புது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு

V1 movie posterஒவ்வொரு படத்திற்க்கும் புதுப்புது விளம்பர யுக்தியை வெளிபடுத்தி அதில் வெற்றி பெறுவது என்பது சுலபமான விஷயமில்லை. அதிலும் முற்றிலும் புதுமுகங்கள் உள்ள படமென்றால் விளம்பர யுக்திகான மெனக்கெடல் அதிகமாகவே இருக்க வேண்டும். அந்த சவாலான பரிட்சையில் “வி 1″ படக்குழு சாதுர்யமாக வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் கதை இன்வஸ்டிகேட்டிவ் திரில்லர் என்பதால் அதையே கருவாக எடுத்துகொண்டு தங்கள் “வி 1″ போஸ்டர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிர் வைத்தனர். குழுந்தை பாலியல் விழிப்புணர்வை தூண்டும் வகையில் அந்த போஸ்டரில் 8 எழுத்துக்கள் மறைந்துள்ளது என்றும் அந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ஒரு வார்த்தை உருவாகும் என்றும் கூறியிருந்தனர்.

சரியான விடையை தங்கள் டிவிட்டர் அக்கௌண்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குலுக்கல் முறையில் வெற்றி பெறுபவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அளிக்க படும் என்று கூறியிருந்தனர். விடையை கண்டறிந்த பலர் அந்த சரியான பதிலை அனுப்பிவைத்தனர். “Bad Touch” என்ற பதிலை அனைவரும் டிவிட்டரில் பதிவு செய்ய, அந்த வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிகழ்வு “வி 1″ படக்குழுவிற்கு பெறும் மகிழ்ச்சியை அளித்தது மட்டுமன்றி தங்களின் விளம்பர யுக்தி வெற்றி பெற்றதை எண்ணி அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் தங்களது முதல் போஸ்டரிலும் இது போன்ற புதிர் வைத்து குலுக்கல் முறையில் வென்றவருக்கு “வி 1″ படக்குழுவினர் ஏ.சி பரிசாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள படக்குழுவினர் “வி 1″ டிசம்பர் 6 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் வெளியாகவுள்ளது.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
இசை – ரோனி ரப்ஹெல்
படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
கலை – VRK ரமேஷ்
SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Overall Rating : Not available

Related News

Latest Post