நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”

New Project (7)என்னமோ ஏதோ படத்தில் துவங்கி நாரதன், அரவிந்த்சாமி உடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள், மற்றும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல் தற்போது ஆரோவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது, அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி வல்கராவோ,முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்,நான் சினிமா துறையை மிகவும் விரும்பிவந்தேன் அதோடு என்னோடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்..

Overall Rating : Not available

Latest Post