ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani in jj biopicமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் பாரதிராஜா & விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் Iron Lady என்ற தலைப்புடன் பர்ஷ்ட் லுக்கை வெளியிட்டார் பிரியதர்சினி. ஜெயலலிதா ஆக நித்யா மேனன் நடிக்கிறார்.

தற்போது விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா படம் பற்றி தகவல்கள் வந்துள்ளன.

ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தன.

ஆனால் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.

இந்நிலையில் முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

ஆனால், அது எந்த மாதிரியான கேரக்டர் என்பது சர்ப்ரைஸ். பட ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என கூறப்படுகிறது.

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaanduஇயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் “வாண்டு”. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு.

இயக்குநர் படம் பற்றி கூறுகையில்

1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றார்.

எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.

பாக்யராஜ் – சிவகுமார் கலந்து கொண்ட ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட இசை விழா

பாக்யராஜ் – சிவகுமார் கலந்து கொண்ட ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mehandi Circus audio launch photosகே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

மாரி செல்வராஜ் :

ஜீவா மூலமாக தான் சரவணன் அவர்களை சந்தித்தேன். திறமையான அனுபவமுள்ள மனிதர் அவரின் அறிமுக படமான இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

சுவேதா திறமையான நடிகை நவாசுதீன் சித்திக் படத்தில் ஸ்வேதாவின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய இடம் கிடைக்கும் .

ஹிட் கொடுக்கும் பிரபலங்கள் அனைவரும் இந்த படத்தில் உள்ளார்கள். படம் பழைய நினைவுகள் மீண்டும் நம் நினைவிற்கு கொண்டு வரும்.

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

லெனின் பாரதி :

படத்தின் பாடல்கள் அனைத்தும் நம்மை நாடோடிகளாகவே மாற்றுகின்றன. இந்த படம் அற்புதமான கதை என பாராட்டினார்.

எச். வினோத் :

புதுமையான கதை இது. படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. நிச்சயம் வெற்றி படமாக அமையும்.

நலன் குமாரசாமி :

சரவணனின் இயக்கம் நிச்சயம் விதியாசனாக இருக்கும். ஆர்டிஸ்ட்ஸ், டெக்னீசியன் என அனைவர் மத்தியிலும் நல்ல மதிப்பு கொண்டவர் என பேசினார்.

இயக்குனர் எழில் :

ராஜு முருகன் அண்ணனு சொன்னதும் இந்த நிகழ்ச்சிக்கு வரேன்னு சொல்லிட்டேன். சரவணன் லேட்டா வந்தாலும் சிறப்பான கதையோடு வந்திருக்காரு. பாடல், ட்ரைலர் என அனைத்தும் சிறப்பாக ஒரு நேர்த்தியான படமாக அமைந்துள்ளது.

விஜய் இயேசுதாஸ் :

சான் ரோல்டன் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போதைய தலைமுறைக்கு ஏற்றார் போல இருக்கும். பாடல்கள் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளன. எனக்கும் முதலில் பாட சிரமமாக இருந்தது. ஆனால் சான் ரோல்டன் ஒத்துழைப்பால் சிறப்பாக அமைந்துள்ளது.

ஞானவேல் ராஜா :

வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.

அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.

சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும்.

இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும் என கூறினார்.

செல்வா :

இளையராஜாவின் இசை எப்படி தனி விருந்தாக இருக்குமோ லாட்ஜ் போல் சமையல் கிங் ரங்கராஜ்.

முதல் முதலாக நடிக்க வந்துள்ளார். அவரின் உழைப்பு வெற்றியை கொடுக்கும் . எடிட்டர், டெக்னீஷியன் என அனைவரும் அற்புதமாக பணியாற்றி உள்ளனர். விக்னேஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு :

சர்க்கஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் எனக்கு அந்த அனுபவத்தை கொடுக்கும்.

கரு. பழனியப்பன் :

சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள்.

சரவணன் இயக்குனராக ஆடைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார்.

இருப்பதலிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார்.

தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும்.

2D ராஜசேகர் :

ராஜி முருகன் ஜோக்கர் படத்தை போல இந்த படமும் இருக்கும். படத்தின் கதையை கேட்கும் போதே அருமையாக இருந்தது.

படத்தின் விசுவல் சூப்பராக உள்ளது.

சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல் :

ஞானவேல் ராஜா 18 வருடமாக சினிமாவை காதலித்து வருகிறார். இந்த படம் வெற்றிப் படமாக இருக்கும்.

யுகபாரதி :

என்னுடைய கவிதை அரங்கேறும் நாள் இன்று. எனக்கு சினிமாவில் பலரை அறிமுகப்படுத்தியவர் சரவணன். சரியான நண்பர்.

ராஜு முருகன் தேசிய விருது வாங்கிய போது எனக்கு சரவணன் தான் நினைவிற்கு வந்தார்.

50, 60 ஆண்டுகளுக்கு பெயர் சொல்லும் இயக்குனராக சரவணன் இருப்பார்.

எனக்கு நல்ல சினிமா, அரசியல், கவிதை என அனைத்தையும் கொடுத்தது சரவணன் தான்.

திறமைகளை அறிந்து பராட்டுபவர் சிவகுமார். மாபெரும் திறமையும் கொண்டவர்.

இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அது நடக்கவில்லை. ஆனால் அவரது வாழ்த்து சரவணன் படத்திற்கு கிடைத்துள்ளது.

ராஜு முருகன் :

இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும் தான் .

சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அணைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு.

கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.

DOB செல்வா மிகவும் திறமையானவர். அதனால் தான் ஜிப்ஸி படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன்.

மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா தான்.

இப்படம் எண்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.

சான் ரோல்டன் இசை தான் இப்படத்திற்கு முக்கியமான ஒன்று.

ஸ்வேதா :

இந்த படத்தில் நடிக்க வாய்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவர்க்கும் நன்றி.

ரங்கராஜ் :

இது எனக்கு முதல் மேடை. சரவணன் படத்தில் ஹீரோவானது மகிழ்ச்சி. இது கடவுள் கொடுத்த வரம். மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.

இயக்குனர் சரவணன் :

யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் பேச கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டன் இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.

சான் ரோல்டன் :

சரவணன் சிறந்த படைப்பாளி. படத்தை அறிமுகப்படுத்த தலைப்பே போதும் அது இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

மக்களுக்கான தரமான படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும்.

பாக்யராஜ் :

கரு. பழனியப்பன் சரவணினின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார்.

சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார்.

இந்த படத்தில் யுக பாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம்.

இளையாராவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றார்.

சிவகுமார் :

ஈஸ்வரன் பெற்ற மகன், நான் பெறாத மகன் ஞானவேல் ராஜா. சூரியா, கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை கொடுத்தவர் ஞானவேல் ராஜா. அந்த படங்களின் வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் இருக்கும் என்றார்.

முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி – விஷால்

முதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalTFPC செயலாளர் கதிரேசன் பேசும்போது,

மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் குறையும். குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயனடைவார்கள். தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மைக்ரோப்ளக்ஸ் ஆல்பர்ட்-க்கும், ப்ரைம் போக்கஸ் ரஞ்சித்திற்கும் நன்றி.

மைக்ரோபிலிஸ் ஆல்பர்ட் பேசும்போது,

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என் விஷால் என்னிடம் பல கேட்டார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார். ரூபாய் 2 லட்சம் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக்கொண்டேன். பராமரிப்பு செலவைத் தவிர மற்றவைக்கு கட்டணம் கிடையாது. அதேபோல், 7 கோடிக்கு கணக்கையும் சமர்ப்பித்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்.

TFPC துணை தலைவர் பார்த்திபன் பேசும்போது,

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம் தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும் போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்கிற விஷாலை நான் தரிசிக்கிறேன். ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா? என்று ஆச்சரியமாக இருந்தது. இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்திற்கு எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.

TFPC செயலாளர் துரைராஜ் பேசும்போது,

நீண்ட நாட்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வேண்டும் என்பது விஷாலின் கனவு. இன்று அதை நிறைவேற்றியிருக்கிறார் விஷால். பல ஆண்டுகளாக கொத்தடிமைகள் போல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அதற்கு உதவிபுரிந்த இரு நிறுவனங்களுக்கும் நன்றி.

TFPC தலைவர் விஷால் பேசும்போது,

இந்த ‘மைக்ரோப்ளக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாகஇலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளக்ஸ்’ ஆல்பர்ட்-க்கு நன்றி.

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரிய நிறுவனமான மைக்ரோப்ளக்ஸ்-ன் ரஞ்சித்தை வரவேற்கிறேன். அதேபோன்று, ‘ப்ரைம் போக்கஸ்’ உடன் இணைவதிலும் மகிழ்ச்சி. ஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் ஆல்பர்ட். மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது. ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள்.

இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்து விடலாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது. ‘இளையராஜா 75’ விழா பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் YMCA நந்தனத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமையடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது எல்லோருடைய கடமை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மென்மேலும் வளரணும். அதனுடன் சேர்ந்து மைக்ரோப்ளக்ஸ்-ம், ப்ரைம் போக்கஸ்-ம் வளரணும்

ராம் கோபால் வர்மாவின் பாராட்டை பெற்ற பட்டறை டீசர்

ராம் கோபால் வர்மாவின் பாராட்டை பெற்ற பட்டறை டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram gopal varmaஇருண்ட பக்கங்களை திரையில் கொண்டு வரும் படைப்பாளிகள், உலகின் நடப்பு நிகழ்வுகளை சினிமாவில் சொல்லக்கூடிய ஒரு பரந்த பார்வையை கொண்டுள்ளனர். மிகச் சிறந்த நேர்மறையான முறையில் ‘ராவான’ திரைப்படங்களை வழங்கிய, என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, எப்போதும் திறமையாளர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியை 1996ல் வெளியான அவரது ‘சத்யா’ திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் விருதுக்கான நடிப்பை அவரிடம் இருந்து வெளிப்படுத்தியது. அப்படிப்பட்ட ராம் கோபால் வர்மாவுடம் இருந்து பட்டறை படக்குழுவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர் டீஸரில் வந்த கலர் ட்ரீட்மெண்ட் மற்றும் மாறுபாடுகளை பாராட்டினார்.

இந்த உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கூறும்போது, “இது நம்ப முடியாத ஒரு தருணம், நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். குறிப்பாக சத்யா திரைப்படம் ஒரு இயக்குனராக எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த படம். அதை பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் இந்த படத்தை பற்றி நல்ல வார்த்தைகளை கூறியதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பட்டறை சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலான பெண்கள் கடத்தலை பற்றி பேசும் படம். இயக்குனர் கே.வி.ஆனந்த் உடன் பணியாற்றிய இயக்குனர் பீட்டர் ஆல்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். டீஸர் பற்றிய ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது, மேலும் படக்குழுவிற்கு நேர்மறையான ஊக்கத்தை அதிகரித்துள்ளது.

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜின் மனைவியும் நடிச்சாரே தெரியுமா.?

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜின் மனைவியும் நடிச்சாரே தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj wife Sathya Prema too acted with Rajini in Petta movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம்தான் பேட்ட.

இதில் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் தேவையான அனைத்து மாஸ் காட்சிகளையும் வைத்திருந்தார். எனவே பேட்ட படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் வில்லனை பழிவாங்க வட இந்தியா செல்வார். அப்போது ரஜினிக்கு உதவி செய்பவராக ஒருவர் நடித்திருப்பார் அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் அப்பா கஜராஜ்.

அதுபோல் கார்த்திக் சுப்பராஜின் மனைவியும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். தெரியுமா?

ஹாஸ்டர் வார்டனாக ரஜினி சேரும்போது அவரிடம் ஒரு பெண் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார். அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் மனைவி. அவரது பெயர் சத்ய பிரேமா.

Karthik Subbaraj wife Sathya Prema too acted with Rajini in Petta movie

Karthik Subbaraj wife Sathya Prema too acted with Rajini in Petta movie

 

More Articles
Follows