ஈழத்தமிழ் பின்னணியில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ’பயணங்கள் தொடர்கிறது’

ஈழத்தமிழ் பின்னணியில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ’பயணங்கள் தொடர்கிறது’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection storyநேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;

டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.

தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.

இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை.

ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக் கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும்.

இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.

படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் சின்னத்திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

கேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்..

2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில்நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.

அவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்..

இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும், வியாபார காரணங்களால் இப்படத்தைத் தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.

அப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், இந்த படத்தின் கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முன்வந்தார்..

மிக அழகாக, தரமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கத்தால் கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். இது தவிர கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும் இந்த படத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு இணைத்துள்ளனர்.

மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்…

விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் ராமச்சந்திரனும்.

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection story

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection story

 

கார்த்தி ரொம்ப தெளிவு; லோகேஷ் செம கில்லாடி.. ‘கைதி’ பற்றி நரேன்

கார்த்தி ரொம்ப தெளிவு; லோகேஷ் செம கில்லாடி.. ‘கைதி’ பற்றி நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam actor Narain talks about Karthi and Kaithi teamகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவருடன் ஒரு சிறு நேர் காணல்…

தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ?

தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன்.

ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம் கைதி தான் பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இந்தப்படம் இருக்கும்னு தோணுது.

கார்த்தி இந்தப்படத்தில கைதி நீங்க யாரு ?

போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் ஃபோர்ஸ். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார்.

அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன். கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார்.

அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப்போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு.

அஞ்சாதே மாதிரி போலீஸ் இன்னும் தமிழ்ல வரல. இந்தப்படத்தில அது மாதிரி மேனரிசம் எதும் இருக்கா ?

மேனரிசம் பண்றதுக்கு படத்தில நேரமே இல்ல. படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான் அவ்வளவுதான்.

ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும் நீங்க டிரெய்லர்ல பாத்திருப்பீங்க. அந்தக்கையோட அவன் என்ன பண்றான் அது தான். படம் பாருங்க .

காட்டுக்குள்ல நிறைய ஷீட் பண்ணிருக்கீங்க எப்படி இருந்தது ?

முழுக்க நைட் ஷீட் தான். சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர் வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர் தான் ரொம்ப புதுசா இருந்தது அதுவும் தமிழ்நாட்ல.

12 மணி வரைக்கும் ஓகே ஆனா அதுக்கப்புறம் 2,3 மணிக்கு குளிர் பின்னும் நாங்க கூட பரவாயில்லை ஏன்னா எங்களுக்கு 1மணி நேரம், 2மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும் ஆனா டெக்னிக்கல் டீமுக்கு அது எதுவும் இல்ல அவங்க தான் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க.

எல்லாப் படத்திலயும் ஒரு கேப் இருக்கும் நாம எஞ்சாய் பண்ணலாம் ஷுட்டே கலகலப்பா இருக்கும். இதுல அப்படி கிடையாது. படமே ராவா இருக்கும். பரபரனு இருப்பாங்க ஆனா சினிமாவ காதலிக்கிற ஒரு டீம்.

அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம் படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது. அது சில படங்கள்ல மட்டும்தான் இருக்கும்

ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு ஹீரோயின் இல்லாம நடிக்கறீங்க ?

கார்த்திக்கே கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண.

கார்த்தியோட பயணம் எப்படி இருந்தது ?

கார்த்திகூட நிறைய பேசினேன் ஒன்னா இவ்வளவு நாள் கூட இருந்தது இந்தபடத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு.

அவரோட படங்கள பார்த்தாலே தெரியும். இந்தப்படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கறதால பண்ணும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

டைரக்டர் லோகேஷ் எப்படி ?

சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள் அதத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன் அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார் அதப்பத்தி பேசுவோம்.

என்ன புதுசுன்னா எல்லாரும் ஹாலிவுட் படம் பார்ப்பாங்க. இங்க அது மாதிரி பண்ண ஆசைப்பட்டு வித்தியாசமா பண்ணுவாங்க. படம் நல்லாருக்கும். ஆனா படம் பெரிசா போகாது.

டீவியில பார்த்த நல்லாருக்கேனு சொல்லுவோம். இங்க படம் ஓட இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு அதில இன்னும் சில விஷயங்கள் சேர்க்கனும் அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.

ஷீட்டிங்கல நடந்த சுவாரஸ்யங்கள் ?

ஷீட்டிங்கே ரொம்ப கஷ்டம் முழுக்க நைட்தான் ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும் தொடர்ந்து 40, 50 நாள்னா பார்த்துகங்க. ஆனா படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும் அதனால அத மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்தி கூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

படம் பார்த்திட்டீங்களா எப்படி வந்திருக்கு ?

படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்க்கேன். இந்தப்படத்தில விஷிவலா மிரட்டிருக்கார். லோகேஷ் கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்.

அஞ்சாதே இப்பவும் பேசப்படும் படம் மிஷ்கின் கூட திரும்ப எப்ப படம் பண்ணுவீங்க ?

தெரியல. எனக்கு அஞ்சாதே 2 பண்ண ஆசை. மிஷ்கின் சார் கூட பேசிருக்கேன் அவரும் பண்ணலாம்னு சொல்லிருக்கார். அது அஞ்சாதே 2 வா இருக்கலாம் இல்ல புதுபடமா இருக்கலாம் பார்ப்போம்.

நீங்க ரொம்ப அழுத்தமான பாத்திரங்கள்லேயே நடிக்கறீங்க ஏன் ?

எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு அந்த மாதிரி ரோல் வர்றதே இல்ல. அஞ்சாதேக்கப்புறம் எல்லோரும் அதே மாதிரி ரோலோட தான் வர்றாங்க. மலையாளத்துல அத உடச்சி ரெண்டாவது படமே ஹியூமரா பண்ணிட்டேன். தமிழ்ல பத்து வருஷம் ஆகியும் அத உடைக்க முடியல. டைரகடர்ஸ் கொடுத்தா எந்த மாதிரி ரோலும் ஓகே பண்ணலாம்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?

தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம் தான் ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க பிடிக்கும். நன்றி .

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார்.

பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

Malayalam actor Narain talks about Karthi and Kaithi team

‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடகி ஸ்வாகதா இசையமைப்பாளரானார்!

‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடகி ஸ்வாகதா இசையமைப்பாளரானார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Swagathas vocal and musical delight with ADIYAATHE goes viral இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா.

அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில் அவரே நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார்.

இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இசை அமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக பரிணாமம் அடைந்துள்ளார்.

முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின் துவக்கத்தில், “நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்” என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Adiyathe Music Video Link :

https://youtu.be/rwcxpVDiIrQ

Swagathas vocal and musical delight with ADIYAATHE goes viral

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபு

மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhuகல்கி எழுதிய பிரபலமான நாவல் பெயர் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை படமாக்கவுள்ளனர்.

எனவே அனைத்து மொழிகளில் உள்ள 14 முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

மற்றொரு முக்கிய கேரக்டர்களில் பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கிட்டதட்ட ரூ.700 கோடியில் இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் மாதம் சூட்டிங் தொடங்குகிறது.

தற்போது நடிகர்களுக்கு அவர்களது கேரக்டர்களுக்கு ஏற்ப பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

மகளிருக்கான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா

மகளிருக்கான ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை நடத்தும் ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kodeeswariவெள்ளித்திரையானாலும் சரி சின்னத்திரையானாலும் சரி தன் நடிப்பு முத்திரை பதித்து வருபவர் நடிகை ராதிகா.

அண்மைக்காலமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’ . இதில் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியிருக்கிறார் ராதிகா.

பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

கௌதம் மேனனுடன் இணைந்தார் ‘பப்பி’ ஹீரோ வருண்

கௌதம் மேனனுடன் இணைந்தார் ‘பப்பி’ ஹீரோ வருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham menon an d varunவனமகன், நெருப்புடா, கோமாளி ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் வருண்,

இவர் பிரபல கல்வியாளர் ஐசரி கணேஷின் சகோதரி மகன் ஆவார்.

எனவே இவரை வைத்து பப்பி என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக்கினார் ஐசரி கணேஷ்.

இந்த திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் வருண்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

More Articles
Follows