தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்தது வென்றது எல்லாம் நாம் அறிந்ததே.
இவரைப் போலவே நிறைய டிவி நடிகர்களும் சினிமாவுக்கு வந்துக் கொண்டே இருக்கின்றனர்.
அதில் முக்கியமானவர் நடிகர் ரோபா சங்கர்.
இவர் சிவகார்த்திகேயனை பாசமுடன் தம்பி என்றே அழைப்பார்.
டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் இணைந்து வந்தாலே களை கட்டும்.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.
மோகன் ராஜா இயக்கவுள்ள படத்தில்தான் இவர்களின் சினிமா கூட்டணி இணைகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.