“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்!

“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” – இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa ranjith and athiyan“நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

“எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்று எளிமையாக முடித்துக் கொண்டார்.

இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது,

“இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். இன்னைக்குத் தான் நடந்தது. காரணம் பா.இரஞ்சித் சார் தான். இந்தப் படத்தோட ஜர்னில நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும். தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி. இயக்குநர் அதியன் கூட க்ளோசா பயணிக்க முடிந்தது. அவர் பொலட்டிக்கலா யோசிக்கக் கூடியவர். அதனால் எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் பேரன்பின் காதலர். கிஷோர் பற்றி நிறையா பேசலாம். நீலம் புரொடக்சன் டீம் எல்லாருமே எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க. மேலும் என்னோட டீம் எல்லாருக்குமே நன்றி.” என்றார்

அடுத்த்தாக பேசிய நடிகர் லிஜிஸ்,

“எங்கப்பாவின் ஆட்டிட்யூவை தான் இந்தப்படத்தில் நான் ஃபாலோ பண்றேன். என்னை ரஞ்சித் அண்ணனிடம் அறிமுகப்படுத்தியது அதியன் அண்ணன் தான். பரியேறும் பெருமாள் படத்தைப் போலவே இப்படத்தையும் ஊடகங்களும் மக்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்

இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது,

“நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ? அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்” என்றார்

நடிகை ஆனந்தி பேசியதாவது,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்த கம்பெனி மாதிரி. நீலம் புரொடக்சன் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும். இயக்குநர் அதியன் தோழர் நல்ல இயக்குநர் அதைவிட மிகச்சிறந்த மனிதர். இந்தப்படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய உழைப்பைப் போட்டிருக்குறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப்போகுது. நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றியடையும்” என்றார்

நடிகர் தினேஷ் பேசியதாவது,

” சக்ஸஸ் பிஸ்னெஸ் பத்திலாம் எனக்குத் தெரியாது. ஒருபடம் ஜெயித்தபிறகு பேசும்போது தான் எனர்ஜியாக இருக்கும். ஆடியோ லாஞ்சில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குநர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. இந்தப்படத்திற்காக பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி” என்றார்

இயக்குநர் அதியன் ஆதிரை பேசியதாவது,

“தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்தப்படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், “நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” என்றார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக பண்ணி இருக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்றார்

*”மேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி*

*”மேகி” படம் எனக்கு மறக்கமுடியாத அனுபவம் நடிகை நிம்மி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nimmiவிரைவில் வெளிவரவுள்ள ‘மேகி’ என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நிம்மி ,திரையில் தான் அறிமுகமான அனுபவம் பற்றிப் பேசுகிறார்:

“இந்த ‘மேகி ‘ படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது .அதற்குக் காரணம் மாடல் கோ ஆர்டினேட்டர் கோபிநாத் என்பவர் தான். பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் போது நிறைய பேக்குகளாக வருவார்கள். பலவும் போலிகளாக இருக்கும். ஆனால் எனக்கு இந்த படமே பேஸ்புக் மூலம் தான் கிடைத்தது என்பதை நான் சொல்லியாக வேண்டும் .என்னை அவர்களுக்குத் தெரியாது அவர்களை யார் என்றும் எனக்குத் தெரியாது. என்னுடைய டப்மாஷ் பார்த்து விட்டு என்னை அழைத்தார்கள் .ஒருவரிடம் திறமை உள்ளதா இல்லையா என்பது ஒரு டப்மாஷ்ஷை வைத்து முடிவு செய்ய முடியுமா?

யாருடைய குரலுக்கோ நடித்துக் காட்டும் டப்மாஷ் பார்த்தோ போட்டோக்களை வைத்தோ ஒருவரின் திறமையை முடிவு செய்ய முடியாது. நம்மிடம் உள்ள திறமை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தால் மட்டும்தான் தெரியும் .அந்த நிலையில்தான் இந்தப் படத்திற்காக நான் சென்றேன். இயக்குநர் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சாரைப் போய்ப் பார்த்தேன்.
அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது . அன்று மாலைக்குள் முடிவு சொல்லவேண்டும் என்றார்கள் .

எனக்குப் புரியவில்லை. இவ்வளவு சுலபமாக சினிமா வாய்ப்பு கிடைக்குமா? என்று சந்தேகமாக இருந்தது.நேரம் நகர்ந்து கொண்டிருந்தது .முடிவைச் சொல்லலாமா வேண்டாமா? இது உண்மையா பொய்யா என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. நான் மீண்டும் மாலை பேசியபோது நேரம் கேட்டேன் எனக்கு சிந்திக்க நேரம் வேண்டும். யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றேன். அவசரம் என்றார்கள்.சிந்திக்க இரண்டு நாள் வேண்டும் என்றேன். ஏனென்றால் சினிமாவில் போலிகள் அதிகம் .யார் படம் எடுப்பவர்கள் ?யார் எடுக்க முடியாதவர்கள்? என்று கணிப்பது கடினம் .அதனால் என் மனம் நம்ப மறுத்தது. ஆனால் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு என்றார்கள் அதையும் என்னால் நம்ப முடியவில்லை .ஒரு வழியாகச் சம்மதித்து படப்பிடிப்புக்குச் சென்று விட்டேன். இயக்குநர் கார்த்திகேயன் சார் தான் படத்தின் தயாரிப்பாளர் .படப்பிடிப்புக்குச் சென்ற முதல் நாளே நான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
இந்த படத்தை எடுத்து முடித்து வெளியிடுவீர்களா? என்பது தான்.இந்த படம் வருமா? என்று கேட்டேன்.

நான் அறியாமையில் அப்போது கேட்டிருந்தாலும் அப்படி நான் கேட்டிருக்க கூடாது தான். இந்த கேள்வி அவரை அதிர்ச்சியூட்டியிருக்க வேண்டும் .ஆனாலும் அவர் அதை எதிர்கொண்டு விரைவில் முடித்து 22ஆம் தேதி வெளியிடுவோம் என்று தேதி சொன்னார் .அதன்படி அடுத்தடுத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன .எனக்கு நம்பிக்கை துளிர்த்தது.

படப்பிடிப்புக்குக் கொடைக்கானல் சென்றோம் .காலநிலை, உணவு, மலைப் பகுதி என்பதால் அந்த சூழ்நிலையும் பலருக்கும் ஒத்துவரவில்லை. பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். இடம், உணவு, சூழ்நிலை எல்லாம் ஒத்துவராத போதும் ஒரு நல்ல ஒருங்கிணைப்புடன் அனைத்தையும் சமாளித்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் சார்.

இந்த அனுபவம் எனக்கு நல்ல பாடத்தையும் சினிமா பற்றிய நல்ல புரிதலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது .

‘ மேகி’ஒரு பேய்ப் படம் என்றாலும் அனைவரும் பார்க்கும்படியாக இருக்கும் .விறுவிறுப்பு, காமெடி, திகில் எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கும் .

இந்த நேரத்தில் முதல் படத்திலேயே இவ்வளவு விரைவாக படத்தை எடுத்து இவ்வளவு விரைவாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இப்போது அந்தக் கேள்வி கேட்டதை நினைத்து வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் சொன்னதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள் .இப்படி என்னை உணர வைத்த அனுபவம் தான் மேகி படம் .” இவ்வாறு நடிகை நிம்மி கூறினார்.

இமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்

இமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeruவேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கச்சிதமான முறையில் திட்டமிட்டு, அதற்கு முறையான செயல்வடிவம் கொடுத்து, 2019 ஆம் ஆண்டு தனது ஒவ்வொரு தயாரிப்பிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் இந்த நிறுவனத் தயாரிப்புகள் வரிசையாக வெளிவர இருக்கின்றன. இவற்றி்ல் ரத்தினசிவா இயக்கத்தல் ஜீவா நடித்த ‘சீறு’ படமும் ஒன்று. நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய முழுமையான வணிக ரீதியிலான படம் இது.
‘சீறு’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகிய இருவரையும் இந்தப் படத்தில் பாட வைத்திருக்கிறார். விவேகா எழுதிய இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. முழுமையடைந்த இந்தப் பாடல் குறித்து படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் ‘சீறு’ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ரியா சுமன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

2019ஆம் ஆண்டு ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ என்று ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்தது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ இம்மாதம் 29ஆம் தேதி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிடுகிறது. அதே சமயம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’, கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் வருண் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘ஜோஸ்வா’ ஆகிய படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ இன்டர்நேஷனல் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரெஜினா, ஸ்ரத்தா, சிருஷ்டி.. விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

ரெஜினா, ஸ்ரத்தா, சிருஷ்டி.. விஷாலுக்கு மூன்று ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஆக்சன் படத்தை தொடர்ந்து சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் என்பவர் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே என மூன்று நாயகிகள் நடிக்கிறார்களாம்.

காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

கொசு மருந்து மெஷினுக்கும் நன்றி சொன்ன கைதி டைரக்டர்

கொசு மருந்து மெஷினுக்கும் நன்றி சொன்ன கைதி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaithi stillsலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசானது.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த இந்த படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லை என்றாலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களுக்கு இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

கைதி வெற்றிகரமாக 25வது நாள்

இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி

அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி என கூறியுள்ளார்.

கைதி படம் க்ளைமாக்ஸில் மெஷின் கன் பைட் ஒன்று இருக்கும். அதுதான் கொசு மருந்து அடிக்கும் மெஷின் போல….

வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய்சேதுபதி & விவேக் கூட்டணி

வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய்சேதுபதி & விவேக் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivekவிஜய்சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை வெங்கட கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.

விஜய்சேதுபதியுடன் விவேக் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows