பாண்டிச்சேரி டூ லண்டன் ட்ரீப்பில் சிவகார்த்திகேயன்-அனுதீப் குழுவினர்

பாண்டிச்சேரி டூ லண்டன் ட்ரீப்பில் சிவகார்த்திகேயன்-அனுதீப் குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இப்படத்தினை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கவிருக்கிறார்.

தெலுங்கில் காமெடி ஜார்னரில் எடுக்கப்பட்ட ஹிட் அடித்த “jathi ratnalu” என்ற படத்தினை இயக்கிய அனுதீப், தமிழில் சிவகார்த்திகேயன் மூலமாக அடியெடுத்து வைக்கிறார்.

மேலும், பல ப்ளாக் பஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவரும், தற்போது ஷங்கர் படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

இப்படமும் முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

லண்டன் மற்றும் பாண்டிச்சேரியை மையப்படுத்தி கதை நகரவிருப்பதாக தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில இந்த படம் உருவாகவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் டூயட் பாடும் சித்தி

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் டூயட் பாடும் சித்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்த இவர் மும்பையைச் சேர்ந்தவர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், Vels Film International Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில், சிலம்பரசன் TR முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘வென்று தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமாகிறார்.

தற்போது படக்குழு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Official Simbus heroine Siddhi Idnani in Venthu Thaninthathu Kaadu

மோகனின் ’ஹரா’ அதிரடி லுக்..; மணிரத்னம்-ஷங்கர் வரிசையில் விஜய்ஸ்ரீஜி

மோகனின் ’ஹரா’ அதிரடி லுக்..; மணிரத்னம்-ஷங்கர் வரிசையில் விஜய்ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து பிஆர்ஓ நிகில் முருகன் நடிப்பில் உருவாகும் “பவுடர்”, பப்ஜி என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளிவர இருக்கும் வேளையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என பாராட்டு பெற்ற நடிகர் மோகனை வைத்து ‘ஹரா’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று வெளியிட்டுள்ளனர்.

நல்ல கதாபாத்திரம் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியோடு இருந்த மோகன், தனக்கு வந்த குணச்சித்திர வேடங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு காத்திருந்தார்.

‘தாதா 87’ திரைப்படம் மற்றும் ‘பவுடர்’ டீசரை பார்த்து விஜயஸ்ரீயிடம் கதை கேட்ட அவர், கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது இத்தனை வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது என்று பூரித்துப் போனார்

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

தொழில்நுட்பம் மற்றும் காட்சியமைப்பு மூலம் தனி பாதை அமைத்த மணிரத்னம், பிரமாண்டம் மூலம் தனி அடையாளம் ஏற்படுத்திய ஷங்கர் ஆகியோரை தொடர்ந்து எல்லோருக்கும் தெரிந்த, அறிமுகம் ஆன நபர்களை தனது வித்தியாசமான கோணத்தின் மூலம் தடம் பதிக்க வைக்கும் விஜயஸ்ரீ தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி மணிரத்னம், ஷங்கர் வரிசையில் இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.

இப்படத்தின் போஸ்டர், பலராலும் வியந்து பாராட்டப்பட்டு வருகிறது. இப்போஸ்டரில் பல குறிப்புகளை ஆங்காங்கே ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

மோகன் அவர்களின் வலது பக்கத்தில் கோவில் கோபுரமும் சென்னை சென் ட்ரல் இரயில் நிலையமும் இருப்பதை காண முடிகிறது.
அதுமட்டுமல்லாம், வலதுபக்க முகக்கண்ணாடியில் மசூதி இருப்பதையும் காண முடிகிறது.

இடது பக்கத்தில், துப்பாக்கி, தோட்டா, ஆம்புலன்ஸ் என பல மர்ம துணுக்குகளை ஒளித்து வைத்துள்ளார் இயக்குனர்.
கதை எதை நோக்கி பயணப்படும் என்பதை யூகிக்க முடியாதப்படி போஸ்டர் வடிவமைத்துள்ளார்.

“ஹரா” பட போஸ்டர் மட்டுமில்லாமல் விஜய் ஸ்ரீ இயக்கும் படங்களின் போஸ்டர்கள் (பப்ஜி, பவுடர் உள்ளிட்ட) அனைத்தும் நல்ல கிரியேட்டிவ்வாக வடிவமைக்கப்பட்டு வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Mohans re entry movie titled Hara

தெய்வமே.. தலைவா.. ரசிகர்கள் கோஷம்..; ரஜினி-கமல் புத்தாண்டு வாழ்த்து

தெய்வமே.. தலைவா.. ரசிகர்கள் கோஷம்..; ரஜினி-கமல் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2022 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தன் ரசிகர்கள் வீட்டின் முன்பு கூடியதால் ரஜினிகாந்த் தன் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.. ரஜினியை கண்ட ரசிகர்கள் தெய்வமே .. என்றும் தலைவா என்றும் கோஷம் எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘தலைவா’ என ரசிகர்கள் வாழ்த்தினர்.

ரஜினி தனது ட்விட்டரில். “அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ” என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் அறிக்கையில்..

நம் குடும்பத்தார்க்கு, பிறக்கும் இந்தப் புதிய ஆண்டும் நாம் கை குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறும் ஆண்டு மட்டும் அல்ல. கரம் கோத்துக் களமாட வேண்டிய ஆண்டு. கடந்த ஆண்டு நம் கட்சிக்கு வளரிளம் ஆண்டு. பயமறியா இளங்கன்றாய், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் பார்லிமென்ட் தேர்தலில் தனித்துக் களம் கண்டு, நாம் வென்றிருப்பது, மூன்றாவது பெரிய கட்சி எனும் பெயர் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையையும் தான். வரும் ஆண்டு நமக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான ஆண்டு.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும் என்ற நம் சிந்தனை, செயல் வடிவம் பெற வேண்டிய ஆண்டு. பார்லிமென்ட் தேர்தலில் செய்ததைவிடப் பல மடங்கு பணி நமக்குக் காத்திருக்கிறது.

இன்னும் ஓராண்டில் வரப்போகும் சட்டசபை தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தமிழகம் வளர்ச்சியை விரும்புகிறது என உலக அரங்கிற்கு நாம் விடுக்கப்போகும் அறை கூவல்.

நீங்கள், நான், நாம் அனைவரும் இணைந்து களம் கண்டால் தரணியில் தமிழகம் தழைத்தோங்கி, பாரதி கனவு கண்டது போல, வான் புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம்.

இன்று தொடங்குவது புத்தாண்டு மட்டுமல்ல. நம் வெற்றிப் பயணமும் தான். வெற்றிக்குத் தயாராகுங்கள். நாளை நமதே. அனைவருக்கும் நம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

என கமல் பதிவிட்டுள்ளார்.

நடிகர்கள் விஜயகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tamil Cinema Celebrities 2022 New Year wishes

நான்தான் அஜித்.. தல-ன்னு அழைக்காதீங்க.; நடிகரின் செயலுக்கு தலைவணங்கும் ராஜமௌலி

நான்தான் அஜித்.. தல-ன்னு அழைக்காதீங்க.; நடிகரின் செயலுக்கு தலைவணங்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு மேலும் மேலும் எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் இப்படக்குழுவினர் புரோமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு டிவி நேர்காணலில் அஜித் குறித்து ராஜமௌலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ராஜமவுலி பதிலளித்தாவது…

“ஒருமுறை அஜித்தை ஹோட்டலில் சந்தித்தேன். என்னை பார்த்த அஜித், சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்.

அப்போது என் மனைவியிடம் நான் அஜித் என்று அறிமுகம் செய்துக்கொண்டார். இந்த பழக்கம் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் தல என கூப்பிட்வேண்டாம், அஜித் அல்லது ஏகே என கூப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயத்திற்கு உண்மையாகவே தலை வணங்குகிறேன்” என பதிலளித்தார் ராஜமௌலி.

RRR director Rajamouli praises Ajith kumar

கரை வேஷ்டி அமைச்சரின் காதல் கதையை சொல்லும் திரைப்படம்

கரை வேஷ்டி அமைச்சரின் காதல் கதையை சொல்லும் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் T.ஜெயலஷ்மி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”.

கதைச்சுருக்கம் : கரை வேஷ்டி கட்டிய ஒரு அமைச்சரின் கறைபடாத ,கண்ணியமான காதல் கதை. போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார்.

தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி மூத்த குடிமக்களுக்கு நன்மையும், சமத்துவத்தை பற்றி பேசும் அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை.

கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக அட்சயா கண்டமுத்தன் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரமேற்று நடிக்கும் விஜயகுமார் ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு ஜெய் ஆகாஷுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் தேவிகா, பிர்லாபோஸ், ஸ்ரேவன் இவர்களுடன் நகைச்சுவை நட்சத்திரங்களாக ‘கலக்க போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் , ஈரோடு பிரபு’, விளையாட்டு வீரர் முனைவர் மா .ரா.சௌந்தராஜன்,A.P சேகர் ,திடியன் ஆகியோர் நடிக்கின்றனர் .

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது .

தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் இனிய பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது .அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது..

தொழிட்நுட்ப கலைஞர்கள் :

இயக்கம் – ஜெய் ஆகாஷ்

திரைக்கதை, வசனம் – T.ஜெயலஷ்மி

இசை – தேனிசை தென்றல் தேவா

ஒளிப்பதிவு – வே .இ ராஜா

பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி

எடிட்டர் – ஆண்டனி, ரியாஸ்

நடனம் – ஸ்ரீதர் ,தினா

ஸ்டண்ட் – விஜய்

கலை – பூபதி

மக்கள் தொடர்பு – செல்வரகு

Actor Jai Akash turns director with Amaichchar

More Articles
Follows