இணையத்தில் புதுப்படங்கள்; நடவடிக்கை எடுக்காத விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் கேள்வி

vishalதியேட்டர்களில் படங்களில் வெளியாகும் அதே நாளில் திருட்டுத்தனமான இணையங்களிலும் படங்கள் வெளியாகிறது.

இந்த நடவடிக்கையை தடுக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக ராஜா ரங்குஸ்கி மற்றும் ஒரு குப்பை கதை படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சக்தி வாசன் மற்றும் முகமது அஸ்லாம் ஆகியோர் மனு அளித்தனர்.

பின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சிறு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இணையதள திரைப்படத் திருட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

Overall Rating : Not available

Latest Post