சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கா.? சிக்கலை தீர்த்த சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கா.? சிக்கலை தீர்த்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே.

தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாகு, ரேஸ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க, இன்ப சேகரன் இயக்கியுள்ளார்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சிவகார்த்திகேயனை இளம் சூப்பர் ஸ்டார் என்று கூறியதை பார்த்தோம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது…

ஒரு பாய்ண்டை சொல்லி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தவர் பி.டி.செல்வ குமார் சார்.

என்ன சொன்னீங்கன்னு நான் சொல்ல மாட்டேன். அதெல்லாம் வேண்டாம் சார். அது நானில்லை சார். நாம யாருன்னு தெரியும்.

எங்க இருந்து வந்திருக்கோம்னு தெரியும். அதெல்லாம் புரிஞ்சிட்டுன்னா இந்த மாதிரி விசயங்களை காதில் எடுத்துக்கொள்ளவே மாட்டோம். நம்ம செய்ற வேலை எல்லோருக்கும் ரீச்சாகினா போதும்.

இந்த மாதிரி விசயங்களெல்லாம் வேண்டாம் சார். என் படம் எல்லோருக்கு பிடிச்சிதுன்னா அதுவே போதும். நாம் பாட்டுக்கு ஒரு ரூட்டு எடுத்து போய்க்கிட்டேயிருக்கேன். விமர்சனம் பண்ணினா திருத்திக்கிட்டு நடிப்பேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

இதன்மூலம் தனக்கு வரவிருந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் சிக்கலை சுலபமாக தீர்த்துவிட்டார் சிவகார்த்திகேயன் எனலாம்.

‘முதல்வராக தடை செய்தால் ரஜினி பிரதமாகிவிடுவார்..’ திருமாவளவன்

‘முதல்வராக தடை செய்தால் ரஜினி பிரதமாகிவிடுவார்..’ திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Thol Thirumavalavanரஜினியின் அரசியல் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தற்போது அவர் காலா படத்தில் பிஸியாக இருப்பதால், பரபரப்பு கொஞ்சம் தணிந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வரும் திருமாவளவன் தனியார் டிவி பேட்டியில் கூறியதாவது…

“அரசியல்வாதி என்ற முறையில் ரஜினியை அரசியலுக்கு வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

ரஜினிகாந்த் தமிழரல்ல என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்.

தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு நல்ல மனிதர் ஆளவேண்டும்.

ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார்.

ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

திருமாவளவனின் இந்த பேட்டி அரசியல் உலகில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

கடும் குளிர்; நடு ராத்திரி… ‘உரு’ படம் உருவான விதம்

கடும் குளிர்; நடு ராத்திரி… ‘உரு’ படம் உருவான விதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaiyarasan Dhanshika Uruகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் கலையரசன், தன்ஷிகா இணைந்துள்ள படம் உரு.

இப்படம் அடுத்த வாரம் ஜீன் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது…

‘‘உரு’ படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். உருவத்தை சுருக்கி உரு என டைட்டில் வைத்துள்ளோம்.

இப்படத்தை கொடைக்கானலில் கடும் குளிரில் 40 நாட்கள் இரவில் படமாக்கினோம்.

கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி உள்ளிட்ட பலரும் ரொம்ப கஷ்டப்பட்டனர்.

அவர்களைவிட டெக்னீஷியன்கள் பாவம். அவ்வளவு கஷ்டப்பட்டு இப்படம் இப்போது ஒரு ‘உரு’ வாக வளர்ந்துள்ளது.” என்றார்.

‘மெட்ரோ’ படத்திற்கு இசையமைத்த ஜோஹன் இசையமைக்க, ‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Kalaiyarasan Dhanshika starring Uru movie updates

விக்ரமுடன் இணையும் பாபி சிம்ஹா; என்ன கேரக்டர் தெரியுமா..?

விக்ரமுடன் இணையும் பாபி சிம்ஹா; என்ன கேரக்டர் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram bobby simhaதுருவநட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை தொடர்ந்து சாமி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவிருக்கிறார்.

இதில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

வில்லனாக அறிமுகமாகி அண்மைகாலமாக பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வருவது இங்கே கவனித்தக்கது.

ஷிபுதமீன்ஸ் இப்படத்தை பிரம்மாண்ட்டமாக தயாரிக்கவுள்ளார்.

Bobby simha plays baddie in Vikram’s Saamy2

சூர்யா-கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம்

சூர்யா-கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director pandirajசூர்யா மற்றும் கார்த்தி அண்ணன் தம்பியாக இருந்தாலும் இதுவரை இவர்கள் படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

எனவே இவர்கள் எப்போது இணைவார்கள்..? என கோலிவுட்டில் கேள்விகள் வலம் வந்தன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜிவி. பிரகாஷின் செம ஆடியோ வெளியீட்டு விழாவில் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் ராஜசேகர் பாண்டியன் புது அறிவிப்பை தெரிவித்தார்.

சூர்யா தயாரிக்கவுள்ள புதுபடத்தில் கார்த்தி நடிக்க, அப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார்.

Suriya will Produce Karthi’s next movie will be directed by Pandiraj

சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் கொடுத்த பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and director perarasuதம்பி ராமையா மகன் உமாபதி நடிக்க, இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

இவ்விழாவில் பேரரசு பேசும்போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று அழைத்து புதிய பட்டத்தை கொடுத்தார்.

More Articles
Follows