‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

‘பத்து தல’ சூட்டிங் தள்ளிவைப்பு.; அமெரிக்கா பறந்தார் சிலம்பரசன்.; காரணம் இதுதான்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே தந்தையின் உடல் நலம் குறித்து அவரின் மகனும் நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்…
“எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தன் தந்தை டி.ராஜேந்தர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்ய  அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தையின் சிகிச்சை முடிந்து முழுவதும். குணமான பின்னரே  சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது அதுவரையில் பத்த தல படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்ப
வினோத்தின் வித்தியாசமான சிந்தனை.; அஜித் ரசிகர்கள் அப்செட்

வினோத்தின் வித்தியாசமான சிந்தனை.; அஜித் ரசிகர்கள் அப்செட்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
இந்த படம் அஜித்தின் 61வது படமாக உருவாகி வருகிறது.
நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இது உண்மையை கதையை தழுவி எடுக்கப்படுகிறதாம்.
அதாவது BANK ROBBERY (வங்கி கொள்ளை) தொடர்பான கதை என கூறப்படுகிறது.
இதில் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார்.
இது சஸ்பென்ஸ் நிறைந்த பரபரப்பான கதை என்பதால் படத்தில் பாடல்கள் இல்லையாம். இது வினோத்தின் வித்தியாசமான சிந்தனை என்றாலும் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகாமல் இருப்பார்களா ?
சினிமாவில் ரஜினி அறிமுகமான தினத்தில் ‘தலைவர் 169’ டைட்டில் அப்டேட்.; சிவகார்த்திகேயனுக்கு இதான் கேரக்டர்.!

சினிமாவில் ரஜினி அறிமுகமான தினத்தில் ‘தலைவர் 169’ டைட்டில் அப்டேட்.; சிவகார்த்திகேயனுக்கு இதான் கேரக்டர்.!

‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் இணைகிறார் ரஜினிகாந்த்.
இவர்கள் இணையும் கூட்டணிக்கு ‘தலைவர் 169’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படம் பற்றிய நமக்கு கிடைத்த முக்கிய தகவல்களை பகிர்கிறோம்.
இடுத்த ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என தகவல்.
 இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எந்திரன்’  படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ரஜினி் பயன்படுத்தவுள்ள கார் என ஓரிரு தினங்களாக ஒரு படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.
அன்றைய தினத்தில்தான் ரஜினிகாந்த் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவர் இளவயது ரஜினியாக பிளாஷ்பேக் மோஷனில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க உள்ளாராம்.
இப்படம் ஜெயிலர் மற்றும் சிறைக்கைதிகளை மையப்படுத்தி உருவாகிறதாம். எனவே அனைத்து இந்திய & அந்நிய மொழிகளுக்கு ஏற்றவாறு BOSS அல்லது JAILOR ஜெயிலர் என டைட்டில் வைக்க வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ள எங்களுடன் என்றும் இணைந்திருங்கள்…
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்

தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் இதற்கு பின் வெளியான வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.

எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் தனுஷ்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்து அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது..

முதல் கட்டமாக அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டன்னர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று சற்று முன் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஜூலை முதல் வாரத்தில் ரிலீசாகலாம் எனத் தெரிகிறது

Dhanush and 3 Heroines Character Updates on ‘Tiruchirambalam’

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

இதனையடுத்து இருவரும் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மற்றும் கோலிவுட் பிரபல நட்சத்திரங்களும் பங்குபெற்று தம்பதியினரை வாழ்த்தினர்.

இதனையடுத்து மறுநாள் அதாவது நேற்று ஜூன் 10ஆம் தேதி இருவரும் திருப்பதி சென்று திருமலையானை தரிசித்தனர்.

ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கே மணமக்களுக்கு போட்டோ ஷுட் நடத்தினர்.

கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

தற்போது இது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடத்த உள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் தேவஸ்தான நிர்வாகம்.

Newly wed couple Nayanthara and Vignesh Sivan break the rules in Tirupati

சொன்னதை செய்தார் லாரன்ஸ்.; ‘ஜெய்பீம்’ பட நிஜ பார்வதி அம்மாளுக்கு உதவினார்

சொன்னதை செய்தார் லாரன்ஸ்.; ‘ஜெய்பீம்’ பட நிஜ பார்வதி அம்மாளுக்கு உதவினார்

கடந்த வருடம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை ஊடகங்கள் மூலம் ராகவா லாரன்ஸ் அறிந்து கொண்டார்.

பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்கள்.

சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்துவந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தகவல் வெளியானது.

பார்வதி அம்மாவின் வறுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் அப்போது தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்து, அதன்படி, பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார்.

பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர். த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார் லாரன்ஸ்.

Lawrence did as he was told .; ‘Jaibhim’ helped real Parvati Ammal

More Articles
Follows