முதன்முறையாக அரசு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை

arts collegeகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சினிமா தியேட்டர்கள், சினிமா சூட்டிங், ஜிம், பார்க் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளன.

தற்போது வரை +2 மற்றும் 10 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

விரைவில் இது வழங்கப்பட உள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவரை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறவும் மாணவர் சேர்க்கைக்காகவும் நேரடியாக கல்லூரிகளுக்கு மாணவர்கள் வருவது வழக்கம்.

ஆனால் கொரோனோ தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரிகளில் கூடுவதை தவிர்க்க முதன்முறையாக ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாம்.

இதற்கான மென்பொருள் ஒன்றை வடிவமைக்கும் பணியில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பானைகள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிய வந்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post