தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பவன் கல்யாண் நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘Attarintiki Daredi’ படத்தின் தமிழ் ரீ-மேக்கை சுந்தர் சி. இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் அவரது அத்தையாக நடிக்கிறார்.
இதில் சிம்புவுடன் முதன் முதலாக யோகி பாபுவும் இணைந்து நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது சிம்பு ரசிகர்களுக்கு செமயான தீபாவளி ட்ரீட்டாக இருக்கும் என நம்பலாம்.