பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது

பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Team Black Sheepபிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.

யூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது

வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது

வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kattil movieமேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி,கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கட்டில். திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சினிமாதுறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக கட்டில் திரைப்படத்தில் பாடல் எழுதுவதை இப்படக்குழு கொண்டாடிவருகிறது ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.

சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு கதை,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார் பி.லெனின்.

நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் விதமாக கட்டில் திரைப்படத்தில் தனித்துவமான மொழி நடையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து.

1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் “நிழல்கள்” படத்தில் இளையராஜாவின் இசையில் “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை பெற்றவர்.

ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு இணைந்து 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். மணிரத்னம்,ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களோடும், சிவாஜி,ரஜினி,கமல் விஜய்,அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடும் தனது பாடல் பங்களிப்பை வழங்கியவர். பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அக்காதமி போன்ற பல விருதுகளையும் பெற்றவர். கட்டில் திரைப்பட குழுவின் சார்பாக வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாலிடிக்ஸ் ஒரு பக்கம்.; கொரோனா மறுபக்கம்.. மாஸ்டர் இசை விழாவில் மாற்றம்.!

பாலிடிக்ஸ் ஒரு பக்கம்.; கொரோனா மறுபக்கம்.. மாஸ்டர் இசை விழாவில் மாற்றம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master audio launchலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’.

இதில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய் படம் போலவே அவரின் இசை வெளியிட்டு விழா பேச்சுக்கும் பல ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

ஆனால் இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலேயே கூட்டம் இருக்க வேண்டுமென முடிவெடுத்து உள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

இதன் பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

பிகில்’ படத்தின் இசை வெளியிட்டு விழா, ஒரு கல்லூரியில் நடந்த போது தள்ளுமுள்ளு நடந்தது.

ரசிகர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

அவர்களை தாக்கியதற்காக விஜய் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

மேலும் சர்கார் & பிகில் இசை விழாக்களில் ஆளும் அதிமுக அரசை அதிகமாகவே தாக்கி வருகிறார் விஜய்.

என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் சரியாக இருக்கும் என்றார்.

இந்த அரசியல் பேச்சு ஒரு பக்கம் இருக்க… மற்றொரு பக்கம் கொரோனா பீதியும் அதிகரித்துள்ளது.

‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவிற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்ட போது கொரோனாவினால் அதிக கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

பெரிய கூட்டத்தை திரட்டினால் அது பல சங்கடங்களை உருவாக்கும் என்பதாலும் மாஸ்டர் இசை விழாவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.

27 ஆம் தேதி முதல் படங்களை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் மறுப்பு

27 ஆம் தேதி முதல் படங்களை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Distributors associationஇன்று (10.03.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர், செயலாளர் திரு. மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் திரு. பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வால்டர் சமூகத்திற்கு அவசியமான படம் – நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா !

வால்டர் சமூகத்திற்கு அவசியமான படம் – நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress shirin kanchwala“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படம் மூலம், தமிழக இளைஞர்கள் மனதை கிரங்கடித்த, நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள “வால்டர்” படத்தின் வெற்றிக்காக பேரார்வத்துடன் காத்திருக்கிறார்.

படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா கூறியதாவது…

இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நான் சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான விடயத்தை பதற்றம் தரும் வகையில் கூறுவதாக இருந்தாலும், இயக்குநர் U.அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார். சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது ஆனால் இப்படத்தில் இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார். இப்படியான முக்கியதுவம் மிகுந்த படைப்பில் நானும் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. சிபிராஜ் ஒரு அற்புதமான நடிகராக, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். படப்பிடிப்பில் பல நேரங்களில் வசனங்களை சரியாக உச்சரிக்க, நான் அதிக நேரம் எடுத்து கொள்வேன். அம்மாதிரியான நேரங்களில் பொறுமையாக உடனிருந்து உதவி செய்வார். இப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நட்டி, சமுத்திரகனி, ரித்விகா மற்றும் பலருடன் நடித்தது ஒரு மிகச்சிறந்த அனுபவம். படத்தின் வெளியீட்டிற்காக பேரார்வத்துடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சதுரங்கவேட்டை நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி, ரித்விகா, யாமினி சந்தர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் மார்ச் 13 வெள்ளிகிழமை 2020 அன்று “வால்டர்” படம் திரைக்கு வருகிறது.

சீமானை உள்ளே போடும் வரை ஓயமாட்டேன்; நடிகை விஜயலட்சுமி புகார்

சீமானை உள்ளே போடும் வரை ஓயமாட்டேன்; நடிகை விஜயலட்சுமி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகிறார்.

இது குறித்து சீமான் எதையும் சொல்லவில்லை.

ஆனால் சீமான் தொண்டர்கள் விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்க அவரும் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், சீமானையும், அவரது தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார்.

’’நான் நொந்து போயிருக்கேன். சீமானை தப்பிக்க விடமாட்டேன். கமிஷனர் அலுவலத்தில் சாகும்வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்.

சீமானை தூக்கி உள்ளே போடும் வரைக்கும் போராடுவேன்’’என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும் சீமான் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

More Articles
Follows