தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.

தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actor Jaivanth sponsored Cooling Glass to Police departmentநேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது.
அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படா வண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு தலா ஒரு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

ஜெய்வந்த் ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது ‘அசால்ட்’ எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை தனக்கு ஏற்படுத்தித் தந்த காவல் துறையினருக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெய்வந்த்.

Actor Jaivanth sponsored Cooling Glass to Police department

சென்னைவாசிகளே… அடுத்த தலைமுறைக்கு நல்லது செய்ய ஓர் அரிய வாய்ப்பு

சென்னைவாசிகளே… அடுத்த தலைமுறைக்கு நல்லது செய்ய ஓர் அரிய வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A great opportunity to do good thing for Namma Chennai சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தவறான பிளாஸ்டிக பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும் , சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்துகிறது.

சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்படுகிறது.

நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் ?

வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா? எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா?

வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா?

ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா ?

நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த ‘இயற்கையோடு இணைவோம்’ இயக்கம்.

ஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுக்கும் செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெறுகிறார்கள் .

அக்னி தொழில்நுட்பக் கல்லூரி, தாழம்பூரில் காலை 10 மணி முதல் 8 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அப்போது சுழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழலை செழுமையாக வளர்க்கும் சாத்தியங்களையும் விவசாயத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் வருங்கால சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளை மேம்படுத்தும் திட்டங்களையும் ஆராய்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்.

மாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்படும் .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படும்.

சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்படும் .

உயிர் வாழும் ஒரே கிரகம் பூமி மட்டும்தான். இருக்கிற ஒரு பூமியை மரங்கள் வளர்த்துப் பசுமை போர்த்திக் காப்பாற்றுவோம். ஏனென்றால் நம் பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .

இந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து “இயற்கையோடு இணைவோம்” என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்கள் நம்ம சென்னை இயக்கத்தினர்.

மேலும் விவரங்களுக்கு:
8220865671, 8110996026

A great opportunity to do good thing for Namma Chennai

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shetty crowned as Miss South India 2016 by replacing Meera Mithun மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.

மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது..

2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி..

தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.

இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.

சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கதம் கதம், சவாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

https://www.facebook.com/misssouthindia/

Sanam Shetty crowned as Miss South India 2016 by replacing Meera Mithun

தண்டல்காரன் பாடல் பாடியவரின் அடுத்த அதிரடி ‘வெண்பனி இரவில்’

தண்டல்காரன் பாடல் பாடியவரின் அடுத்த அதிரடி ‘வெண்பனி இரவில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thandalkaran Song fame Ranjiths next song is Venpani Iravilசூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திற்கு பாடல் எழுதிய தமிழணங்கு தான் இந்தப்பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடலுக்கு ஜுபின் இசை அமைத்துள்ளார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் உன்னத்தான் நினைக்கையிலே என்கிற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Thandalkaran Song fame Ranjiths next song is Venpani Iravil

ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Deluxe selected for Fantasia International Film festivalசமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.

கனடாவின் மான்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையில் நடைபெறும் இவ்விழா, ‘வட அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகப்பட்ட வகையான திரைப்படங்களை திரையிடும் பெரு விழா’ என சிறப்பு பெயர் பெற்றது.

இத்திரைப்பட விழாவில் லியம் ஹெம்ஸ்வர்த்தின் ‘கில்லர்மேன்’ மற்றும் ரிச்சர்ட் ட்ரேஃபஸ்ஸின் ‘பாய்க்நன்ட் அஸ்ரோநாட்’ ஆகிய திரைப்படங்களும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Super Deluxe selected for Fantasia International Film festival

More Articles
Follows