பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Prabhas Saaho set to release on 15th August as Independence day specialபாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சாஹோ’.

சுஜீத் இயக்கியுள்ள இந்த படத்தில் ‌ஷரத்தா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.

இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில், படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Prabhas Saaho set to release on 15th August as Independence day special

Overall Rating : Not available

Latest Post