38 வயதிலும் காதல் வரும்..: காதலனை கைபிடித்த நடிகை சந்திரா

38 வயதிலும் காதல் வரும்..: காதலனை கைபிடித்த நடிகை சந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய திரை, சின்னத்திரை என இரண்டு திரையிலும் நடித்தவர் நடிகை சந்திரா லட்சுமணன்.

இவர் தமிழில் ஸ்ரீகாந்த் உடன் ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவி உடன் நடித்த தில்லாலங்கடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் குறையவே கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்து வந்தார்.

வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், கோலங்கள், காதலிக்க நேரமில்லை, பாசமலர் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

அதன்பின்னர் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் நடித்து வரும் ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியல் தற்போது பிரபலம்.

38 வயதாகும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நடிகை சந்திராவுக்கும், அவருடன் நடித்த நடிகர் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் நெருக்கம் உருவானது-

இதனையடுத்து இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

இவர்களின் திருமணம் எளிமையான முறையில் கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட் நடைபெற்றது.

நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.

Serial actress Chandra Lakshman gets married

சிம்பு ரசிகர்களுக்காக ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

சிம்பு ரசிகர்களுக்காக ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

கௌதம் மேனனின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிய கலை இயக்குனராக ராஜிவ் நாயரும் பணிபுரிகின்றனர்.

இவர்கள் கூட்டணியில் எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார்.

ஏற்கனவே 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் நடக்க உள்ளது.

தற்போது இப்பட ஷூட்டிங் லொக்கேஷன்களுக்காக எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கௌதம் மேனன்.

Vendhu Thanindhathu kaadu movie shooting spot picture

அநீதிக்கு எதிரான குரல் அரசியலால் நீர்த்துப் போகிறது.. அவரவர் வழியில் செயல்படுவோம்..; அன்புமணிக்கு சூர்யா பதிலடி

அநீதிக்கு எதிரான குரல் அரசியலால் நீர்த்துப் போகிறது.. அவரவர் வழியில் செயல்படுவோம்..; அன்புமணிக்கு சூர்யா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஜெய்பீம் படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு கடிதம் அனுப்பி பல கேள்விகள் கேட்டார் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியிருந்தார்.

அவரின் கடிதத்தில் 9 வினாக்களை எழுப்பி அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதில்…

’’அன்புள்ள நடிகர் சூர்யாவுக்கு…

தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாகத் திகழ்ந்த நடிகர் சிவகுமாரின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும் தமிழ்த் திரையுலகில் முன்னேறி வருகிறீர்கள்.

ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்குத் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மனநிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும்கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரைக் கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்தப் பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும்தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை.

ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்குப் பல ஐயங்கள் உள்ளன. அவர்களின் நியாயமான ஐயங்களைப் போக்க அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். அந்த வினாக்கள்:

1. ‘ஜெய்பீம்’ உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தானா?

2. உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்றால், உண்மை நிகழ்வு நடந்த இடம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முதனை கிராமமா? அல்லது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோணமலை கிராமமா?

3. உண்மை நிகழ்வில் முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் ஜெய்பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது.

4. ராஜாக்கண்ணுவைப் படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு ராஜாக்கண்ணு, அவருக்காகப் போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.க்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குநரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

5. காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் தமது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும்தான் தமக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். அவ்வாறு இருக்கும்போது திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சித் தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்?

6. கொடூர காவல் அதிகாரியாக நடித்திருப்பவர் வீட்டில் தொலைபேசும் காட்சியில் வன்னியர்களின் புனிதச் சின்னமான அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி வைக்கப்பட்டிருந்தது ஏன்?

7. படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை (Controversy) எழுப்பி, அதைப் பேசுபொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது?

8. ஜெய்பீம் என்றால் அம்பேத்கருக்கு வெற்றி…. அம்பேத்கரியத்துக்கு வெற்றி என்று பொருள். அம்பேத்கர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்று கற்பிக்கவில்லை. ஆனால், ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இதுதான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா?

9. ராஜாக்கண்ணுவின் படுகொலை குறித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தங்களுக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், ராஜாக்கண்ணுவின் படுகொலைக்காக மற்ற கட்சிகளை இணைத்து முதலில் போராட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. ராமதாஸ் கடந்த 42 ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த உண்மைகள் உங்களுக்குத் தெரியாதா?

திரைப்படங்கள் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தக் கூடாது. நீங்கள் விரும்பினால் உங்களின் கவுண்டர் சமுதாயத்தை போற்றும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுக் கொள்ளலாம். மாறாக இன்னொரு சமுதாயத்தை, படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.

இதை உங்களுக்கு மட்டுமல்ல…. இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்தி தங்களின் சாதிவெறிக்குத் தீனி போட நினைக்கும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஜெய்பீம் திரைப்படம் உங்களை புனிதராகக் காட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராகப் பொதுமக்களும், இளைஞர்களும் கொந்தளித்த பிறகும், படக்குழுவினரின் தவறுகளை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும் கூட, தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு ஒரு வாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் அமைதி ஆபத்தானது.

இவ்வாறு அன்புமணி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் அன்புமணிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் சூர்யா. அதில்…

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம்.

தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது’ என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு.

பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன்.

அதேபோல, ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.

இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள்.

அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.

எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘பெயர் அரசியலால்’ மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,
சூர்யா

Actor Suriyas reply to Politician Anbumani regarding Jaibhim issue

ஷங்கர் மகளை தொடர்ந்து பிரபல இயக்குநரின் மகளும் ஹீரோயினாகிறார்

ஷங்கர் மகளை தொடர்ந்து பிரபல இயக்குநரின் மகளும் ஹீரோயினாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

முத்தையா இயக்கும் இந்தப் படம் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் அதிதி.

தற்போது இவரை போல பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி என்பவரும் நாயகியாக நடிக்கவுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரஸ்வதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது-

ஏற்கனவே ராஜீவ்மேனன் இயக்கிய ஜிவி. பிரகாஷின் ’சர்வம் தாள மயம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

Rajiv Menon daughter Saraswathi entry in kollywood

விஜய்க்கு நாயகியாக நடித்ததை விட ரஜினிக்கு தங்கையாக நடிக்க கீர்த்திக்கு கொடுக்கப்பட்ட அதிகப்பட்ச சம்பளம் இதோ

விஜய்க்கு நாயகியாக நடித்ததை விட ரஜினிக்கு தங்கையாக நடிக்க கீர்த்திக்கு கொடுக்கப்பட்ட அதிகப்பட்ச சம்பளம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அண்மையில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

மேலும் தன் அக்கா ரேவதி தயாரிப்பில் உருவாகும் வாஷி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தற்கு கீர்த்திக்கு வழங்கப்பட்ட சம்பளம் 2 கோடி என தெரிய வந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

இதற்குமுன் 2018ல் சன் பிக்சர்ஸ் தயாரித்த விஜய்யின் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருத்தார் கீர்த்தி. அப்போது கீர்த்தியின் சம்பளம் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவில் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

Keerthy Suresh salary revealed for Annaatthe

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ பட ரிலீஸ் தேதி அப்டேட்

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ பட ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் இயக்கம்.. மறு பக்கம் நடிப்பு என பிஸியாக வலம் வருபவர் பிரபுதேவா.

தமிழில் மட்டும் இவரது கைவசம் அதாவது இவரது நடிப்பில் ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பஹீரா’ ஆகிய படங்கள் உள்ளன.

தற்போது இந்த படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி 4 நாயகிகளுடன் பிரபுதேவா நடித்த ‘பஹீரா’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‛பொன்மாணிக்க வேல்’.

ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்த படத்தில நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க. இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் சூட்டிங் முடித்து பல மாதங்கள் ஆனநிலையில் கொரோனா பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் பொன் மாணிக்கவேல் தியேட்டர்களில் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 19ல் ரிலீஸ் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இத்துடன் படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Prabhu Deva’s Pon Manickavel release date announced

More Articles
Follows