்றது.

முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக அளித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக ‘அல்டி’ கலக்கி வருகின்றது.

அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

மொத்தத்தில் மக்கள் ரசிக்கும் அசத்தல் திரைப்படமாக அல்டி அசத்தி வருகின்றது.

Anbu Mayilsamy’s Alti gets good response from public

டிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; ‘புனிதன்’ குறித்து ஆதவன் பேச்சு

டிஎஸ்கே காமெடி நடிகரே இல்லை ; ‘புனிதன்’ குறித்து ஆதவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘புனிதன்’ என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் டிஎஸ்கே.

டாப் வியூ என்டர்டெய்ன்மென் சார்பில், வினோத் தயாரிப்பில், உருவாகியுள்ள இந்தப்படத்தை, இயக்குநர் பாபி ஜார்ஜ் இயக்கியுள்ளார்.

இவர் பிரம்மா உள்ளிட்ட படங்களில், உதவி இயக்குனராக பணியாற்றியவர். 28 நிமிடம் ஓடும் பைலட் பிலிமாக உருவாகியுள்ள, இந்த புனிதன் படத்தின் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், படக்குழுவினருடன் நடிகர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜெய்வந்த், ஆதவன், ஜார்ஜ், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இசையமைப்பாளர் ரமேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இயக்குனர் பாபி ஜார்ஜ் பேசும்போது….

“இது ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கப்போகும் கதை.. தயாரிப்பாளருக்காக, தற்போது இதை பைலட் பிலிமாக எடுத்துள்ளோம்.

கதை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, நிறைய விஷயங்களை மறைத்து தான், படமாக்கியுள்ளோம்.

இதன்மூலம் நாயகன் டிஎஸ்கே மற்றும் படத்தில் நடித்த பலருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

நாயகன் டிஎஸ்கே பேசும்போது, “இந்தக் படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னபோது, எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.. காமெடியாக நடித்துவரும் நான், போலீஸ் கேரக்டரில் நடித்தால், அது காமெடியாக போய்விடக்கூடாது என்கிற பயம் இருந்தது.

ஆனால், “இது ஹீரோ கதாபாத்திரம் அல்ல படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்கள் போல, இதுவும் ஒன்று என, நினைத்துக்கொண்டு நடியுங்கள், அதுமட்டுமல்ல, ஏற்கனவே காமெடியாக நடித்துள்ளீர்கள் சீரியஸ் கதாபாத்திரங்களையும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று இயக்குநர் பாபி ஜார்ஜ் என்னை ஊக்கப்படுத்தினார்” என்றார் டிஎஸ்கே.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே, இதை முழு நீள திரைப்படம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. இங்கே வந்தபோது தான், இது பைலட் படம் என்பது தெரியவந்தது.. நான், நிறைய குறும்படங்களில், நடித்திருக்கிறேன்.

ஆனால், அது முழுநீள திரைப்படமாக மாறியபோது, அதில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த படத்தின் இயக்குநர், கண்டிப்பாக டிஎஸ்கேவை வைத்து, இதை முழுநீள திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் ஒன்றை வைத்தார்..

நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்கும்போது தான், டிஎஸ்கே அறிமுகமானார்.. என்றாலும், சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சியில், அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போனேன்.. அவருக்குள் உணர்ச்சிகரமான நடிப்பு இருப்பது, அப்போதுதான் தெரிந்தது. இந்த புனிதன் படத்திலும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார்

நடிகர் ஆதவன் பேசும்போது…,

“நான் ஒரு காமெடி நடிகர், என்னை சீரியஸான கதாபாத்திரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என, நண்பன் டிஎஸ்கே சந்தேகமாக, ஒரு கேள்வி கேட்டார். ஆரம்பத்திலேயே, அவரிடம் நான் சொல்லவேண்டும் என நினைத்தேன், அவர் ஒரு காமெடி நடிகரே கிடையாது.. ரொம்ப சீரியஸான ஒரு நடிகர் என்று.., சமீபத்தில் நடைபெற்ற, தெருக்கூத்து கலை நிகழ்ச்சியில் டிஎஸ்கேவின் நடிப்பை பார்த்தபோது அதை முழுதாக உணர்ந்தேன்.. ஒரு நகைச்சுவை கலைஞரால் அவ்வளவு சீரியஸாக மாற முடியாது.. டிஎஸ்கே, ஒரு உணர்வுப்பூர்வமான நடிகர்.. அவருக்கு ஒரு மிகப்பெரிய, நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது, என்னுடைய ஆசை.. எங்களை மாதிரி டிவி நடிகர்களை வைத்து, பைலட் பிலிம் மட்டும்தான் எடுப்பார்கள்.. ஆனால், அது பெரிய படமாக மாறும்போது, வேறு யாருக்கோ, அந்த வாய்ப்புகள் போய்விடும், இந்த படத்தின் இயக்குநர் பாபி ஜார்ஜ், டிஎஸ்கேவை கதாநாயகனாக வைத்தே, இதை முழு நீள திரைப்படமாக இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

*நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

நடிகர்கள் ; டிஎஸ்கே, சௌமியா, ராஜேஷ், ஹரிஷ், அசார், அப்பு, கோபி
இயக்குனர் ; பாபி ஜார்ஜ்
ஒளிப்பதிவு ; மகேஷ்
இசை ; ஜோஷுவா பாபு
படத்தொகுப்பு ; A.மணிகண்டன் & லிங்கராஜ்
Sfx: பாபி பாபா பிரசாத்
Vfx: தேஸு dft
தயாரிப்பாளர்கள் ; வினோத் – மூர்த்தி பூங்கொடி

Actor Aadhavan speech at Punithan movie press meet

aadhavan

More Articles
Follows