நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமுத்திரகனி பேச்சு

New Project (3)ஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள் …மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர்…

சமுத்திரகனி பேசும் போது இப்போ இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள்..காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ள பட்டு விட்டோம்…அடுத்த தலை முறையினரின் கதி என்னவாகும் …யோசித்து பார்க்க வேண்டும்…ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.மேற்கு தொடர்ச்சி
மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள்..அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு…எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான்..அதை பாது காக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது..நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாது காக்கணும்…நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசினார்
விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர்…
விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும்
செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்

Overall Rating : Not available

Latest Post