மெர்சல் பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி

மெர்சல் பிரச்சினை; விஜய்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Suresh Kamatchi supports Vijay in Mersal issueமெர்சல் படம் நாளை வெளியாகவுள்ளது. ஆனால் இப்படம் தலைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வந்த்து.

இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது-..

மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது.

மத்தியில் விலங்குகள் நல வாரியம்…இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு மனிதனும் பயன்படும்படியான ஒரு சங்கிலித் தொடர் அமைப்பு!

உண்டு வாழ்வதிலும், உணவை உற்பத்தி பண்ணுவதிலும் இவர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் பல ஆயிரம் ஆண்டுகளாக.

ஆனால் நேற்று முளைத்த விலங்குகள் நல வாரியம் பல கோடிகளில் எடுக்கப்பட்ட மெர்சல் திரைப்படத்தை இப்போ வரைக்கும் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது. காரணம் விஜய் ஒரு பக்கா தமிழன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிற்கிறார். அனிதா வீட்டில் போய் ஆறுதல் சொல்கிறார். இதெல்லாம் செய்தால் நாங்க மட்டும் சும்மா இருந்துவிடுவோமா? எங்கள் அதிகார பலத்தைக் காட்டமாட்டோமா? என குடைச்சல் கொடுக்கிறது இந்த வாரியம் மூலமாக.

இந்த வாரியத்திற்கு குறிக்கோள் விலங்குகள் வதைக்கப்படுவது முக்கியமல்ல. அதை யார் வதைக்கிறார்கள் என்பதே முக்கியம்.

விலங்குகள் வதை என்பது என்ன தெரியுமா? ஒருவன் ஒரு நாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டானே, அதுதான் வதை.

எங்கள் சினிமாவிற்கு நீங்கள் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. சிகரெட் விற்பார்கள். சரக்கு கோடிகோடியாய் விற்பார்கள். ஆனால் சினிமாவில் அதைக் காட்டிவிடக்கூடாது. கீழே எழுத்துப் போட வேண்டும். அல்லது எடுக்கவே கூடாது.

விலங்குகளை பாதுகாக்க இந்த வாரியங்கள் சினிமாவைக் கூர்ந்து நோக்கியதைத் தவிர, தமிழர்களின் சல்லிக்கட்டுக்கெதிராக போர் தொடுத்ததைத் தவிர வேறு உருப்படியாக என்ன செய்திருக்கிறது?

வெயில் நேரங்களில் தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ தண்ணீர்கூட வைப்பதில்லை.

சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறந்துபோகும் ஆயிரக்கணக்கான நாய்கள், மான்கள் மற்ற விலங்குகளைப் பாதுகாக்க என்ன செய்தது?

சினிமாவில் எந்த விலங்கையோ பறவைகளையோ பயன்படுத்தினால் உடன் ஒரு மருத்துவரை வைத்து அந்த உயிருக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்ற சான்றிதழ் வரை வாங்கித் தருகிறோம். பின் எப்படி வதைக்கப் பட்டதாய் படம் பார்க்கும்போது முடிவெடுக்கிறீர்கள்?

விஜய் மிக நன்னடத்தை உள்ளவர். மேடைகளில் கவனமாக வார்த்தைகளைக் கையாள்பவர். தானுண்டு தன் சினிமா உண்டு என்று இருப்பவர்.

தன் இனத்தின் மீது எல்லோருக்கும் இருக்கும் அக்கறை அவருக்கும் உண்டு.

யார் யாரெல்லாமோ முதல்வர் கனவோடு கம்பு சுத்தவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அதிகாரம் ஆளப் போகிறான் தமிழன் என்று பாட்டு போட்டவுடனே உங்களுக்கு குருதி கொதிக்கிறது..

அன்று ஆண்ட அம்மா ரஜினி அவர்களை போக்குவரத்து நெரிசலில் நிற்க வைத்தார். கோபம் கொண்ட ரஜினி இறங்கி கால்நடையாய் போயஸ் போனார். அடுத்த ஆட்சி மாற்றத்தில் அவர் குரல் பெரும்பங்கு வகித்தது.

எங்கள் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் பலகோடி மக்கள் கொண்ட நடிகர். அவர் படங்களில் அவரை நிம்மதியாக நடிக்கவிட்டு மக்களை மகிழ்வாக வைத்திருக்க உதவுங்கள். இந்த சின்ன புள்ளைக சார் குச்சியெடுத்து ஒளிச்சி வச்சிட்டான் சார்ன்ற மாதிரி விலங்குகள் நல வாரியம் போன்ற விளையாட்டை ஆடி இடையூறு செய்யாதீர்கள்.

சும்மா சீண்டி பயமுறுத்துவோம்னு இறக்கி விட்டுறாதீங்க. சினிமாவை இந்த மாதிரி பிரச்சனைகளிலிருந்து காப்பாத்துங்க.

இயக்குநர் இராமநாராயணன் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர். அதில் பாதி விலங்குகளை வைத்தே படமெடுத்துள்ளார். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத பண்பாளர்.

தயாரிப்பாளர் சங்க செயல்பாட்டில் முழுமையாக எல்லோரையும் அரவணைத்துச் சென்றவர். அவரின் மகன் முரளி எடுத்திருக்கும் இப்படம் ஏகப்பட்ட இடையூறுகளைக் கடந்து வந்திருக்கிறது. அவருக்காகவும் இந்தப் படம் நல்லபடியாக வெளிவர வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

மெர்சல் எப்போ வெளியானாலும் மெர்சல் வெற்றி பெற வாழ்த்துகள்.

உங்களுக்கு தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

– சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

Producer Suresh Kamatchi supports Vijay in Mersal issue

மெர்சலை வரவேற்று வீடியோ வெளியிட்ட விசிறி படக்குழு

மெர்சலை வரவேற்று வீடியோ வெளியிட்ட விசிறி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Welcome Song for MERSAL By VISIRI movie Teamதமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்.

எம்.ஜி.ஆர். – சிவாஜி , ரஜினி – கமல் என தொடர்ந்தது, இன்று
தல–தளபதி ரசிகர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி”

“J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்” “மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி”

படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு, உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “மெர்சல்”படத்தை வரவேற்று ஒரு காணொளியை இன்று வெளியிட்டுள்ளனர்.

ஒரு படத்தினை வரவேற்று இன்னொரு படக்குழு காணொளி வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

Welcome Song for MERSAL By VISIRI movie Team

அருவி-யை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன்

அருவி-யை பார்த்து அசந்து போன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aruvi movie posterடிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”.

இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண் பிரபுவையும், படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார்.

இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Sivakarthikeyan praises Aruvi movie team

விக்ரம்-கார்த்தி ரசிகர்களுக்கு இன்று மெகா விருந்து

விக்ரம்-கார்த்தி ரசிகர்களுக்கு இன்று மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sketch Teaser And theeran adhigaram ondru trailer release on 17th Oct 2017இன்று அக். 17ஆம் தேதி நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கவுள்ளனர்.

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்துள்ள படம் ஸ்கெட்ச்.

இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்க, தமன் இசையமைத்துள்ளார்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் டீசரை இன்று வெளியிடுகின்றனர்.

இத்துடன் கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ட்ரைலரும் இன்று வெளியாகிறது.

இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்துள்ளார்.

Sketch Teaser And theeran adhigaram ondru trailer release on 17th Oct 2017

விஜய்-அஜித்-சூர்யா படங்களை சுசீந்திரன் ஏன் இயக்கவில்லை தெரியுமா?

விஜய்-அஜித்-சூர்யா படங்களை சுசீந்திரன் ஏன் இயக்கவில்லை தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran revealed why he not directed Vijay Ajith Suriya moviesசுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சுதீப் கிருஷ்ணா விக்ராந்த், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுசீந்திரன்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளதாவது…

“‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை.

விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். பதில் பின்னர் ஆசோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார்.

அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை.

எனக்கு எல்லாம் தீபாவளியும் மகிழ்ச்சியான தீபாவளிதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன்.
என்று பதிலளித்தார்.

Suseenthiran revealed why he not directed Vijay Ajith Suriya movies

தடைகளை உடைத்து (எச்சரிக்கையுடன்) மெர்சல் அரசன் வர்றான்

தடைகளை உடைத்து (எச்சரிக்கையுடன்) மெர்சல் அரசன் வர்றான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayநாளை தீபாவளி தினத்தன்று விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மெர்சல் திரைப்பட வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால், இப்படம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.

படத்தின் டைட்டில், கேளிக்கை வரி, விலங்குகள் நல வாரியம் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

பறக்கும் புறா மற்றும் சில விலங்குகள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

விலங்குகள் கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் செய்யப்பட்வை என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்தனர்.

ஆனால் அதற்கான போதிய ஆதாரமில்லை என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் விளக்கமளித்தது.

நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மெர்சல் படத்தில் விலங்குகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் சுமார் 20 நிமிடங்களை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இதுபோன்ற பிரச்சனைகளை மீண்டும் ஏற்படக் கூடாது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வழங்கப்பட்ட சான்றிதழ் விலங்குகள் நல வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தணிக்கைக் குழுவும் மெர்சல் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே நாளை இப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

Without any issues Mersal release confirmed on Diwali 2017

More Articles
Follows