தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர், சீயோன் ராஜா எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் படம் “சமூக விரோதி’.
இந்த படம் அனைத்து பணிகளும் முடிந்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக திரைப்பட தணிக்கை குழுவினர் படம் பார்ப்பதாக அனுப்பி வைக்கப்பட்டது.
‘சமூக விரோதி’ படத்தை பார்த்து முடித்த தணிக்கை குழு அதிகாரிகள் என்ன வகை சான்றிதழ் கொடுக்க என்று முடிவெடுக்க முடியாமல் தவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மறு ஆய்வு குழுவிற்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
Samuga Virodhi movie confused censor board